விஷ ஊசி போட்டு கணவரைக் கொல்ல முயற்சி – சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 3 திருமணம் செய்த மனைவி கைது

திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் அருகே தோட்டத்துபாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி (52). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லைச் சேர்ந்த தேவி (35) என்பவரை திருமணம் செய்தார். தேவி, சுப்பிரமணியிடம் இங்கிருக்கும் சொத்தை விற்றுவிட்டு திண்டுக்கல்லில் சென்று வாழலாம் எனத் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு அவர் சம்மதிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால், கடந்த 15-ம் தேதி சுப்பிரமணியின் காலில் தேவி விஷ ஊசி செலுத்தி உள்ளார். இதில், சுயநினைவை இழந்த சுப்பிரமணியை, ஈரோடு தனியார் மருத்துவமனையில் உறவினர்கள் … Read more

ருத்ரதாண்டவம் ஆடிய டி காக்! ரஷித் கான் அணியை புரட்டியெடுத்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்

தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் மும்பை கேப்டவுன் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீழ்த்தியது. டூசன் – டேவிட் பார்ட்னர்ஷிப் டர்பனின் கிங்ஸ்மெட் மைதானத்தில் நடந்த 23வது போட்டியில் ரஷித் கானின் மும்பை கேப்டவுன் மற்றும் டி காக்கின் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்கள் எடுத்தது. வான் டர் டூசன் 43 ஓட்டங்களும், டிம் டேவிட் 33 … Read more

ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்த்து ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஜி.வி. பிரகாஷ் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி…

இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின் அதற்காக தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம் எனக் கூறி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் 2020 ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது படைப்புகளுக்கு, 6 கோடியே 79 லட்ச ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என்று 2019 ம் ஆண்டு ஜி.எஸ்.டி., ஆணையர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து நீதிமன்றத்தில் ஏ.ஆர். ரஹ்மான் மனு அளித்திருந்தார். அதேபோல், 1.84 கோடி … Read more

ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக வேட்புமனு தாக்கல் ஒத்திவைப்பு

சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக வேட்புமனு தாக்கல் ஒத்திவைத்துள்ளது. அதிமுக வேட்பாளர் தென்னரசு இன்று பிற்பகல் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் தாக்கல் செய்ய இருந்த நிலையில் வேட்புமனு தாக்கல் 7ம் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கினால் மேகதாதுவில் அணை கட்ட அரசு தயார் : கர்நாடக முதல்-மந்திரி பேட்டி

பெங்களூரு, கர்நாடக அரசு கர்நாடகம் – தமிழ்நாடு எல்லையில் ராமநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட முடிவு செய்து அதற்காக முயற்சித்து வருகிறது. இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அடிக்கடி டெல்லி சென்று மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் பெங்களூருவில் … Read more

`பலருக்கு சம்பளம் வரவில்லை’ – அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் வேதனை

“அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படவில்லை” என்ற புகார் பல மாவட்டங்களில் எழுந்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளைப் போல அரசு உதவிபெறும் பள்ளிகள் பல செயல்பட்டு வருகின்றன. வழக்கமாக மாதத்தின் கடைசி நாளில் ஒவ்வொரு ஆசிரியரின் வங்கிக் கணக்கில் மாத ஊதியம் வரவு வைக்கப்படும். ஆனால், இந்த மாதம் பிறந்து 3 நாள்கள் ஆகியும் இதுவரை பலருக்கும் ஊதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்பதால் பல மாவட்டங்களில் … Read more

மிரட்டலாக கோல் அடித்த ரியல் மாட்ரிட் வீரர்.. வேண்டுமென்றே கால்களை பலமாக தாக்கிய எதிரணி வீரர்

ரியல் மாட்ரிட் அணி வீரரை தாக்கிய வாலென்சியா வீரர் கேப்ரியல் பாலிஸ்டா உடனடியாக வெளியேற்றப்பட்டார். ஒரே ஷாட்டில் கோல் ஸ்பெயினின் சான்டியாகோ பெர்னாபே மைதானத்தில் நடந்த கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் மற்றும் வாலென்சியா அணிகள் மோதின. முதல் பாதி கோல்கள் விழாததால் 0-0 என்று முடிந்தது. அதன் பின்னர் ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் ரியல் மேட்ரிட் அணியின் மார்கோ அசென்சியோ, தூரத்தில் இருந்து ஒரே ஷாட்டில் கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து 54வது நிமிடத்தில் வினி … Read more

மூத்த இயக்குனர் சண்முகப்பிரியன் சென்னையில் காலமானார்

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் சண்முகப்பிரியன் (71), சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் நேற்று காலமானார். ஒருவர் வாழும் ஆலயம், பாட்டுக்கு நான் அடிமை, மதுரை வீரன் எங்கசாமி, உதவும் கரங்கள் ஆகிய படங்களை இவர் இயக்கி உள்ளார். தவிர, ‘வெற்றிவிழா’, ‘பிரம்மா’, ‘சின்ன தம்பி பெரிய தம்பி’ உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். இவரது மறைவுக்கு தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த ஏராளமானோர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி!

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது. சென்னை அண்ணா சிலை அருகில் தொடங்கி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் வரை பேரணி நடைபெறுகிறது.