தந்தையை பிளேடால் கழுத்தறுத்து கொன்ற பிளஸ்-2 மாணவன் போலீசில் சரண்

திருப்பதி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 42).நெசவு தொழிலாளி. இவரது மனைவி மலர்கொடி.இவர்களுக்கு 17 வயதில் மகனும் 15 வயதில் மகளும் உள்ளனர். கதிரேசன் கடந்த 3 ஆண்டுக்கு முன் தனது மனைவி மகளுடன் வேலை தேடி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், மதன பள்ளிக்குச் சென்றார்.அங்கு நெசவு தொழில் செய்து வந்தார். ஆனால் அவரது மகன் மட்டும் ஆரணியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி பிளஸ்-2 படித்து வருகிறார். இந்தநிலையில் கதிரேசன் குடிப்பழக்கத்திற்கு … Read more

கணவனை மரத்தில் கட்டி வைத்து மனைவியை 4 பேர் கும்பல் பலாத்காரம்: உத்தரபிரதேசத்தில் அட்டூழியம்

லக்னோ: கணவனை மரத்தில் கட்டி வைத்து மனைவியை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் 24 வயது கணவனும், 21 வயது மனைவியும் கடந்த 22ம் தேதி இரவு தங்களது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். நடந்து சென்ற  அவர்களை, திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பிய கும்பல் ஒன்று வழிமறித்தது. திடீரென அந்த கும்பல் அந்த பெண்ணின் கணவரை தாக்கியது. பின்னர் அவரை மரத்தில் கட்டி … Read more

"காங்கிரஸ் வலுப்பெற வேண்டுமென மனதார விரும்புகிறேன்"-நிதின் கட்கரி சொல்வதன் காரணம் இதுதான்!

காங்கிரஸ் கட்சி வலுவிழந்தால், பிராந்தியக் கட்சிகள் எதிர்க்கட்சி இடத்தைப் பிடிக்கும், இது ஒரு நல்ல அறிகுறி அல்ல என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார் ஜனநாயகத்துக்கு வலுவான காங்கிரஸ் கட்சி அவசியம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி லோக்மத் பத்திரிகை விருது வழங்கும் விழாவில் கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றில் கருத்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ஜனநாயகம் இரண்டு சக்கரங்களில் இயங்குகிறது, ஒன்று ஆளும் ஆட்சி மற்றொன்று எதிர்க்கட்சி. எனவே நல்ல … Read more

சிஏ படிப்புகள் உலகத் தரமாகிறது; பாடத்திட்டத்தில் வருகிறது மாற்றம்

சிஏ எனப்படும் கணக்குத்தணிக்கை குறித்த படிப்புகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உலகத் தரத்திற்கு மாறுகிறது. இந்திய கணக்குத்தணிக்கை மையம் (ஐசிஏஐ) நாடு முழுவதும் சிஏ, சிஎம்ஏ எனப்படும் கணக்குத்தணிக்கை தொடர்பான படிப்புகளை வழங்கி வருகிறது. தற்போது 7 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்தப்படிப்பை படித்து வருகின்றனர். இதில் 42 சதவீதம் மாணவிகள் என்று ஐசிஏஐ தலைவர் தேபோசிஸ் மித்ரா பெருமையாக குறிப்பிட்டுள்ளார். நாட்டில் மதிப்புமிக்கதாக கருதப்படும் இப்படிப்புகளை ஐசிஏஐ அமைப்பு காலத்திற்கேற்ற மாற்றங்களை கொண்டு வந்து … Read more

திமுக எம்பி கேள்விக்கு பார்லிமென்ட்டில் நிதியமைச்சர் நச் பதில்!

வங்கிகளின் கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் மற்றும் அவர்களது செயல்படாத சொத்துகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து திமுக எம்.பி. டி ஆர் பாலு நாடாளுமன்ற மக்களவையில் இன்று கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசியது: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாதவர்களிடம் இருந்து முதன்முறையாக பணத்தை வசூலித்துள்ளது. கடன் வாங்கிவிட்டு ஏமாற்றியவர்கள் மீது எப்ஐஆர் பதிவு உள்ளிட்ட சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. திரும்ப … Read more

பஞ்சாபில் வீடு,வீடாகச் சென்று ரேசன்பொருள் வழங்கும் திட்டத்தைத் தொடக்கி வைத்தார் முதலமைச்சர் பகவந்த் மான்

பஞ்சாபில் வீடுகளுக்குச் சென்று ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பகவந்த் மான் தொடக்கி வைத்துள்ளார். அலுவலர்கள் தொலைபேசியில் அழைத்து நேரம் கேட்டுக் குறித்த நேரத்தில் வீட்டுக்கே சென்று ரேசன் பொருட்களை வழங்குவர் என அவர் தெரிவித்தார். இந்தத் திட்டம் விருப்பத் தேர்வுதான் என்றும், ரேசன் கடைகளுக்கு நேரடியாகச் சென்றும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.  நாடு விடுதலைபெற்று 75 ஆண்டுகள் ஆன பின்னும் ரேசன் கடைகளில் பொருட்களைப் பெற மக்கள் வரிசையில் நிற்பது வருத்தமளிப்பதாகத் … Read more

பங்குச்சந்தை முறைகேடு வழக்கு- சித்ரா ராமகிருஷ்ணாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

புதுடெல்லி: தேசிய பங்குச்சந்தை தொடர்பான ரகசிய தகவல்களை கசிய விட்ட விவகாரத்தில், தேசிய பங்குச்சந்தை முன்னாள் இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 11ம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், சித்ரா ராமகிருஷ்ணாவின் கையெழுத்து மாதிரிகளை கேட்டு, சிபிஐ தாக்கல் செய்த விண்ணப்பத்தின் மீது நீதிமன்றம் விரைவில் உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த … Read more

குற்றவாளிகளை அடையாளம் காண உயிரியல் மாதிரிகளை எடுக்க வழி செய்யும் குற்றவியல் நடைமுறை மசோதாவுக்கு எதிர்ப்பு!!

டெல்லி : குற்றவாளிகளை அடையாளம் காண உயிரியல் மாதிரிகளை எடுக்க வழி செய்யும் குற்றவியல் நடைமுறை மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களவையில் குற்றவியல் நடைமுறை மசோதாவை தாக்கல் செய்து பேசிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, புதிய சட்டம் அமலுக்கு வந்தால் விசாரணை அமைப்புகளுக்கு பயனுள்ளதாக அமையும் என்றார். மேலும் வழக்கு விசாரணை விரைவாக முடிய வழி ஏற்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். மேலும் நீதிமன்றத்தில் உள்ள … Read more

மேற்கு வங்க சட்டப்பேரவையில் பாஜகவுடன் பயங்கர கைகலப்பு – திரிணமூல் எம்எல்ஏ மூக்கு உடைந்தது!

மேற்கு வங்கத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்மாநில சட்டப்பேரவையில் பாஜக – திரிணமூல் காங்கிரஸுக்கு இடையே பயங்கர கைகலப்பு ஏற்பட்டது. இதில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏவின் மூக்கு உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் உள்ள ராம்புர்ஹாட் கிராமத்தைச் சேர்ந்தவர் பாது ஷேக். திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகியான இவர், கடந்த வாரம் மர்ம நபர்கள் சிலரால் பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் … Read more

பஞ்சாபில் வீடு தேடி ரே‌ஷன் பொருட்கள்: முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் வீடு தேடி ரே‌ஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். பஞ்சாபில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றுள்ளார். பகவந்த் மானுடன் 16 எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். டெல்லியில் உள்ள மொஹல்லா மருத்துவமனைகள், அரசுப் பள்ளிக்கூடங்களை நிபுணர்கள் பலரும் ஆவலுடன் பார்த்துச் செல்கின்றனர், அது மாதிரியான நிலையை நாங்கள் … Read more