ஹரியானாவில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

ஹரியானா: பஹதுர்கரில் ஆலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 4 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். விஷவாயு தாக்கியதில் பாதிக்கப்பட்ட மேலும் 2 தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

National Herald Case: 'யங் இந்தியா' அலுவலகத்திற்கு சீல் – சோனியா வீடு முன்பு போலீசார் குவிப்பு!

டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு கட்டடத்தில் செயல்படும் யங் இந்தியா அலுவலகத்திற்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட பத்திரிகை நேஷனல் ஹெரால்டு. இந்த பத்திரிகையை ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ நிறுவனம் நடத்தி வந்தது. இதனிடையே, அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனம் நிதி பற்றாக்குறையில் தவித்ததால், அந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி 90 கோடியே 25 லட்சம் ரூபாயை வட்டியில்லா கடனாக கொடுத்தது. அந்த கடனை அசோசியேட்டட் நிறுவனம் திருப்பி செலுத்த முடியாததால், … Read more

காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் வெண்கலப் பதக்கத்தை வென்றார் இந்திய வீரர் லவ்பிரீத் சிங்.!

இங்கிலாந்தின் பிர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பளுதூக்கும் வீரர் லவ்பிரீத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 109 கிலோ எடைப் பிரிவில் மொத்தம் 355 கிலோ எடையைத் தூக்கி அவர் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். காமன்வெல்த் போட்டிகளில் இதுவரை இந்தியா 5 தங்கம் உள்பட 14 பதக்கங்களை வென்றுள்ளது.   Source link

காங். அலுவலகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டது புதிராக உள்ளது: ஜெய்ராம் ரமேஷ் கருத்து

டெல்லி: காங்கிரஸ் அலுவலகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டது புதிராக உள்ளது என செய்தி காங். தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கிடையே காங்கிரஸ் எம்பிக்கள் அனைவரும் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

“நீங்கள் பிரதமராவீர்கள்!” – லிங்காயத் மடத்தில் ராகுல் காந்தியை ஆசிர்வதித்த சாமியார்… திருத்திய மடாதிபதி

பெங்களூரு: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் ஸ்ரீ முருகராஜேந்திர மடத்திற்குச் சென்றார். ஸ்ரீ முருகராஜேந்திர மடத்திற்குச் சென்ற ராகுல் காந்தி, மடாதிபதி மற்றும் சீடர்களை சந்தித்தார். அங்கு ராகுலுக்கு தாயத்து அடங்கிய கயிறு கழுத்தில் அணிவிக்கப்பட்டது. பின்னர், ஹவேரி ஹொஸமட் சுவாமிகள் பேசுகையில், “ராகுல் காந்தி பிரதமராவார்” என்று ஆசிர்வதித்தார். அப்போது மடாதிபதி ஸ்ரீ சிவமூர்த்தி முருக சரனாரு சுவாமிகள் குறுக்கிட்டு “எங்கள் மடத்திற்கு யார் வருகை தந்தாலும் அவர்கள் ஆசிர்வதிக்கப்படுவார்கள்” என்று … Read more

மேற்கு வங்க அமைச்சரவை மாற்றி அமைப்பு – 5 புது முகங்களுக்கு வாய்ப்பு!

முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க மாநில அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் தொழில் துறை அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி, ஆசிரியர் நியமன முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை கடந்த மாதம் இறுதியில் அவரை கைது செய்தது. இதை அடுத்து, அமைச்சர் மற்றும் கட்சிப் பதவியில் இருந்து, பார்த்தா சாட்டர்ஜியை நீக்கி, … Read more

எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவுக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு

டெல்லி: துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவுக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. மார்கரெட் ஆல்வாவுக்கு தங்களின் கட்சி ஆதரவு அளிப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

ஆந்திர தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 95 பேருக்கு வாந்தி, மயக்கம்

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கியத்தில் 95 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அட்சுயுதாபுரம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலையில் நேற்று பின்னிரவில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி 90-க்கும் மேற்பட்டவர்கள் கண் எரிச்சல், மூச்சுத் திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனகபள்ளி, அட்ச்யுதாபுரம், விசாகப்பட்டினம் பகுதிகளில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 2 மாதங்களில் … Read more

இலவச திட்டங்கள் தொடர்பான வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தேர்தலுக்கு முன்பு அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச அறிவிப்புகளை முறைப்படுத்த ரிசர்வ் வங்கி, தேர்தல் கமிஷன், நிடி ஆயோக், சட்ட கமிஷன், நிதி கமிஷன் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைத்து ஆலோசனை நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பாஜகவைச் சேர்ந்த சேர்ந்த அஸ்வினி உபத்யாயா தொடர்ந்த பொது நல வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் … Read more

மேற்கு வங்கத்தில் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட அமைச்சரவையில் 9 பேர் பதவியேற்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட அமைச்சரவையில் 9 பேர் பதவியேற்றுள்ளனர். 9 அமைச்சர்களுக்கும் ஆளுநர் இல.கணேசன் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.