அஜித், விஜய் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் காலமானார்!

பிரபல திரைப்பட நடிகர் சலீம் கவுஸ் தனது 70வது வயதில் காலமானார். தமிழில் வெற்றிவிழா, சின்ன கவுண்டர், ரெட், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சலீம் கவுஸ். இவர் ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சலீம் கவுஸ்.இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சலீம் கவுஸ் இன்று உயிரிழந்தார்.  அவரின் மறைவு ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து சலீம் கவுஸ் மறைவிற்கு திரையுலகினரும், … Read more

இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் தேர்வு… இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸை நியமித்துள்ளது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB). கேப்டன் பதவியில் இருந்து ஜோ ரூட் இந்த மாத தொடக்கத்தில் விலகியதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் 81 வது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் பென் ஸ்டோக்ஸ். ECB இன் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பின்படி, இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட்டின் நிர்வாக இயக்குநர் ராப் கீயின் பரிந்துரையைத் தொடர்ந்து ECB இடைக்காலத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி இந்த நியமனத்திற்கு ஒப்புதல் … Read more

ஆபரேசன் கஞ்சா 2.0: ஒரு மாதத்தில் மட்டும் 3562 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: தமிழக டிஜிபி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- தமிழகம் முழுவதும் 28.03.2021 முதல் ஆபரேசன் கஞ்சா வேட்டை 2.0 நடந்து வருகிறது. கடந்த 31 நாட்களில் 2423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 3562 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பயன்படுத்திய 197 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் 6319 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, 44.9 டன் குட்கா மற்றும் 113 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சிறப்பு நடவடிக்கையில் பல … Read more

5,000 ஏக்கரில் மல்பெரி ரகங்களை நடவுசெய்யும் விவசாயிகளுக்கு ரூ.5.25 கோடியில் ஊக்கத்தொகை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

சென்னை: 5,000 ஏக்கரில் மல்பெரி ரகங்களை நடவுசெய்யும் விவசாயிகளுக்கு ரூ.5.25 கோடியில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்திருக்கிறார். 500 பட்டு விவசாயிகளுக்கு ரூ.6 கோடியில் தனி பட்டு புழு வளர்ப்பு மனை அமைக்க உதவித்தொகை வழங்கப்படும். ரூ.5.25 கோடியில் 1000 பட்டு விவசாயிகளுக்கு நவீன பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்கள், பண்ணை உபகரணங்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் குறிப்பிட்டார்.

குறுகிய நேரத்தில் தீவிர தாக்குதலுக்கு தயாராக வேண்டும்: இந்திய விமானப்படை தளபதி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: குறைந்த நேரத்தில் அதிதீவிர தாக்குதலுக்கு தயாராக இருக்க வேண்டும் என இந்திய விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி தெரிவித்துள்ளார். டில்லியில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற இந்திய விமானப்படை தளபதி சவுத்ரி பேசியதாவது: தற்போதைய உலக அரசியல் சூழல்நிலைகளில், எந்த நடவடிக்கைக்கும் விமானப்படை தயார் நிலையில் இருக்க வேண்டியுள்ளது. குறிப்பாக ஒரு குறுகிய நேரத்தில் அதிதீவிர தாக்குதல்களுக்கு இந்திய விமானப்படை தயாராக இருக்க வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது. நமது படை … Read more

மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 263.68 புள்ளிகள் உயர்வு

மும்பை, மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு ஏற்றத்துடன் காணப்பட்டன.  ஆசியாவின் மிக பழமையான மற்றும் உலகின் 10வது பழமையான என குறிப்பிடப்படும் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 263.68 புள்ளிகள் அல்லது 0.46 சதவீதம் உயர்ந்து 57,083.07 புள்ளிகளாக உள்ளன. இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 82 புள்ளிகள் அல்லது 0.48 சதவீதம் உயர்ந்து 17,120.40 புள்ளிகளாக உள்ளன.  இதனால் பங்கு சந்தைகளில் முதலீடு செய்து … Read more

முடிவை மாற்றிய இந்தோனேசியா.. இந்தியாவுக்கு நெருக்கடி ஆரம்பம்..!

உலகின் மிகப்பெரிய பாமாயில் ஏற்றுமதி நாடான இந்தோனேசியா எடுத்துள்ள முக்கியமான முடிவால் இந்தியாவில் முக்கியச் சமையல் பொருட்களில் ஒன்றான பாமாயில் விலை தாறுமாறாக உயர உள்ளது. தங்கம் விலையை மீடியம் டெர்மில் நிர்ணயிக்கும் 5 முக்கிய காரணிகள்.. கவனமா இருங்க! தன் நாட்டின் நலனுக்காக இந்தோனேசியா மீண்டும் தனது முடிவை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தோனேசிய அதிபர் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ கடந்த வார வெள்ளிக்கிழமை பாமாயிலின் உள்நாட்டு விலையைக் கட்டுப்படுத்தவும், போதுமான எண்ணெய் தன்நாட்டு மக்களுக்குக் … Read more

“கட்டியது கலைஞர்; சுண்ணாம்பு அடித்து திறந்து வைத்ததுதான் நீங்கள்!" – சட்டசபையில் மா.சுப்பிரமணியன்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், “அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில்தான் டவர் 1,2,3 ஆகிய கட்டடங்கள் கட்டப்பட்டன. அதில் அதிநவீன சிகிச்சைகளும் வழங்கப்பட்டன. அ.தி.மு.க நிர்வாகிகள் தீ விபத்து சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உடன் சம்பவ இடத்துக்குச் சென்று மக்களுக்கு உதவி செய்தனர்” என்றார். எடப்பாடி பழனிசாமி இந்த நிலையில், ராஜீவ் காந்தி … Read more

ரஷ்யாவின் ரூபிளுக்கு மாறும் உக்ரைனின் முக்கிய நகரம்! வெளியான அறிவிப்பு

 உக்ரைன் தெற்கில் உள்ள கெர்சன் நகரம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ரஷ்யாவின் ரூபிள் நாணயத்தை பயன்படுத்த தொடங்கும் என ரஷ்ய செய்தி நிறுவனமான RIA தெரிவித்துள்ளது. கெர்சன் பிராந்தியத்தின் ராணுவ-சிவில் நிர்வாகம் என்று தன்னைக் காட்டிக்கொண்ட ரஷ்ய-சார்பு குழுவின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி RIA செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கு நான்கு மாதங்கள் ஆகும் எனவும், அதுவரை உக்ரைனின் ஹிரைவ்னியா உடன் ரூபிள் புழக்கத்தில் இருக்கும் என Kirill Stremousov தெரிவித்துள்ளார். சுவிஸின் ஜெனிவாவை விட்டு வெளியேற … Read more

சென்னை அருகே பனந்தூரில் புதிய விமான நிலையம்… மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சிந்தியா தகவல்

சென்னை அருகே பனந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலைய பயன்பாட்டு நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் சென்னை அருகே அமைய இருக்கும் க்ரீன்பீல்ட் விமான நிலைய பணிகள் குறித்தும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எழுப்பிய கேள்விக்கு சிந்தியா பதிலளித்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “மதுரை விமான நிலையத்தில் கட்டுமான பணிகள் … Read more