“மோடி பிரதமராகும் போது, நிதிஷ் ஏன் பிரதமராக கூடாது?” – தேஜஸ்வி யாதவ் ஆதரவு

பாட்னா: பிஹாரில் பாஜக உடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் முறித்துக் கொண்டார். இதையடுத்து ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து நேற்று முன்தினம் ஆட்சி அமைத்துள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். வரும் 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடவே நிதிஷ் குமார் கூட்டணியை முறித்துக் கொண்டதாக பாஜக விமர்சித்தது. இதனை நிதிஷ் குமார் மறுத்தார். தனக்கு அத்தகைய விருப்பம் … Read more

‘அருந்ததி’ பட பாணியில் மறுபிறவி: 23 வயது இளைஞர் பலியானது எப்படி?

‘அருந்ததி’ படம் பார்த்து மறுபிறவி எடுப்பதற்காக தீக்குளித்த 23 வயது இளைஞர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகா கொண்டவாடி கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகா பிரசாத் (வயது 23). மாணவரான இவருக்கு திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் அதிகம். அந்த திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் போல தன்னை பாவித்து கொள்வதும் வழக்கம். இந்நிலையில், பிரபல நடிகை அனுஷ்கா நடிப்பில், கடந்த 2000 ஆம் ஆண்டு … Read more

நெல்லை மாவட்டம் அகஸ்தியமலை பகுதியை யானைகள் காப்பகமாக அறிவித்தது ஒன்றிய அரசு…

டெல்லி: நெல்லை மாவட்டம் அகஸ்தியமலை பகுதியை யானைகள் காப்பகமாக ஒன்றிய அரசு அறிவித்தது. தமிழகத்தில் ஏற்கனவே 4 யானைகள் காப்பக பகுதிகள் உள்ள நிலையில் மேலும் ஒரு பகுதி அறிவிக்கப்பட்டது. அகஸ்திய மலையில் 1,197 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு யானைகளுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது.

75-வது சுதந்திர தின விழா | பெருங்கூட்டங்களை தவிர்க்க மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

புதுடெல்லி: 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் பெரும் கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டுவிழா வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இது 75வது சுதந்திரம் தினம் என்பதால் இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே விடுதலையின் அமுதப் பெருவிழா என்ற பெயரில் எல்லா துறைகள் சார்ந்தும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சுதந்திர தின விழாவில் பெருங் கூட்டங்களை தவிர்க்குமாறு மாநிலங்களுக்கு மத்திய … Read more

பிரதமராகும் எண்ணம் மனதில் இல்லை: பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் பேச்சு

பாட்னா: பிரதமராகும் எண்ணம் மனதில் இல்லை, மக்களுக்கு உழைப்பதே என் கடமை என பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்தார். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைவது மிக முக்கியம், அதை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடவுள்ளேன் என அவர் தெரிவித்தார்.

தெலங்கானா மாநிலத்தில் களம் இறங்கும் சுனில் பன்சால் – அடுத்த பேரவைத் தேர்தலில் அமித் ஷாவின் வியூகம் பலிக்குமா?

ஹைதராபாத்: தெலங்கானாவில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியை பிடிக்க பாஜக மும்முரமாக செயலாற்றி வருகிறது. ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிந்ததில் இருந்து அங்கு தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியே 2 முறை ஆட்சியை பிடித்து சந்திரசேகர ராவ் முதல்வரானார். இம்முறை ஆளும் கட்சிமீது உள்ள அதிருப்தி, பல திட்டங்களை அமல்படுத்தாதது, வேலை வாய்ப்பை உருவாக்கி தராதது, 2 படுக்கை அறை இலவச வீடு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தாதது போன்ற … Read more

சுதந்திர தினத்தை ஒட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் 5 பேருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சக விருது அறிவிப்பு…

டெல்லி: சுதந்திர தினத்தை ஒட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் 5 பேருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சக விருது அறிவித்துள்ளது. கூடுதல் எஸ்.பி. கனகேஸ்வரி, ஆய்வாளர் கே.அமுதா, எஸ்.சசிகலா, பாண்டிமுத்துலட்சுமி, எஸ்.ஐ. செல்வராஜனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புலனாய்வில் சிறப்பான சேவை புரிந்ததற்காக 5 பேருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் விருது அறிவித்துள்ளது.

2024-ல் மக்களவையுடன் பிஹார் பேரவை தேர்தல் – நிதிஷ் குமார் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையுமா?

புதுடெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இருந்து விலகி, பிஹாரில் 8-வது முறையாக முதல்வரான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவர் நிதிஷ் குமார், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் சக்தி படைத்தவராக கருதப்படுகிறார். லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையிலான மெகா கூட்டணியில் ஜேடியு மீண்டும் இணைந்தது காங்கிரஸ் கட்சிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. ஏனெனில், 2014-ல் பிரதமராக மோடி பதவியேற்றது முதல் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை எடுத்தது. கடைசியாக குடியரசு … Read more

ஆசிய யானைகளில் 60% இந்தியாவில்தான் உள்ளது என்பதில் மகிழ்ச்சி; யானைகளை பாதுகாப்போம்: பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி: உலக யானைகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். யானைகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்களின் பண்பாட்டோடும் பண்டிகைகளோடும் கலந்து விட்டவை. பலமிக்க யானை அன்பிற்கு கட்டுபட்டிருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யானையின் அன்பை பெற, ஆசியை பெற ஆசைப்படுவதுண்டு. நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினமான யானைகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக ஆகஸ்ட் 12 யானைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. மேலும் அவற்றின் பாதுகாப்பு மற்றும் வாழ்விடம் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதிலும் இந்த … Read more

'நடிகர் முனாவரை தாக்குவோம்; அரங்கிற்கு தீ வைப்போம்' – பாஜக எம்எல்ஏ பகிரங்க மிரட்டல்

நடிகர் முனாவர் ஃபாரூக்கி ஹைதராபாத்தில் நிகழ்ச்சி நடத்தப்போவதாக அறிவித்திருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங், நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளார். ஸ்டாண்ட் அப் காமெடியனான நடிகர் முனாவர் ஃபாரூக்கி, கடந்த ஆண்டு ஒரு நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களையும், மத்திய அமைச்சர் அமித் ஷாவையும் அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைதாகி பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நடிகர் முனாவர் ஃபாரூக்கி, நிகழ்ச்சி நடத்தும் … Read more