அதிமுக கவுன்சிலர்கள் மூவரை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை

சென்னை: திமுகவினரை தாக்கியதாக, கோவை வெள்ளலூர் பேரூராட்சியைச் சேர்ந்த 3 அதிமுக கவுன்சிலர்களை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கோவை மாவட்டத்தில் வெள்ளலூர் பேரூராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் 15 வார்டுகளில் 8 வார்டுகளை அதிமுக கைப்பற்றியுள்ளது. அந்த வெற்றிக் கொண்டாட்ட ஊர்வலத்தின்போது, திமுக பிரமுகரையும், அவரது சகோதரரையும் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில், போத்தனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு அதிமுக கவுன்சிலர்கள் சந்திரகுமார், கருணாகரன், … Read more

நிலைக்குழுக் கூட்ட அழைப்பில் வேண்டுமென்றே தாமதமா? – அப்துல்லா எம்.பி. புகார் மீது மக்களவை சபாநாயகர் விசாரணைக்கு உத்தரவு

புதுடெல்லி: “நிலைக்குழுக் கூட்டத்திற்கான அழைப்பு குறித்த நேரத்தில் அனுப்பவில்லை” என திமுக எம்.பி. அப்துல்லா அளித்த புகார் மீது மக்களவை சபாநாயகர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற எம்.பி.க்களின் நிலைக்குழுவின் ஒரு கூட்டத்திற்கு குறித்த நேரத்தில் அழைப்பு அனுப்பப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. மாநிலங்களவையின் திமுக எம்.பி.யான எம்.முகம்மது அப்துல்லாவின் புகார் மீதான விசாரணைக்கு மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மொத்தம் 24 உள்ளன. இதில், 16 மக்களவையின் நிர்வாகத்திலும், மீதம் உள்ள எட்டு நிலைக்குழுக்கள் … Read more

"எங்களுடன் நீங்கள் துணை நிற்பதை நிரூபியுங்கள்" – ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஆவேச உரை

“உங்களுடன் சமமாக உயிர் வாழ்வதற்காக, எங்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாங்களும் உங்களைப் போல தான் இருக்கிறோம்” என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை கவனம் ஈர்த்து வருகிறது. ரஷ்ய ராணுவ நடவடிக்கை 6-வது நாளாக தொடர்ந்துள்ள நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் உரை நிகழ்த்தினார். தனது உரையில், “கார்கிவ் மீதான தாக்குதல்கள் ரஷ்யாவால் மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதம். கார்கிவ் மத்திய சதுக்கத்தில் … Read more

சிலிண்டர் விலை உயர்வு – பெட்ரோல், டீசல் விலையும் அதிகரிப்பு?

சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக, மத்திய அரசுக்கு, ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரை தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெயில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதல் நாள் போரையடுத்து, கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலருக்கும் கூடுதலாக உயர்ந்தது. எனினும், தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் வர்த்தக உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் விலை இன்று முதல் 105 ரூபாய் … Read more

உக்ரைன் -ரஷியா போரால் எத்தனை கோடி பேருக்கு பாதிப்பு? -ஐ.நா. அதிர்ச்சி தகவல்!

நேட்டோ படையில் உக்ரைன் இணைவதற்கு கடும் எதிர்த்து தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் தமது சொல் பேச்சை கேட்காததால் ஆத்திரமடைந்து அந்நாட்டின் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு வாரமாக நடைபெற்றுவரும் இந்த போரை நிறுத்தவதற்காக உக்ரைன் -ரஷியா இடையே பெலராசில் நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, உக்ரைன் மீதான ரஷிய படைகளின் தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷியா ரவுண்ட் கட்டி அடித்து வருகிறது. இருநாட்டு … Read more

ஆமாம்…! அபிஷேக் பச்சனை பழிவாங்குவதற்காக ஃபோனை திருடினேன்…! உண்மையை கூறிய பிரியங்கா சோப்ரா…!

அபிஷேக் பச்சனின் ஃபோனை நான் தான் திருடினேன்’ என்று பேட்டியில் பிரியங்கா சோப்ரா கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் இந்திய நடிகை மட்டுமில்லாமல் முன்னாள் உலக அழகியும் ஆவார். இவர் மாடலாக தன்னுடைய கேரியரை தொடங்கினார். பின் இவர் பல விளம்பரங்களில் நடித்து வந்தார். பிறகு பிரியங்கா சோப்ரா 2000 ஆண்டில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் பங்குபெற்று வெற்றியும் பெற்று மிகப்பிரபலமானார். … Read more

ஒரு கிலோ அரிசி இருவருக்கு ஒரு வாரத்திற்கு போதுமாம்? சமல் ராஜபக்ச

ஒரு கிலோ அரிசி ஒரு வாரத்திற்கு இரண்டு பேருக்கு போதுமானது என நீர்ப்பாசன அமை்சசர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஒரு கிலோ அரிசி ஒரு வாரத்திற்கு போதுமானதாக இல்லை என்றால், அது பற்றி அறிவிக்குமாறும், தான் அது தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தற்காலிகமானது எனவும் அதனை தீர்த்துக்கொள்ள முடியும். ஒரு கிலோ அரிசியின் விலை … Read more

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தை நெருங்கும் ரஷ்ய படைகளால் அதனை சுற்றி பாதுகாப்பு மண்டலம் அமைக்க உக்ரைன் வேண்டுகோள்.! <!– ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தை நெருங்கும் ரஷ்ய… –>

உக்ரைனின் சாபோரிஸியாவில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தை ரஷ்யா நெருங்கும் நிலையில், அந்நாட்டில் உள்ள அணு மின் நிலையங்களை சுற்றி பாதுகாப்பு மண்டலம் அமைக்க உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது. உக்ரைனில் உள்ள அணு மின் நிலையங்களில் சுமார் 15 அணு உலைகள் உள்ள நிலையில், ரஷ்யாவின் தொடர் தாக்குதலால் அதன் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு அணு உலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உக்ரைனின் … Read more

`விஜய் 66' படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ், பிரபாஸ் படங்களின் ஒளிப்பதிவாளர்!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்க, இன்னொரு பக்கம், விஜய்யின் 66வது படத்திற்கான ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் ஆரம்பித்துவிட்டன. டோலிவுட் இயக்குநர் வம்சி இயக்கும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். தமிழ் – தெலுங்கு பைலிங்குவல் படமாக இருந்தாலும் படத்தின் பெரும்பகுதியான படப்பிடிப்புகள் சென்னையில்தான் நடைபெற இருக்கின்றன. இயக்குநர் ராஜூ முருகன் தமிழ் வசனம் எழுதுகிறார். தமன் இசையமைக்கிறார், பிரவீன் கே.எல் எடிட் செய்கிறார் என … Read more

ஜெலன்ஸ்கியின் விண்ணப்பத்தை ஏற்றது ஐரோப்பிய நாடாளுமன்றம்! உக்ரைனுக்கு ஆதரவாக தொடங்கியது சிறப்பு நடைமுறை

 ஐரோப்பிய ஒன்றியத்தில் உடனடியாக இணைவதற்கான உக்ரைனின் விண்ணப்பத்தை ஐரோப்பிய நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது. உக்ரைனை உடனடியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி விடுத்திருந்து கோரிக்கையை ஐரோப்பிய நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது. ஐரோப்பிய நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில், உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைப்பதற்கான சிறப்பு சேர்க்கை நடைமுறை தொடங்கியுள்ளது. இதன் போது காணொளி காட்சி மூலம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உரையாற்றினார். ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் பக்கம் நிற்பதை நிரூபிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார். ஐரோப்பிய … Read more