ராஜஸ்தானில் 1,500 கோசாலை: ரூ.1,377 கோடி ஒதுக்கீடு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 1,500 கோசாலைகள் கட்டுவதற்கு, பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.1,377 கோடியை முதல்வர் அசோக் கெலாட் ஒதுக்கி உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் அசோக் கெலாட் பதவி வகிக்கிறார். மாநிலத்தில் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் ஒரு கோ சாலை அமைக்கப்படும் என்று அரசு அறிவித்தது. மேலும், 2022 – 2023 பட்ஜெட்டிலும் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில், மாநிலத்தில் 1,500 கிராம பஞ்சாயத்துகளில் தலா ஒரு கோ சாலைகள் கட்டுவதற்கு நேற்று உத்தரவிடப்பட்டது. … Read more

ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சி.எஸ்.ஐ.எப் வீரர்கள் தற்கொலை

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சி.எஸ்.ஐ.எப் வீரர்கள் தற்கொலை செய்து கொண்டார். சத்தீஸ்கரை சேர்ந்த சிந்தாமணி தூக்கிட்டும், உ.பி.யை சேர்ந்த விகாஸ் சிங் துப்பாக்கியால் சுட்டும் தற்கொலை செய்து கொண்டனர்.  24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 பேர் தற்கொலையால் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாய்களுக்கு உணவளித்த பெண் மீது மின்னல் வேகத்தில் மோதிய கார் – அதிர்ச்சி சிசிடிவி காட்சி!

சண்டிகர் மாநிலத்தில் தெருவில் நாய்களுக்கு உணவளித்துக்கொண்டிருந்த 25 வயது இளம் பெண் மீது, ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் வேகமாக ஓட்டி வந்த எஸ்யூவி கார் ஒன்று மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகர் மாநிலம் செக்டர் 51 பகுதியைச் சேர்ந்தவர் தேஜஸ்விதா கௌசல். 25 வயதான இவர், கட்டிடக்கலை படிப்பை முடித்துவிட்டு, தற்போது மத்திய அரசின் குடிமைப் பணிக்கான தேர்வுக்கு தயாராகி வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக இரவு … Read more

ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் துருக்கியில் மரணம்; கடைசி ஆசைப்படி ஹைதராபாத்தில் உடல் அடக்கம்..!

ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் முக்காராம் ஜா என அறியப்படும் மீர் பர்காத் அலி கான் உடல்நலக் குறைவால் துருக்கியில் காலமானார். அவருக்கு வயது 80. அவருடைய கடைசி ஆசையின்படி, ஹைதராபாத்தில் அவரது உடல் நாளை அடக்கம் செய்யப்படுகிறது. துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் வசித்து வந்தவர் மீர் பர்காத் அலி கான். முக்காராம் ஜா என பிரபல பெயரால் அறியப்படும் இவர், ஹைதராபாத்தின் ஏழாம் நிஜாம் என அழைக்கப்படும் மீர் உஸ்மான் அலி கான் என்பவரின் பேரன் … Read more

ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்பு!….

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்கலாம் வரும் 2024- ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்னோட்டமாக கர்நாடகம் உள்பட 9 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களும் நடக்க உள்ளன.இந்த தேர்தல்களைச் சந்திப்பதற்கு, மத்தியில் ஆளும் பா.ஜ.க. தயாராக தொடங்கிவிட்டது.   இதையொட்டிய யுக்திகள், திட்டங்கள் வகுப்பதற்காக அந்த கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற வீதியில் … Read more

திட்டமிட்டபடி கங்கா விலாஸ் பாட்னாவை அடைந்தது – அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டிற்கு மத்திய அமைச்சர் பதிலடி

லக்னோ: “நல்ல விஷயங்களில் ஏதாவது தவறு நடக்க வேண்டும் என்று உங்களைப் போன்றவர்கள் கடவுளிடம் இரவு பகலாக வேண்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று கங்கா விலாஸ் குறித்த அகிலேஷ் யாதவின் குற்றச்சாட்டிற்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பதிலடி கொடுத்துள்ளார். கடந்த வாரத்தில் பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து, உலகின் நீளமான நீர்வழித்தட பயண கப்பலான எம்வி கங்கா விலாஸ் சொகுசு கப்பலின் பயணத்தை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்த கப்பல் பயணம் குறித்து கருத்து … Read more

ஆபரேஷன் லோட்டஸ் ஒர்க் ஆகாது… ஏன் தெரியுமா? டிகே சிவக்குமார் தடாலடி!

கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. தேர்தல் அறிக்கைகள் மும்முரமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசை ஓடவிட்டு ஆட்சிக் கட்டிலில் அமர காங்கிரஸ் வியூகங்களை வகுத்து வருகிறது. பிரியங்கா பிரச்சாரம் இதற்காக பிரியங்கா காந்தி பிரச்சார களத்தில் குதித்துள்ளார். ஆனால் அவரது முந்தைய தேர்தல் பிரச்சாரங்கள் பெரிதாக … Read more

கோலி, தோனி மகள்கள் குறித்து அவதூறு ஒன்னு திருந்துங்க… அல்லது ஜெயிலுக்கு போவீங்க! மகளிர் ஆணைய தலைவி காட்டம்

புதுடெல்லி: விராட் கோலி மற்றும் எம்.எஸ்.தோனியின் மகள் குறித்து அவதூறு கருத்துகள் வெளியானதை கண்டித்த டெல்லி மகளிர் ஆணைய தலைவி, சம்பந்தப்பட்டவர்கள் திருந்த வேண்டும் அல்லது அவர்கள் சிறை செல்ல தயாராக வேண்டும் என்று கூறினார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி மற்றும் எம்.எஸ்.தோனியின் மகள்கள் குறித்து சமூக ஊடகங்களில் சிலர் ஆபாசமான கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். இவ்விவகாரம் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மீது … Read more

ராகுல் காந்தியை கட்டிப்பிடிக்க முயன்ற நபர்: இந்திய ஒற்றுமை யாத்திரையில் பாதுகாப்பு மீறல்?

புதுடெல்லி: தற்போது பஞ்சாப் மாநிலத்தில் நடந்து வரும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை செவ்வாய்கிழமை காலையில் ஹோசியார்பூர் தாண்டா என்ற இடத்தில் இருந்து தொடங்கியது. யாத்திரையின்போது கூட்டத்தில் ராகுல் காந்தியை நோக்கி ஓடிவந்த ஒருவர், திடீரென ராகுல் காந்தியை கட்டிப்பிடிக்க முயன்றார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை அப்புறப்படுத்தினர். இது குறித்து பதிவான வீடியோவில், ஆரஞ்சு வண்ண உடை அணிந்து வந்த நபர் ஒருவர் கூட்டத்தில் முன்னால் நடந்து கொண்டிருக்கும் ராகுல் … Read more

பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் வரை நீட்டிப்பு: அமித்ஷா அறிவிப்பு

டெல்லி: பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜே.பி நட்டாவின் பதவிக்காலம் இன்னும் 2 மாதங்களில் முடிய இருந்த நிலையில் 2024 ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜேபி நட்டாவின் பதவிக்காலம் ஜூன் 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது: என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.