அகதிகளை பணத்தால் ஏழ்மையான நாடுகளுக்கு விரட்டும் மேற்குலக நாடுகள்

இங்கிலாந்து மற்றும் ருவாண்டா இடையே கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ், கடந்த ஜூன் 14, 2022 அன்று கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அகதிகளை நாடுகடத்த இங்கிலாந்து அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், திட்டமிட்டபடி,அகதிகளை அனுப்பும் விமானம் தனது பயணத்தை மேற்கொள்ளவில்லை. மனித உரிமைகள் அடிப்படையிலான சட்ட நடவடிக்கையின் மூலம் இம்முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த அகதிகள் சிரியா, சூடான், ஈரான் போன்ற போர் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நாடுகளிலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சமடைந்தவர்கள் என்பதும் படகு வழியாக … Read more

`உதயநிதியைப் பாராட்டிய ரஜினி முதல் முகம் சிவந்த அமைச்சர் வரை!' – கழுகார் அப்டேட்ஸ்

பதில் மிரட்டல் விடுத்த எடப்பாடி தரப்பு!தொடர் மிரட்டலில் ட்ரீட்மென்ட் புள்ளி தரப்பு… ட்ரீட்மென்ட் புள்ளியின் வலதுகரமாக அறியப்பட்ட அகிம்சைப் புள்ளி எடப்பாடி அணிக்குத் தாவியதிலிருந்து, அவருக்கு மறைமுக மிரட்டல் வந்துகொண்டிருக்கிறதாம். ட்ரீட்மென்ட் புள்ளியின் சம்பந்தி தரப்பினர், ‘அகிம்சை மட்டும் நம்ம ஊருக்குள்ள வரட்டும் பார்த்துக்கிறோம்…’ என்று வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்கள். இதனால் அவர் ஒரத்தநாடு பகுதியைக் கடந்து செல்லும்போது தன் காரில் செல்லாமல், பாதுகாப்புக்காக வேறொரு காரில் சென்றுகொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அகிம்சைப் புள்ளி பொங்கியெழுந்துவிட்டாராம். … Read more

கலவரத்தால் பாதித்த தனியார் பள்ளியைச் சேர்ந்த 907 மாணவர்கள் வேறு பள்ளியில் சேர விருப்பம் – அமைச்சர் தகவல்

சேலம்: கலவரத்தால் பாதிக்கப்பட்ட சின்னசேலம் தனியார் பள்ளி மாணவர்களில் 907 பேர், வேறு பள்ளிகளில் சேர்ந்து படிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சேலத்துக்கு நேற்று வந்தார். ஏற்காட்டில் உள்ள புளியங்கடை, நாராயணதாதனூர், செங்கரடு ஆகியவற்றில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்தார். பின்னர், சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் … Read more

ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3-வது இடம்

புதுடெல்லி: மக்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் நேற்று முன்தினம் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: மற்ற நாடுகளின் ராணுவ செலவு விவரங்களை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சேகரிக்கவில்லை. எனினும் ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (எஸ்ஐபிஆர்ஐ) இணையதளத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2021-ம் ஆண்டில் உலக நாடுகளின் ராணுவ செலவினங்கள் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இதன்படி அமெரிக்காவின் ராணுவ செலவு ரூ.63.4 லட்சம் கோடியாகவும் சீனாவின் ராணுவ செலவு … Read more

காரில் கட்டுக்கட்டாக பணம்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிரடி கைது!

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று காங்கிரஸ் எம்எல்ஏக்களின் காரில் கட்டுக் கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இர்பான் அன்சாரி, ராஜேஸ், கொங்காரி ஆகிய எம்எல்ஏக்கள், நேற்று மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவுக்கு காரில் வந்தனர். அவர்கள் ஏராளமான பணத்துடன் வருவதாக மேற்கு வங்க மாநில போலீசாருக்கு … Read more

ராணுவ செலவுகள் அதிகம் செய்யும் நாடுகளில் 3 ஆம் இடத்தில் இந்தியா 

டில்லி உலக அளவில் ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளில் இந்தியா 3ஆம் இடத்தில் உள்ளது. தற்போது நடைபெற்று வரும் மழைக்கால நாடாளுமன்றத் தொடரில் மக்களவையில் ஒரு உறுப்பினர் ராணுவத்துக்கான செலவுகள் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.  அதற்குப் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய்பட் எழுத்துப் பூர்வமாகப் பதில் அளித்துள்ளார். அந்த பதிலில் அமைச்சர், “ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (எஸ்ஐபிஆர்ஐ) இணையதளத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி கடந்த 2021-ம் ஆண்டில் உலக நாடுகளின் ராணுவ செலவினங்கள் … Read more

தமிழ்நாட்டில் மதகலவரங்கள் இல்லை; முதல்வர் ஸ்டாலின் உரை

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டாக மதக் கலவரங்களோ, சாதி மோதல்களோ மக்களை பீதிக்குள்ளாகும் குற்றங்களோ இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் அமைதி நிலவுகிறது, துப்பாக்கிச்சூடு இல்லை, கள்ளசாராய இறப்புகளும் இல்லை. 2018-ம் ஆண்டு 17-ஆக பதிவான காவல் நிலைய மரணங்கள் 2021-ல் 4-ஆக குறைந்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கார்கில் வெற்றி நினைவாக 5140-ம் எண் முனைக்கு ‘துப்பாக்கி மலை’ பெயர்

புதுடெல்லி: கார்கில், டிராஸ் செக்டாரில் உள்ள 5140வது முனைக்கு, ‘துப்பாக்கி மலை’ என்று ராணுவம் பெயர் சூட்டியுள்ளது. இது குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘கடந்த 1996ம் ஆண்டு இந்திய  ராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவு எதிரி துருப்புக்கள் மற்றும் 5140வது முனை உட்பட அவர்களின் பிடியில் இருந்த பாதுகாப்பு நிலைகளில் கடும் தாக்குதல் நடத்தியது. இது, கார்கிலில் போரை விரைவாக முடிப்பதற்கான முக்கிய காரணியாக அமைந்தது. இதன் நினைவாக, இந்த 5140வது முனைக்கு, ஆபரேஷன் விஜய்யில் … Read more

தாயை ஹெலிகாப்டரில் வீட்டுக்கு அழைத்து சென்று கௌரவித்த மகன்! நெகிழ்ச்சிப் பின்னணி

தாய் பணியிலிருந்து ஓய்வு பெற்றதை கொண்டாடும் விதமாக, அவருக்கு ஹெலிகாப்டர் பயணத்தை பரிசாக அளித்துள்ளார் ராஜஸ்தானை சேர்ந்த நபர். யோகேஷ் சவுகான் என்பவரின் தாய், ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இதனால் அவருக்கு மறக்க முடியாத பரிசை வழங்க நினைத்த யோகேஷ் , ஹெலிகாப்டர் மூலமாக தாயை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். தனது தாயுடன் யோகேஷ் சவுகான் ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதை காண ஏராளமானோர் குவிந்தனர். பின்னர் தாய்க்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பொதுமக்களின் மரியாதையை … Read more