திருப்பதியில் எடை போடுவதில் முறைகேடு 14 இறைச்சி கடைக்காரர்கள் மீது வழக்குப்பதிவு-திடீர் சோதனையில் அதிகாரிகள் அதிரடி

திருப்பதி :  திருப்பதி நகரில் நுகர்வோரை ஏமாற்றி சிக்கன், மட்டன், மீன், இறைச்சி கடைகளில் எடை குறைத்து மோசடியில் ஈடுபட்ட விற்பனையாளர்கள் 14 பேர் மீது விஜிலென்ஸ் அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருப்பதியில் லீலாமஹால், சீனிவாசபுரம் மீன், சிக்கன் மட்டன் கடைகளை எடை குறைவாக வழங்கி பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய்வதாக விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தது. இதனை அடுத்து மாநில விஜிலென்ஸ் அமலாக்கத்துறை  உத்தரவின் பேரில் திருப்பதி விஜிலென்ஸ் அமலாக்க … Read more

ஏலத்துக்கு வருகிறது பிரதமர் மோடியின் பரிசுப்பொருட்கள்! கிடைக்கும் தொகை இதற்கு பயன்படுமாம்!

பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 1,200க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்கள் வருகிற 17ஆம் தேதி முதல் ஏலம் விடப்பட இருக்கின்றன. பிரதமர் மோடி செல்லும் பயணங்கள் மற்றும் கலந்துகொள்ளும் விழாக்களில் அவருக்குப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அவற்றை அவர் அவ்வப்போது ஏலம் விட்டு, அதில் கிடைக்கும் தொகையை கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு வழங்கி வருகிறார். அதன்படி பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 1,200க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்கள் www.pmmementos.gov.in என்ற இணைய தளத்தில் வருகிற 17ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் … Read more

வரதட்சணையை ஊக்குவிப்பதா? – கட்கரியை விளாசும் நெட்டிசன்கள்

புதுடெல்லி: சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி மத்திய சாலை போக்குவரத்து மற்றம் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி சமூக வலைதளத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, காரில் ஏர் பேக்-ன் அவசியத்தையும், ஆறு ஏர்பேக்களை ஊக்குவிக்கும் வகையில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்திருந்த சாலை பாதுகாப்பு விளம்பரம் ஒன்றினை வெள்ளிக்கிழமை அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தற்போது இந்த விளம்பரம் இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அமைச்சர் … Read more

நடிகை சோனாலி போகத் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கோவா முதலமைச்சர் பரிந்துரை

பனாஜி: பாஜக பிரமுகரும், நடிகையுமான சோனாலி போகத் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கோவா முதலமைச்சர் பரிந்துரை செய்துள்ளார். கடந்த மாதம் 22-ம் தேதி கோவாவில் மர்மான முறையில் சோனாலி போகத் உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் சோனாலி உடலில் காயங்கள் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சோனாலி போகத் கொலை வழக்கில் அவரது நண்பரும், உதவியாளரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

கேரளா: 50 அடி பள்ளத்தில் மொத்தமாக கழிழ்ந்த பேருந்து… 20 பேர் படுகாயம்; ஒருவர் உயிரிழப்பு

மூணாறு அருகே கேரள அரசுப் பேருந்து 50 அடி பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். தமிழக கேரள எல்லையை இணைக்கும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் இருந்து, 60 பயணிகளுடன் கேரள அரசுப் பேருந்து எர்ணாகுளம் கிளம்பியது. அப்போது மூணாறு அருகே சாக்கோச்சன் வாலியில் சென்றபோது பேருந்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. தகவல் அறிந்து அடிமைலி போலீஸார், … Read more

கியான்வாபி மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு: வாரணாசியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு 

லக்னோ: கியான்வாபி மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாரணாசியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி அமைந்துள்ளது கியான்வாபி மசூதி. அந்தப் பகுதியில் இருந்த கோயிலை இடித்துவிட்டு, முகலாய மன்னர்கள் மசூதி கட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மசூதியின் வளாகச் சுவற்றில் உள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதி வழங்க வேண்டும் என்று ஐந்து இந்துப் பெண்கள் வழக்கு … Read more

2024 மக்களவை தேர்தலில் பிரதமர் மோடிக்கு சவால் தர போகும் தலைவர் யார்?: 65 சதவீத மக்கள் அதிர்ச்சி கருத்து

புதுடெல்லி: அடுத்த மக்களவை தேர்தலில் பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய சவாலை கொடுக்கப் போகும் தலைவராக யார் இருப்பார்? என்பது குறித்து கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.ஒன்றியத்தில் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி செய்து வரும் பிரதமர் மோடி, 2024 மக்களவை தேர்தலிலும் பாஜ.தான் ஆட்சியை பிடிக்கும் என்று கூறி வருகிறார். ஆனால், இத்தேர்தலில் மோடி ஆட்சியை எப்படியாவது அகற்றி விட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கங்கனம் கட்டி செயல்படுகின்றன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஒற்றுமை பயணத்தின் … Read more

ஜெர்மனிக்கு நெருக்கடி கொடுக்கும் ரஷ்யா… இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்துகள் என்னென்ன?

குளிர்காலம் நெருங்கி வரும் சூழலில் ஐரோப்பா தற்போது கடுமையான எரிசக்தி நெருக்கடியைச் சந்திக்கத் தயாராகி வருகிறது. குறிப்பாக ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் ஜெர்மனியில் தான்  எரிவாயு நெருக்கடி அதிகம் எதிரொலிக்க இருக்கிறது. தற்போது ரஷ்யாவிலிருந்து செல்லும் நார்ட்ஸ்ட்ரோம் ஒன் பைப்லைன் மூலம் ஜெர்மனிக்கான அனைத்து எரிவாயு விநியோகத்தையும், ரஷ்யா மூடியுள்ளது. இதன் பின்னணியையும், விளைவுகள் பற்றியும் பார்ப்போம்.  நீடிக்கும் உக்ரைன் போர்  ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாகச் சர்வதேச அளவில் எரிபொருள் ஏற்றுமதி வர்த்தகம் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் மட்டுமில்லாது உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களையும் சார்ந்து … Read more

பெங்களூரு | நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ய 3 கி.மீ ஓடி மருத்துவமனைக்குச் சென்ற மருத்துவர்

பெங்களூரு: பெங்களூரு என்றாலே போக்குவரத்து நெரிசல் என்பது வழக்கமான கதையாகிவிட்டது. அதுவும் மழைக்காலங்களில் பெங்களூரு போக்குவரத்து இன்னும் கடினமான சவால் என்பது உலகமறிந்த விஷயம். இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி பெங்களூரு மழை, வெள்ளத்துக்கு இடையே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட மருத்துவர் ஒருவர் அதில் மாட்டிக் கொண்டார். குறித்து நேரத்தில் அறுவை சிகிச்சைக்கு செல்ல வேண்டி இருந்ததால் அவர் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தை 45 நிமிடங்கள் ஓட்டமும் நடையுமாக கடந்து சென்று கடமையை நிறைவேற்றியுள்ளார். … Read more

டெல்லியிடம் சரண் அடைய மாட்டேன் சரத் பவார் ஆவேசம்

புதுடெல்லி: ‘டெல்லி ஆட்சியாளர்களிடம் சரண் அடைய மாட்டேன்,’ என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார்.தேசியவாத காங்கிரஸ் கட்சியின்  8வது தேசிய கூட்டம் டெல்லியில் நேற்று  நடந்தது. இதில், கட்சியின் தலைவர் சரத் பவார் பேசுகையில், ‘ஒன்றியத்தில் ஆட்சி நடத்தி வரும் பாஜ, அமலாக்கத் துறை, சிபிஐ போன்றவற்றை தவறாக பயன்படுத்தி வருகிறது. இதை எதிர்த்து போராட வேண்டும்.  சோனியா காந்தி, ராகுல் காந்தி, பரூக் அப்துல்லா, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், சஞ்சய் ராவுத், நவாப் … Read more