கொரோனா கட்டுப்பாடுகள்: அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!

நாடு முழுவதும் கொரோனா 3ஆவது அலையின் தாக்கம் கணிசமாக குறைந்து வழக்கமான இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் நிலையில், இந்தியாவில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் டெல்லியைச் சுற்றியுள்ள தேசிய தலைநகர் பகுதிகளிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, கர்நாடகா, ஹரியானா, உத்தரப்பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம், குஜராத், தமிழ்நாடு ஆகிய பத்து மாநிலங்களில் தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டி … Read more

திரையுலகில் 30 ஆண்டுகள் நிறைவு.. புதிய படம் அப்டேட் கொடுத்த ஷாருக்கான்..!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் திரையுலகில் அடியெடுத்து வைத்து 30 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமது இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் பேன் இந்தியா காலத்தின் புதிய படமான பத்தானின் அசையும் போஸ்டரை வெளியிட்டார். 1992 ஆம் ஆண்டில் தீவானா படத்தில் திவ்யபாரதிக்கு ஜோடியாக நடித்த ஷாருக்கான் தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே படத்தில் காஜோலுடன் நடித்தார். அந்தப் படம் மும்பை மராத்தா மந்திர் திரையரங்கில் 22 ஆண்டுகளுக்கு ஓடியது. ஷாருக்கானுக்கு திரையுலகினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் Source link

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 11,739 ஆக குறைந்தது… சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 92 ஆயிரத்தை தாண்டியது!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 11,739 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,33,89,973 ஆக உயர்ந்தது.* புதிதாக 25 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி செல்கிறார் பிரதமர் மோடி – 15-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்

புதுடெல்லி: ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, 15-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 7 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டது ஜி7 அமைப்பு. இதன் 48-வது உச்சி மாநாட்டை ஜெர்மனி நடத்துகிறது. இந்த மாநாடு ஸ்க்லாஸ் எல்மாவ் நகரில் இன்று (ஜூன் 26) முதல் வரும் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராகப் … Read more

புதிய கார்களுக்கு நட்சத்திர மதிப்பீடு: மத்திய அரசு திட்டம்!

இந்தியாவில் புதிய கார்களுக்கு விபத்துகளை தாங்கும் திறனை பொருத்து நட்சத்திர மதிப்பீடு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. விபத்துகளை தாங்கும் திறனை பொருத்து புதிய கார்களுக்கும், மற்ற நுகர்வோர் பொருட்களை போல் நடசத்திர மதிப்பீடு வழங்கப்படும். இந்த நட்சத்திர மதிப்பீடு அடிப்படையில், பாதுகாப்பான கார்களை மக்கள் தேர்வு செய்து வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட மோட்டார் … Read more

மதுபானக் கடையை மூடக் கோரி பெண்களுக்கும் ஒயின்ஷாப் பெண் பவுன்சர்களுக்கும் சண்டை.. தடுக்க முயன்ற போலீசாருக்கு அடி உதை..!

டெல்லி டிகிரி பகுதியில் மதுபான கடையை மூடக் கோரி நடந்த போராட்டத்தில், பெண்கள் போராட்டக்காரர்களுக்கும், மதுபான கடையின் பெண் பவுன்சர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மதுபான கடையை மூடக் கோரி கோஷம் எழுப்பிய பெண்களுக்கும், ஒயின் ஷாப் பெண் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவதம் கைகலப்பில் முடிய இரு தரப்பினர் தங்களுக்குள் சரமாரி குத்துகளை பகிர்ந்து கொண்டனர். மோதலை தடுக்க காவலரையும் பெண்கள் சட்டை கிழித்து தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. … Read more

படம் முடிந்த பிறகு திடீரென்று ஓட்டம் பிடித்த மலையாள நடிகரால் பரபரப்பு

திருவனந்தபுரம்: மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவர், ஷைன் டோம் சாக்கோ. தமிழில் விஜய்யுடன் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துள்ளார். அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘பந்த்ரண்டு’ என்ற படம் நேற்று முன்தினம் கேரளாவில் வெளியானது. கொச்சியிலுள்ள ஒரு தியேட்டரில் இப்படத்தின் முதல் காட்சி முடிந்தவுடன், ரசிகர்களின் கருத்துகளை கேட்க தியேட்டர் முன்பு ஏராளமான தனியார் டி.வி மற்றும் யூடியூப் சேனல்களை சேர்ந்தவர்கள் திரண்டிருந்தனர்.அப்போது ஷைன் டோம் சாக்கோ படம் பார்த்துவிட்டு வெளியே வந்தார். அவரைப் பார்த்ததும் நிருபர்கள் அவரது … Read more

பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் – லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

பிகாில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் மருந்து ஆய்வாளர் ஒருவரிடம் இருந்து கோடிக்கணக்கிலான பணம் மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் ஜிதேந்திர குமார். மருந்து ஆய்வாளராக பணிபுரியும் இவர் மீது தொடர்ந்து லஞ்ச புகார்கள் குவிந்து வந்தன. இதன்பேரில், அவரது அலுவலகம், வீடு உள்ளிட்ட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று சோதனை செய்தனர். இதில் கணக்கில் வராத ரூ.3 கோடி ரொக்கம், 1 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி … Read more

குஜராத் கலவர வழக்கு தீர்ப்பு | 19 ஆண்டாக வேதனைகளை மனதில் புதைத்து கொண்டார் மோடி – அமித் ஷா கருத்து

புதுடெல்லி: குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் உண்மை, பொன்னை போன்று மின்னுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவர வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு, “பிரதமர் மோடி குற்றமற்றவர்” என்று நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: குஜராத் கலவரம் … Read more

ஜெர்மனி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!

ஜெர்மனியில் இன்றும், நாளையும் 48ஆவது ஜி-7 மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கால்ஷ் அழைப்பை விடுத்திருந்தார். அதன்பேரில் அந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனி சென்றுள்ளார். நேற்று இரவு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அவர் புறப்பட்டு சென்றார். கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த … Read more