ரணில் விக்கிரமசிங்கே முன் உள்ள சவால்கள் என்னென்ன?

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும், அதனால் மக்கள் போராட்டம் எழுச்சி பெற்றதும் நாம் அறிந்ததே. அதிபர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்த கோத்தபய ராஜபக்ச, கடந்த 9-ம் தேதி பொதுமக்கள் அதிபர் இல்லத்தை கைப்பற்றியதைத் தொடர்ந்து, ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். பொதுமக்களின் போராட்டம் ராஜபக்சக்களுக்கு எதிராக மட்டும் அல்ல. ரணில் விக்கிரமிங்கசிங்கேவுக்கு எதிராகவும் தான் go home gota, go Ranil go ஆகிய முழக்கங்களைத் தான் போராட்டக்காரர்கள் முன்னெடுத்தனர். இலங்கை அதிபர் மாளிகை … Read more

இலங்கை: பாஸ்போர்ட் சேவை மையத்தில் குவிந்துள்ள மக்கள் – வெளிநாடுகளில் பணியாற்ற ஆர்வம்!

கொழும்பு, இலங்கையில் நிலவும் வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசைக் கண்டித்து நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. 100 நாட்களை கடந்து போராட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில், இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் குவிந்துள்ளனர். இலங்கையில் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை கூட சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவுக்கு … Read more

பிரிட்டன் பிரதமர் பதவி – இறுதிச்சுற்றில் ரிஷி சுனக் – லிஸ் டிரஸ்

இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனுக்கு ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து கடந்த 7-ம் தேதி போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  இதனைத் தொடர்ந்து, புதிய பிரதமர் பதவிக்கு வர 8 எம்.பி.க்கள் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து, புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு சுற்றுகளாக எம்.பி.க்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.  ஒவ்வொரு சுற்றிலும் குறைந்த வாக்குகளைப் பெறுபவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனார். இதுவரை நடைபெற்ற 4 சுற்று வாக்குப்பதிவிலும், இந்திய … Read more

உக்ரைன் போரில் சுமார் 15 ஆயிரம் ரஷிய படைகள் உயிரிழப்பு: அமெரிக்க உளவுத்துறை

கொலராடோ, உக்ரைன் – ரஷியா இடையிலான போர் மாதக்கணக்கில் நீடித்து வருகிறது. இரு தரப்பு பேச்சுவாரத்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரு தரப்பில் இருந்தும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்களை இந்த போர் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், உக்ரைன் போரால் இதுவரை சுமார் 15 ஆயிரம் ரஷிய படைகள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்து உள்ளது. மேலும் 45 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ரஷிய படையில் தாக்குதல்களால் அப்பாவி உக்ரைனிய … Read more

உலக அழிவு நெருங்குகிறதா… பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்

உலக அழிவு குறித்த அச்சுறுத்தல் என்பது நீண்ட காலமாக மனிதர்களுக்கு பீதியை கொடுத்து வருகிறது. பூமி கிரகத்தின் தற்போதைய நிலைமையைப் புரிந்து கொள்வதற்காக விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், ஒரு புதிய ஆய்வு, உலக அழிவின் அச்சுறுத்தல் நினைத்தத்தை விட மோசமாக உள்ளதாக ஆய்வு ஒன்றி தெரிய வந்துள்ளது. நிபுணர்களால் முன்னர் நினைத்ததை விட மோசமானது என்று நம்புகிறது. ஃபிரான்டியர்ஸ் இன் தி எகாலஜி அண்ட் என்விரான்மெண்ட் என்னும் சுற்றுசூழல் குறித்த இதழில் வெளியிடப்பட்ட … Read more

லண்டனில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து.!

இங்கிலாந்தில் அடுக்குமாடி கட்டிடத்தின் உச்சியில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து 25 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ முழுவதும் அணைக்கப்பட்டது. ஐரோப்பாவில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் வாட்டி வரும் நிலையில் கிழக்கு லண்டனில் உள்ள டவர் பிளாக் அடுக்குமாடி கட்டிடத்தின் 17-வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக 25 தீயணைப்பு வாகனங்களில் சென்ற 125 தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.  Source link

இலங்கை அதிபராக பதவியேற்றார் ரணில்| Dinamalar

கொழும்பு: இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்று கொண்டார்.இலங்கையில் நேற்று நடந்த அதிபர் தேர்தலில், ரணில் விக்கிரமசிங்கே 134 ஓட்டுகள் பெற்றி வெற்றி பெற்றார். அவருக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் வாழ்த்து தெரிவித்தன. இந்நிலையில், இன்று அவர் அதிபராக பதவியேற்று கொண்டார். வரும் 2024ம் ஆண்டு வரை அவர் பதவியில் இருப்பார். கொழும்பு: இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்று கொண்டார்.இலங்கையில் நேற்று நடந்த அதிபர் தேர்தலில், ரணில் விக்கிரமசிங்கே 134 ஓட்டுகள் பெற்றி வெற்றி … Read more

உக்ரைனுக்கு துல்லியமாக தாக்கும் ராக்கெட் ஏவுகணைகளை அதிக எண்ணிக்கையில் அனுப்ப அமெரிக்கா உறுதி!

வாஷிங்டன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலனா ஜெலன்ஸ்கா நேற்று அமெரிக்க பாராளுமன்றத்தில் எம்.பி.க்களிடையே உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது:- “துரதிர்ஷ்டவசமாக போர் முடிவுக்கு வரவில்லை. பயங்கரவாதம் தொடர்கிறது. இந்த போரில் கொல்லப்பட்டவர்கள் சார்பாகவும், கை கால்களை இழந்தவர்கள் சார்பாகவும், இன்னும் உயிருடன் இருப்பவர்கள் சார்பாகவும், போர் நடைபெறும் முன்களப் பகுதியில் இருந்து தங்கள் குடும்பத்தினர் திரும்ப வருவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருப்பவர்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறேன். நான் கேட்க விரும்பாத ஒன்றைக் கேட்கிறேன், ஆயுதங்களைக் கேட்கிறேன். … Read more

நிலவில் நீல் ஆம்ஸ்டாங் இறங்கியது போலியா? இதோ உண்மைகள்!

விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் நிலவில் தரையிறங்கி ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், அது நடக்கவில்லை என்றும், இது அமெரிக்க அரசாங்கத்தால் செய்யப்பட்ட புரளி என்றும் இன்னும் சில கருத்துக்கள் நிலவி வருகிறது.  ஜூலை 20, 1969 அன்று அப்பல்லோ 11 மிஷன் இரண்டு மனிதர்களை நிலவில் தரையிறக்கியது. மைக்கேல் காலின்ஸ் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் சந்திர மாட்யூலை இயக்கினர், இது விண்கலத்தில் இருந்து பிரிந்து சந்திரனின் மேற்பரப்பில் தரையிறங்கியது. அவர்களில் … Read more

இலங்கை அதிபராக ரணில் தேர்வு – ரகசிய வாக்கெடுப்பில் 223 உறுப்பினர்களில் 134 பேர் ஆதரவாக வாக்கு

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க(73) தேர்வு செய்யப்பட்டார். மொத்தம் பதிவான 223 வாக்குகளில் ரணிலுக்கு ஆதரவாக 134 வாக்குகள் கிடைத்தன. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகினார். இதையடுத்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சவும் கடந்த வாரம் பதவி விலக நேரிட்டது. முன்னதாக, இடைக்கால அதிபராக … Read more