நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா: உலகக் கோப்பை அரையிறுதி போரில் வெல்வது யார்?

MCA Pune Pitch Report: உலகக் கோப்பை 2023 (ICC Men’s Cricket World Cup) தொடரில் நடக்கவுள்ள இன்றைய (நவம்பர் 01, 2023, புதன்கிழமை) 32 வது போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி புனேவில் உள்ள MCA ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்த ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் அதே வேளையில் டாஸ் அரை மணி நேரத்திற்கு முன்னதாக போடப்படும்.  உலகக் கோப்பை 2023 தொடரில் இரு … Read more

கில் தடுமாறுவார்… ரோஹித் என்ன செய்வார் – இந்தியாவை அச்சுறுத்தும் இந்த பாஸ்ட் பௌலர்!

India National Cricket Team: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் (ICC World Cup 2023) லீக் சுற்று தற்போது கடைசி கட்டத்தில் உள்ளது. அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் 6 போட்டிகளில் விளையாடிவிட்டன. பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மட்டும் 7 போட்டிகளில் விளையாடி உள்ளன. எனவே, அடுத்து வரும் போட்டிகள் நடப்பு தொடரின் அரையிறுதி வாய்ப்பை மட்டுமின்றி 2025ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கும் வழிவகுக்கும்.  அதிகரித்த சுவாரஸ்யம் அதாவது, பாகிஸ்தான் நீங்கலாக … Read more

World Cup semi-finals: உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள்!

World Cup semi-finals: செவ்வாயன்று நடந்த ஐசிசி உலகக் கோப்பையின் 2023 போட்டியில் பாகிஸ்தான் அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளது.  ஈடன் கார்டன் மைதானத்தில் பங்களாதேஷுக்கு எதிராக மிகவும் அவசியமான வெற்றியுடன் அதன் தொடர் தோல்விகளை முடித்துக்கொண்டது. ஐசிசி உலகக் கோப்பையின் 31வது ஆட்டத்தில் பாகிஸ்தான் வங்கதேசத்தை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய வென்றது.  ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 45.1 ஓவரில் 204 ரன்களுக்கு சுருண்டது. … Read more

விராட் கோலி பிறந்தநாள்…பிரமாண்டமாக கொண்டாட திட்டமிடும் பெங்கால் கிரிக்கெட் வாரியம்…!

கொல்கத்தா, இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. தற்போது உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றி வருகிறார். இவர் நவம்பர் 5, 1988ம் ஆண்டு பிறந்தார். இந்நிலையில் விராட் கோலி பிறந்தநாளன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் விராட் கோலியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட பெங்கால் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்தியா- தென் ஆப்பிரிக்கா ஆட்டம் நடைபெறும் ஈடன் கார்டன்ஸ் மைதானம் … Read more

நான் விளையாட வரமாட்டேன்னு சொன்னாங்க… – விமர்சனங்கள் குறித்து மனம் திறந்த பும்ரா..!

லக்னோ, இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா. இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார். இந்த உலகக்கோப்பையில் இதுவரை 6 ஆட்டங்களில் ஆடியுள்ள பும்ரா 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். இந்த உலகக்கோப்பைக்கு முன்னர் பும்ரா கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக கிரிக்கெட் விளையாடாமல் ஒதுங்கி இருந்தார். அப்போது பல்வேறு தரப்பில் இருந்தும் பும்ரா காயத்தில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். அவரால் இனி … Read more

WC 2023: ஹர்திக் வந்தால்.. இந்திய அணியில் இருந்து வெளியேறும் அந்த வீரர் யார்?

Hardik Pandya Latest News: ஹர்திக் பாண்டியா காயமடைந்த பிறகு, அணியில் இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த இரண்டு வீரர்களும் அற்புதமாக விளையாடினார்கள். இந்த இருவரும் ஹர்திக் பாண்டியா அணியில் இல்லாத ஏக்கத்தை உணர விடவில்லை. அந்த இரண்டு வீரர்கள் யார் என்றால், முகமது ஷமி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆவார்கள். டீம் இந்தியாவுக்காக முகமது ஷமி அற்புதமாக செயல்பட்டார். அதேபோல இங்கிலாந்துக்கு எதிராக 49 ரன்கள் எடுத்து முக்கியமான இன்னிங்ஸ் ஆடிய சூர்யகுமார் யாதவும் … Read more

உலகக்கோப்பை கிரிக்கெட்; பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு…!

கொல்கத்தா, 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் கொல்கத்தாவில் மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து விடும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. தினத்தந்தி … Read more

தில் தில் பாகிஸ்தான்… பிரகாசமாகும் அரையிறுதி வாய்ப்பு – வங்கதேசம் ஆல்-அவுட்!

ICC World Cup 2023: நடப்பு உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் 204 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதில் வெற்றி பெற்றால் பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும்.

உலகக்கோப்பை கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்காவின் வெற்றிப்பயணம் தொடருமா…? – நியூசிலாந்துடன் நாளை மோதல்…!

புனே, 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்த லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் நாளை நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்தை புனேவில் சந்திக்க உள்ளது. இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் 2வது மற்றும் 3வது இடங்களில் உள்ளன. … Read more

இலங்கைக்கு எதிரான ஆப்கானிஸ்தான் வெற்றியை நடனமாடி கொண்டாடிய இந்திய முன்னாள் வீரர்கள்…!

புனே, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கையும், ஆப்கானிஸ்தானும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி ஆப்கானிஸ்தானின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இலங்கை 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 241 ரன்களே எடுத்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக நிசாங்கா 46 ரன்கள் அடித்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் பரூக்கி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 242 ரன் எடுத்தால் வெற்றி … Read more