அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடந்த போர் விமான சாகச நிகழ்ச்சியில் 2 விமானங்கள் மோதி 6 பேர் உயிரிழப்பு

டல்லாஸ்: அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நேற்று நடைபெற்ற போர் விமான சாகச நிகழ்ச்சியில், இரு விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்டதில் 6 பேர் உயிரிழந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க விமானப்படை பயன்படுத்திய போர் விமானங்களில் சில விமானங்கள் மட்டும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் போயிங் நிறுவனத்தின் பி-17 குண்டு வீச்சு விமானங்கள் மற்றும் பி-63 `கிங் கோப்ரா’ ரக போர் விமானங்கள் ஆகியவை போர் விமானக் கண்காட்சிகளில் பயன்படுத்தப்பட்டு வந்தன. மேலும், சில விமானங்கள் … Read more

44 வீடுகள், பள்ளி, தேவலாயம் உள்ள ஸ்பெயின் கிராமத்தின் விலை ரூ.2.1 கோடி

மாட்ரிட்: சால்டோ டி காஸ்ட்ரோ. ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு கிராமம். ஸ்பெயினுக்கும் போர்ச்சுக்கல் நாட்டுக்கும் இடையில் இந்தக் கிராமம் அமைந்திருக்கிறது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டிலிருந்து மூன்று மணி நேர பயணத்தில் இந்தக் கிராமத்தை அடைந்துவிடலாம். 44 வீடுகள், ஒரு விடுதி, ஒரு தேவாலயம், ஒரு பள்ளி, ஒரு நீச்சல் குளம் உள்ள இந்தக் கிராமம் தற்போது விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. விலை 260,000 யூரோ. இந்திய மதிப்பில் ரூ.2.1 கோடி. இந்தக் கிராமம் உருவான கதை சுவாரஸ்யமானது. … Read more

உக்ரைனின் கெர்சோன் நகருக்கு சென்ற ராணுவ வீரர்களை கட்டி அணைத்து கண்ணீர் மல்க வரவேற்ற பொதுமக்கள்..

உக்ரைனின் கெர்சோன் நகருக்கு வந்த அந்நாட்டு ராணுவ வீரர்களை, அப்பகுதி மக்கள் கட்டி அணைத்தும், பூங்கொத்து கொடுத்தும் கண்ணீர் மல்க வரவேற்றனர். இரு தினங்களுக்கு முன்பு கெர்சோன் நகரை விட்டு ரஷ்ய படைகள் வெளியேறிய நிலையில், கெர்சோன் பகுதிக்கு மக்கள் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் கெர்சோன் பகுதிக்கு வந்த உக்ரைன் வீரர்களை கண்டதும், அப்பகுதி மக்கள் ஓடிச்சென்று வரவேற்றனர்.  Source link

அதிர்ச்சியில் வாந்தி எடுத்த மேலாளர்| Dinamalar

வாஷிங்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும்படி, எலான் மஸ்க் உத்தரவிட்ட பின், அதிர்ச்சி அடைந்த மேலாளர் ஒருவர், அலுவலகத்தின் இருக்கையில் அமர்ந்தபடியே வாந்தி எடுத்ததாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், ‘டுவிட்டர்’ சமூக வலைதள நிறுவனத்தை தொழிலதிபர் எலான் மஸ்க், 3.50 லட்சம் கோடி ரூபாய்க்கு சமீபத்தில் கையகப்படுத்தினார். திவால் ஆகிக் கொண்டிருக்கும் நிறுவனத்தை சீரமைக்க, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அறிவித்தார். முதல்கட்டமாக, தலைமை பொறுப்பில் இருந்த … Read more

பைடனின் ஜனநாயக கட்சிக்கு செனட் சபையில் பெரும்பான்மை| Dinamalar

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சிக்கு, அந்த நாட்டு பார்லிமென்டின் செனட் சபையில் பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது. அமெரிக்க பார்லிமென்டுக்கு, இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். தற்போது செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தல்கள் நடக்கின்றன. வழக்கமாக அதிபரின் ஆட்சிக்காலத்தின் இடையில் நடக்கும் தேர்தல்களில், எதிர்க்கட்சியே முன்னிலை பெறும். தற்போது அமெரிக்காவில் நிலவும் விலைவாசி உயர்வு, ஜோ பைடனின் செல்வாக்கு குறைவு ஆகியவை, ஆளும் ஜனநாயகக் கட்சிக்கு எதிராக இருக்கும் என … Read more

நாட்டுக்குள் நுழைந்த 200 டிரோன்கள்; பி.எஸ்.எஃப் ஷாக் தகவல்!

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் எல்லைக்குள் டிரோன்கள் ஊடுருவல் அதிகரித்து இருப்பதாக, எல்லை பாதுகாப்பு படை கூறி இருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 10 மாதங்களில் மட்டும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் எல்லையில் 266 டிரோன்கள் சட்டவிரோதமாக நுழைந்ததாக பாதுகாப்பு படையினர் தெரிவித்து உள்ளனர். இதில் 215 டிரோன்கள் பஞ்சாப் செக்டார் வழியாகவும், 22 டிரோன்கள் ஜம்மு செக்டார் வழியாகவும் பாகிஸ்தானில் இருந்து வந்ததாக எல்லை பாதுகாப்புப் படையின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. … Read more

துருக்கி சுற்றுலா தளத்தில் தற்கொலை படை தாக்குதல்; பலர் உயிரிழப்பு.!

துருக்கி நாட்டின் தலைநகரம் இஸ்தான்புல்லில் பரபரப்பான ஷாப்பிங் இடங்களில் ஒன்றான இஸ்திக்லால் அவென்யூவில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் 11 பேருக்கு மேல் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் துருக்கிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உள்ளூர் நேரப்படி மாலை 4.20 மணியளவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலி மற்றும் காயம் ஏற்பட்டுள்ளதாக ஆளுநர் அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார். நகரின் தஸ்கிம் சதுக்கத்திற்கு அருகில் உள்ள இஸ்திக்லால் அவென்யூவில் உள்ள … Read more

துருக்கி: இஸ்தான்புல் நகரில் குண்டு வெடிப்பு : பலர் காயம்| Dinamalar

இஸ்தான்புல்:துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல் நகரில் நடந்த குண்டு வெடிப்பில் பலர் காயம் அடைந்துள்ளனர். தலைநகர் இஸ்தான்புல் நகரில் உள்ள இஸ்திக்லால் பகுதி மக்கள் அதிகம் கூடும் பகுதியாகும். இப்பகுதியில் வெளிநாட்டினர் அதிகம் வசித்து வருகின்றனர். பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் இப்பகுதிக்கு வருகை தருவர். இந்நிலையில் இன்று (14ம்தேதி) சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில்10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகவலை அந்நாட்டு டி.வி.,நிறுவனம் … Read more

சானியா மிர்சா விவாகரத்து உண்மையா?.. ஷாக் கொடுக்கும் புது அப்டேட்.!

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, கடந்த 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2018ம் ஆண்டு மகன் பிறந்தார். இருவரும் வெவேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தங்கள் நாடுகளின் சார்பாக தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர். சுமார் 12 வருடங்களாக திருமண பந்தத்தில் இருந்த இந்த தம்பதிகள், தற்போது விவாகரத்து செய்ய உள்ளதாக சமீபத்தில் தீவிரமாக செய்திகள் பரவியது. அந்த செய்திகள் உண்மை எனும் … Read more

கால்வாயில் பஸ் கவிழ்ந்து 21 பேர் பரிதாப பலி| Dinamalar

எகிப்து நாட்டில் நைல் நதி கால்வாயில் பஸ் கவிழ்ந்து 21 பேர் பலியாகினர். வடகிழக்கு ஆப்ரிக்க நாடான எகிப்தின் டகாலியா மாகாணத்தில் சென்ற பஸ், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, நைல் நதியில் இருந்து செல்லும் கால்வாயில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்த 21 பயணியர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். காயம் அடைந்த 30 பயணியர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். எகிப்து நாட்டில் நைல் நதி கால்வாயில் பஸ் கவிழ்ந்து 21 பேர் பலியாகினர்.வடகிழக்கு … Read more