ஒன்றல்ல, இரண்டல்ல.. 4000 காலியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் தகவல்..!
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை கிண்டியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள் நியமனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களுக்கான 4000 இடங்களை நிரப்பப் போகிறோம். மொத்த காலிப் பணியிடங்கள் 6906 உள்ளன. இதில் 4000 இடங்களை நிரப்பப் போகிறோம். இந்தப் பணியிடங்களுக்கும் டிஆர்பி மூலமாக எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடத்தப்படும். கவுரவ விரிவுரையாளர்களின் பணி அனுபவத்தைப் பொறுத்து … Read more