திருவனந்தபுரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளித்து தற்கொலை-கடன் தொல்லையால் பரிதாபம்

திருவனந்தபுரம் : திருவனந்தபுரம் அருகே கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.திருவனந்தபுரம்  அருகே கடினம்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேசன் (48). இவரது மனைவி சுலஜா  குமாரி (46). இந்த தம்பதியின் ஒரே மகள் ரேஷ்மா (22). துபாயில்  பணிபுரிந்து வந்த ரமேசன் நேற்று முன்தினம் ஊருக்கு வந்திருந்தார். அவருக்கு கடன் தொல்லை  இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 3 பேரும்  வழக்கம்போல வீட்டில் … Read more

ராமர் கோயிலில் தரிசனம் செய்ய ராகுல் காந்திக்கு அழைப்பு.!

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பிரதமர் நரேந்திர மோடி பூமி பூஜையில் கலந்து கொண்டார். அதன்படி, ராமர் கோவில் கட்டுவதற்கு ராம ஜென்ம பூமி அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, அதன் மூலம் கட்டுமானப் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, கடந்த நவம்பர் மாதம் பேட்டி அளித்த உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் … Read more

விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த மும்பை நபர் கைது: வலைதளம், கிரெடிட்கார்டு பயன்படுத்திய போது போலீசில் சிக்கினார்..!!

டெல்லி: விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். நியூயார்க்கிலிருந்து  டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் கடந்த நவம்பர் மாதம்  பயணித்த சங்கர் மிஸ்ரா சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்திருக்கிறார். இதுகுறித்து அந்த பெண் புகார் அளித்த நிலையில் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடிவந்தனர். மேலும் அவரை காணவில்லை என்று லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து விமான … Read more

அரசியலில் இருந்து எஸ்.எம்.கிருஷ்ணா ஓய்வு

பெங்களூரு: கர்நாடகாவை சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா 50 ஆண்டுகளுக்கும் மேலாக‌ காங்கிரஸில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். கடந்த 2019-ல் காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தார். எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘எனக்கு 90 வயதாகிறது. இனி அரசியலில் தீவிரமாக செயல்பட முடியாது. அதனால் முழு நேர அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். ஆனாலும் அரசியலில் இருந்து முழுமையாக விலகவில்லை. பாஜக தலைவர்கள் விரும்பினால் உரிய அரசியல் ஆலோசனைகளை வ‌ழங்குவேன். பாஜகவில் … Read more

2024க்குள் மாவோயிஸ்ட்கள் முழுவதுமாக ஒழிக்கப்படுவார்கள்; அமித்ஷா உறுதி.!

ஆயுதப் போராட்டத்தின் மூலமாக நாட்டின் அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது மாவோயிஸ்ட்களின் லட்சியம். நக்சலைட் என்ற பெயரில் இயங்கிவந்தவர்கள்தான் தற்போது மாவோயிஸ்ட்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆந்திரா, தெலங்கானா, சத்தீஸ்கர், ஒடிசா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்ட்களின் செயல்பாடுகள் அதிகம். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, குண்டுவைத்து அவரைக் கொலை செய்வதற்கு நக்சலைட்கள் முயன்றனர். காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் மீது ஆயுதங்களைக்கொண்டு தாக்குவதை வழக்கமாகக்கொண்டிருந்தனர். கடந்த … Read more

பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: குற்றவாளி பெங்களூருவில் கைது.! அமெரிக்க பதவியும் பறிபோனது

புதுடெல்லி: விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாக குற்றவாளியை பெங்களூருவில் போலீசார் கைது செய்தனர். மேலும், அவரை பணியில் இருந்து அவரது நிறுவனம் நீக்கியுள்ளது. நியூயார்க்கில் இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ெடல்லி போலீசார் கூறுகையில், ‘விமானத்தில் தகாத முறையில் நடந்து கொண்ட சங்கர் மிஸ்ராவை பெங்களூருவில் கைது செய்துள்ளோம். அவர் மீது 294 (பொது … Read more

அதைச் சொல்ல நீங்கள் ராமர் கோயில் பூசாரியா? – அமித் ஷா பேச்சுக்கு மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் 

பானிபட்: வரும், 2024 ஆம் ஆண்டு ஜன.1 ம் தேதிக்குள் அயோத்தியில் ராமர் கோயில் தயாராகிவிடும் என்ற அமித் ஷாவின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அதைச் சொல்ல நீங்கள் என்ன ராமர் கோயில் பூசாரியா என்று கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த வியாழக்கிழமை திரிபுராவில் ஜன விஸ்வாஸ் ரத யாத்திரையை தொடங்கி வைத்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் முயற்சியை நீதிமன்ற வழக்குகள் … Read more

தினமும் ஒரு டோஸ் வெறுப்பு விஷம் கக்கப்படுகிறது; முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம்.!

கர்நாடகா மாநிலம் சிவமொக்காவில் நேற்று நடைபெற்ற இந்து ஜாகரன வேதிகேயின் தென் மண்டல ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய பிரதேச பாஜக பெண் எம்பி பிரக்யா சிங் தாக்கூர் , “கடவுளால் படைக்கப்பட்ட இவ்வுலகில், எல்லா ஒடுக்குமுறையாளர்களையும், பாவங்களையும் ஒழிக்க வேண்டும் என்று சன்யாசி கூறுகிறார். லவ் ஜிஹாத், அவர்களுக்கு ஜிஹாத் பாரம்பரியம் உண்டு, எதுவும் செய்யாவிட்டாலும் லவ் ஜிஹாத் செய்கிறார்கள். அவர்கள் நேசித்தாலும் அதில் ஜிஹாத் செய்கிறார்கள். நாமும் (இந்துக்கள்) கடவுளை நேசிக்கிறோம், … Read more

கோயிலுக்கு சாமி கும்பிட வந்த பெண்ணின் முடியை பிடித்து இழுத்து வெளியேற்றிய அறங்காவலர்

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரில் அமிர்தஹள்ளி பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் வழிபாடு செய்ய சென்ற பெண் ஒருவரை கோயிலின் அறங்காவலர்களில் ஒருவரான முனிகிருஷ்ணப்பா என்பவர் அடித்து தாக்கிய வீடியோ வைரலாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கோயிலுக்கு வந்த பெண் தூய்மையாக இல்லை என்றும், அவர் குளிக்காமல் கோயிலுக்கு வந்ததாகவும், கருப்பாக இருப்பதாகவும் கூறி, அறங்காவலர் முனிகிருஷ்ணப்பா திட்டியுள்ளார். பின்னர் அந்த பெண்ணை கோயிலுக்குள் வர கூடாது என கூறி, இரும்பு … Read more

சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்!!

பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடங்கியது. பீகார் மாநிலத்தின் மக்கள் தொகை சுமார் 12.70 கோடி. அம்மாநிலத்தில் மொத்தம் 38 மாவட்டங்களில் சுமார் 2.58 கோடி குடும்பங்கள் உள்ள நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளை மே மாத இறுதிக்குள் முடிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இரு கட்டங்களாக நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பு பணிகளுக்காக சுமார் ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், MGNREGA பணியாளர்கள் என பலருக்கும் கடந்த மாதம் பயிற்சி … Read more