கேரளத்தில் தமிழக பெண் உள்பட 2 பேர் நரபலி.. தலையை துண்டாக வெட்டிய கொடூரம்..!

கேரளத்தில் தமிழக பெண் உள்பட 2 பேர் நரபலி.. தலையை துண்டாக வெட்டிய கொடூரம்..! Source link

சட்டப்பேரவையை நோக்கி 17ம் தேதி நடை பயணம் மேற்கொள்ள போகும் 13 கிராம மக்கள்!

பரந்தூரில் அமைய உள்ள விமான நிலையம் திட்டத்தை கைவிடக் கோரி நடை பயணம்!  காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் 13 கிராமங்களை உள்ளடக்கிய நிலப் பகுதியில் பசுமை வழி விமான நிலையம் அமைய உள்ளது. இதனை மத்திய மாநில அரசுகள் அறிவித்து நில கையகப்படுத்துவதற்கான பணிகளை முதற்கட்டமாக துவங்கி உள்ளன. பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 4750 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்விடத்தில் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் … Read more

ஒன்றல்ல, இரண்டல்ல.. 4000 காலியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் தகவல்..!

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை கிண்டியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள் நியமனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களுக்கான 4000 இடங்களை நிரப்பப் போகிறோம். மொத்த காலிப் பணியிடங்கள் 6906 உள்ளன. இதில் 4000 இடங்களை நிரப்பப் போகிறோம். இந்தப் பணியிடங்களுக்கும் டிஆர்பி மூலமாக எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடத்தப்படும். கவுரவ விரிவுரையாளர்களின் பணி அனுபவத்தைப் பொறுத்து … Read more

சென்னை பெருநகர் எல்லை விரிவாக்கம் குறித்து முதல்வர் ஆய்வு: விரைவில் வெளியாகிறது அரசாணை

சென்னை: சிஎம்டிஏ எல்லையை 5904 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆய்வுக் கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற்றது. சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் பரப்பளவு தற்போது 1,189 சதுர கிலோ மீட்டராக உள்ளது. இதில் சென்னை மாநகராட்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 16 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள் உள்ளன. இந்நிலையில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் எல்லை விரிவாக்கம் செய்யப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு அறிவித்தது. இதன்படி திருவள்ளூர், … Read more

டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்கள்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை சோதனை அடிப்படையில் கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நவம்பர் 15ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வனபாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்று விட்டு, பின் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அத்தொகையை திரும்ப வழங்கலாம் என தெரிவித்தது. … Read more

காஞ்சிபுரம் ஊராட்சிகளில் வீட்டு வரி, தொழில் வரி ஆன்லைனில் செலுத்தும் வசதி ஏற்பாடு: ஊரக வளர்ச்சி துறை துவக்கம்

வாலாஜாபாத்: மாநகராட்சி, நகராட்சி வரி இனங்கள் ‘ஆன்லைனில்’ செலுத்துவது போல, இனி ஊராட்சிகளிலும் வீட்டு வரி மற்றும் தொழில் வரி இனங்களை, ஆன்லைனில் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான அடிப்படை விபரங்களை, இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணியை, ஊரக வளர்ச்சி துறை துவக்கியுள்ளனர். காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் ஆகிய ஊராட்சிகளில், 274 ஊராட்சிகள் உள்ளன. இதில், 1,350 குக்கிராமங்களில், பல லட்சம் குடிநீர் இணைப்புகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளது. இதுதவிர,100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் … Read more

5 1/2 சென்ட் நிலம் யாருக்கு..? குடுமிப்பிடிச் சண்டை போட்ட குடும்பத்தினர்

கரூரில் சொத்துத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் ஒருவரையொருவர் மூர்க்கத்தனமாகத் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள செம்டாம்பாளையம் கணபதி நகர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமாக 11 சென்ட் நிலம் இருந்துள்ளது. இதில் சரி பாதி நிலமான் 5 1/2 சென்ட் நிலத்தை தனது மகள் பாப்பாத்தியின் பெயருக்கு கோவிந்தராஜ் இறப்பதற்கு முன்பு … Read more

சென்னையில் பரபரப்பு..!! உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி!

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டம் உதவி மையம் அருகே ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுத்ததால் அந்த நபர் தீக்குளித்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தீக்குளித்த நபர் படுகாயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த வேல்முருகன் என தெரியவந்துள்ளது. Source link

இந்தி மொழி ஆதிக்கம் செலுத்தினால் இந்தியாவில் பல நாடுகள் பிறக்கும்: சீமான் எச்சரிக்கை

சென்னை: “இந்தி எனும் ஒரே மொழிதான் அதிகாரத்திலிருந்து ஆதிக்கம் செலுத்துமென்றால், இங்கு பல நாடுகள் பிறக்க நேரிடுவதை ஒருபோதும் தவிர்க்க இயலாது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக்குழு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் அளித்துள்ள 11-வது அறிக்கையில் இந்தியைத் திணிக்கும் வகையிலான பரிந்துரைகள் இடம்பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவிலுள்ள மாநிலங்களையும், ஒன்றியப் பிரதேசங்களையும் … Read more