மின்சார திருத்த மசோதாவால் என்னென்ன பாதிப்புகள்? – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

ஏழை, எளிய மக்களை பாதிக்கும் மின்சார சட்டத்திருத்த மசோதாவை கடுமையாக எதிர்ப்பதாக, தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மின்சார சட்டத்திருத்த மசோதா குறித்து, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மின்சார மசோதாவிற்கு முதலமைச்சர் தொடர்ந்து எதிர்ப்பு குரலை பதிவு செய்து வருகிறார். இந்த சட்டத்திருத்த மசோதா … Read more

சோளக்காட்டில் கிடந்த நகைப் பெட்டிகள்.. கள்ளக்குறிச்சி நகைக்கடையில் 200 சவரன் திருட்டு!

கள்ளக்குறிச்சி அருகே நகைக் கடையின் பூட்டை உடைத்து 200 பவுன் நகை கொள்ளை போனதாக நகைக்கடை உரிமையாளர் புகார் அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் புக்கிரவாரி என்ற இடத்தில் லோகநாதன் என்பவர் நகைக்கடை வைத்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடை விடுமுறை விடப்பட்டிருந்தது அதனைத் தொடர்ந்து இன்று காலை லோகநாதன் கடை அருகே வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதைத் தொடர்ந்து கடையை திறந்து பார்த்தபோது சுமார் 200 பவுன் தங்க நகையும் 10 கிலோ … Read more

“காவிரி – குண்டாறு திட்டப் பணி நடப்பதெல்லாம் கே.பாலகிருஷ்ணனுக்கு தெரியாது” – துரைமுருகன் பதில்

வேலூர்: காவிரி – குண்டாறு திட்டத்தை திமுக செயல்படுத்தவில்லை என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் குற்றச்சாட்டை தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். வேலூரில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, காவிரி – குண்டாறு திட்டத்தை திமுக செயல்படுத்தவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டியிருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அவருக்கு திட்டம் என்னவென்றே தெரியாது. … Read more

அமைச்சர் நாசர் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிருப்தி?

பால்வளத் துறை அமைச்சர் நாசர் மீது, முதலமைச்சர் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதில் இருந்தே, தன் மீதும், தனது தலைமையிலான அரசு மீதும் எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் வந்து விடக் கூடாது என்பதில், மிகுந்த கவனமாக உள்ளார். எனினும், அவ்வப்போது திமுக அமைச்சர்கள் மீது ஏதாவது ஒரு குற்றச்சாட்டு வந்துக் கொண்டே இருக்கிறது. இது போதாது என, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, வாரந்தோறும் ஏதாவது ஓர் … Read more

அமைச்சர் அன்பில் மகேஷ் வாகனத்திற்காக காத்திருக்க வைக்கப்பட்டதா ஆம்புலன்ஸ்.. நடந்தது என்ன?

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகையை ஒட்டி, ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டதாக வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், ஆம்புலன்ஸ் ஒன்று பாலத்தின் ஒரு முனையில் காத்திருக்க, பாலத்தின் வழியாக வாகனங்கள் சில நொடிகள் செல்கின்றன. அந்த வாகனங்கள் முழுவதுமாக சென்ற பின்னர் ஆம்புலன்ஸ் பாலத்தினுள் செல்கிறது. அன்று நடந்தது என்ன? தமிழகத்தில் காவிரி பாயும் பகுதியில் கரையோரம் வாழும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தமிழ்நாடு அரசு சார்பில் … Read more

13 ஆடு, 2 நாய்… கிராமங்களில் புகுந்து வேட்டையாடும் சிறுத்தை: பொள்ளாச்சி பீதி

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே மீண்டும் சிறுத்தைகள் அட்டகாசம் தொடர்ந்து வரும் நிலையில். தோட்டத்தில் இருந்த நாயை அடித்துக் கொன்றுள்ளது. மேலும் ஆடுகளையும் வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் புளியங்கண்டி மலை அடிவாரப் பகுதியில் ஒரக்காளியூர் தனியார் தோட்டத்தில் கடந்த சில மாதங்கள் முன்பு 13 ஆடுகளை சிறுத்தை அடித்துகொன்றது. தொடர்ந்து சில தினங்களில் புளியங்கண்டி ராசு கவுண்டர் என்பவரின் தோட்டத்திலிருந்து வளர்ப்பு … Read more

மயிலாடுதுறை | கொள்ளிடம் ஆற்றில் 4வது நாளாக வெள்ளப்பெருக்கு.!

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் படுகை கிராமங்களான வெள்ள மணல், முதலை மேடு திட்டு, நாதல் படுகை உள்ளிட்ட கிராமங்களில் 45.4 ஹெக்டேர் விளைநிலங்கள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கின. மேலும், அப்பகுதி மக்கள் முகாம்களில் தங்கியுள்ளனர்.  இந்த நிலையில் சட்டம், நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் ஊழல் தடுப்புச் சட்ட அமைச்சர் ரகுபதி மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டனர். அந்த கிராம … Read more

ஓங்கி அறைந்த மாணவி..! பலாத்காரம் செய்து கிணற்றில் வீசிக்கொலை..! துப்பு துலக்கியது போலீஸ்..!

திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவியிடம் வம்பு செய்ததால், ஊரைவிட்டு அடித்து துரத்தப்பட்ட சைக்கோ இளைஞர் ஒருவர் , 6 வருடங்கள் கடந்து சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் அதே மாணவியை பலாத்காரம் செய்து கிணற்றில் வீசிக் கொன்றதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான். திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த செல்லரப்பட்டி ஊராட்சி பகுதியில் வசிக்கும் விவேகானந்தன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றிலிருந்து சில தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் சடலம் … Read more

நல்லாசிரியர் விருதுக்குப் பரிந்துரைக்க நிபந்தனைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: நல்லாசிரியர் விருதுக்கு பள்ளி ஆசிரியர்களைப் பரிந்துரை செய்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறப்பான கல்விப்பணி ஆற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் தேசிய விருது வழங்கப்படும். இந்நிலையில், இந்தாண்டு நல்லாசிரியர் தேசிய விருதுக்கு ஆசிரியர்களை பரிந்துரை செய்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்தாண்டு 386 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட … Read more

தேசிய கொடியை கையிலெடுக்கும் பாஜக: கேள்வி எழுப்பும் காங்கிரஸ்

52 ஆண்டுகள் தொடர்ந்து தேசியக் கொடியை ஆர்எஸ்எஸ் தலைமை நிலையமான நாகபுரியில் ஏன் ஏற்றவில்லை என்று தமிழ்நாடு கமிட்டி தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் 200 ஆண்டுகால ஆட்சியை எதிர்த்து, ஜனநாயக முறையில் போராடி 1885-இல் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் 60 ஆண்டுகளுக்கும் மேலாக அகிம்சை முறையில் போராடி இறுதியில் 1947-இல் சுதந்திரத்தை பெற்றோம். 1920-களுக்குப் பிறகு அண்ணல் காந்தியடிகள் தலைமையில் மாபெரும் மக்கள் இயக்கமாக காங்கிரஸ் … Read more