ஆசையோடு வந்த கனடா மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி! – ஒரு கோடி ரூபாய் இழந்தது எப்படி?

ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்தைச் சேர்ந்தவர் பச்சியப்பன். இவர் கடந்த 24.4.2022-ம் தேதி ராயப்பேட்டை குற்றப்பிரிவில் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, “நான் கனடாவில் வசித்து வருகிறேன். எனக்கும் சேலத்தைச் சேர்ந்த வித்யாவுக்கும் திருமணம் நடந்தது. எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், எனக்கும் என் மனைவிக்கும் இடையே கடந்த 2020-ம் ஆண்டு கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அதனால் நான் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள போவதாக என் மனைவியிடம் தெரிவித்துவிட்டு திருமண தகவல் … Read more

உக்ரைன் மூதாட்டிக்கு உதவுவது போல ரஷ்ய வீரர் கொடுத்த பால் போத்தல்: உள்ளே இருந்த விடயத்தைக் கண்டு திகிலடைந்த குடும்பத்தினர்

உக்ரைனிடம் நேரடியாக மோதிப்பார்த்து வெல்ல முடியாத ரஷ்ய வீரர்கள் இப்போது புதிய யுக்திகளைக் கையாளுகிறார்கள். ஆம், உக்ரைன் மக்களுக்கு மனிதநேய உதவிகள் செய்வது போல நடிக்கத் துவங்கியுள்ளார்களாம் அவர்கள். இந்நிலையில், உக்ரைனிலுள்ள Kherson நகரில் ஆங்காங்கு ரஷ்யப் படைவீரர்கள் நல உதவிகள் வழங்கும் காட்சிகள் புதிதாக கண்ணில் படத் துவங்கியுள்ளன. அப்படி ஒரு ரஷ்யப் படைவீரர் கொடுத்த பால் கார்ட்டனை (milk carton) வாங்கி வந்திருக்கிறார் ஒரு உக்ரைன் மூதாட்டி. ஆனால், அந்த கார்ட்டன் மூடி சரியாக … Read more

500 பெண் ஆட்டோ  ஓட்டுநர்களுக்கு தலா ரூ.1லட்சம் மானியம் – 1லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு! அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு…

சென்னை: 500 பெண் ஆட்டோ  ஓட்டுநர்களுக்கு புதிய ரிக்ஷா வாங்க தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என்றும், 1லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாப்பு வழங்கப்படும் என்ற  சட்டப்பேரவையில் அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று எரிசக்தி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகிறது. இதற்கு பதிலளித்து அமைச்சர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் எரிசக்தித் துறை, தொழிலாளர் நலத்துறை, … Read more

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு- அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: டாஸ்மாக் மூலம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டில் ரூ 2,200 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்க்கப்பட்டுள்ளது  2020-21ஆம் ஆண்டில் மொத்தமாக ரூ 33,811 கோடி டாஸ்மாக் மூலம் வருவாய் கிடைத்துள்ளது அதன்படி நடப்பு ஆண்டில் மார்ச் மாதம் வரை மட்டும் ரூ 36,013 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் டாஸ்மாக் சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு ரூ .500 … Read more

அயோத்தியா மண்டபம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அரசு விசாரணை நடத்தலாம்: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அயோத்தியா மண்டபம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அரசு விசாரணை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விசாரணை அடிப்படையில் அரசு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அயோத்தியா மண்டப நிர்வாகத்தை கையகப்படுத்திய அறநிலைய உத்தரவை எதிர்த்த மேல் முறையீடு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்து அறநிலையத்துறை உத்தரவை உறுதி செய்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யப்போவதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

மத்திய அரசு வேண்டி, விரும்பி அழைக்கும் 3 நிறுவனங்கள்.. எதற்கு தெரியுமா..?!

இந்தியா மிகப்பெரிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடாக உருவெடுக்க வேண்டும் என்பதில் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக இருக்கும் நிலையில், மேக் இன் இந்தியா திட்டங்கள் தோல்வி அடைந்தாலும் தற்போது சர்வதேச நாடுகளில் டிமாண்ட் அதிகரித்துள்ளதால் புதிதாக உருவாகி வரும் வாய்ப்புகளைப் பிற நாடுகளுக்குச் செல்லும் முன்பு இந்தியா கைப்பற்ற வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு தற்போது 3 நிறுவனங்களிடம் இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைக்கத் தீவிரமாக ஆலோசனை … Read more

`ஏலியன்ஸ் கடத்திக்கிட்டு போயிடுமோனு பயமா இருக்கு!' – வீட்டுக்குள் நாள்களை கழிக்கும் 51 வயது பெண்

ஏலியன் பயத்தால் தனது வாழ்க்கையின் பெரும்பாலான நாள்களை வீட்டிற்குள்ளேயே கழித்து வருகிறார், இங்கிலாந்தை சேர்ந்த சாச்சா கிறிஸ்டி. 51 வயதான இவர், இதுவரை 9 UFO-க்கள் வானில் பறக்கும் வினோதமான நிகழ்வுகளைக் கண்டுள்ளதாகத் தெரிவித்தார். முதன் முறையாக ஏழு வயதில் இதைக் கண்டாராம். அதைத் தொடர்ந்து வாழ்வின் பல சந்தர்ப்பங்களில் இதே போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து இவருக்கு நடந்ததாகத் தெரிவித்துள்ளார். Cloud `மூன்று பறக்கும் தட்டு வீடியோக்களை உறுதிப்படுத்திய அமெரிக்கா..!’ -மீண்டும் `ஏலியன்ஸ்’ விவாதங்கள் சிறு வயதில் … Read more

தன்னை விட 28 வயது குறைவான அழகிய பெண்ணை மணக்கும் 66 வயது பிரபலம்! புகைப்படங்கள்

பிரபல கிரிக்கெட் வீரர் அருண்லால் தன்னை விட வயதில் மிக குறைவான பெண்ணை இரண்டாவது திருமணம் செய்கிறார். இந்திய அணிக்காக 16 டெஸ்ட் மற்றும் 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் அருண் லால்(66). தற்போதுமேற்குவங்க ரஞ்சி அணியின் பயிற்சியாளராக உள்ளார். இவர் தனது நீண்ட நாள் நண்பரான புல் புல் சாஹாவை மே 2 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவுள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. அருண் லால் முதல் முறை … Read more

விளையாட்டு சங்கத்தில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை?! உயர்நீதி மன்றம் கடும் காட்டம்

சென்னை: விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை என சென்னை உயர்நீதி மன்றம் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளது. தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்கத் தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கம் அனுமதி மறுத்ததை எதிர்த்து வட்டெறிதல் வீராங்கனை நித்யா சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரணை நடத்தி வந்தார். அதைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் விசாரணையைத் தொடர்ந்து வழங்கிய தீர்ப்பில், விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக விளையாட்டு வீரர்கள் மட்டுமே … Read more