ஆகஸ்ட் 1 முதல் வரவிருக்கும் முக்கிய மாற்றங்கள்.. உஷாரா இருங்க!

நாளை ஆகஸ்ட் 1 தொடங்கவுள்ள நிலையில் பற்பல மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. இதில் சிலிண்டர் முதல் வங்கி பரிவர்த்தனை வரை என்னென்ன மாற்றங்கள் வரவுள்ளன. கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன? குறிப்பாக பாசிட்டிவ் பே சிஸ்டம் சில வங்கிகளில் அமலுக்கு வரவுள்ளது. இதனால் என்ன பலன்? வாருங்கள் பார்க்கலாம். எல்பிஜி? ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. இது சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப திருத்தம் செய்யப்பட்டு வருகின்றது. … Read more

இந்திய ஜனாதிபதி,இலங்கை ஜனாதிபதிக்கு வாழ்த்து  

இந்தியாவின் புதிய ஜனாதிபதி திரௌபதி முர்மு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாழ்த்துத் தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இலங்கை மக்களுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பானது அயலுறவுக்கு முதலிடம் கொள்கையால் வழிநடத்தப்படுவதாகவும் இந்தியாவின் புதிய ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்.   பொதுவான மரபுகள் மற்றும் இருநாடுகளினதும் மக்களிடையிலான ஆழமான உறவுகள் ஆகியவற்றின் அடிப்படையிலான, நீண்டகால இருதரப்பு பங்குடைமையானது மேலும் வலுவடையுமெனவும் இந்திய ஜனாதிபதி நம்பிக்கையை  குறித்த கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.  

இன்று முதல் வண்டலூர் பூங்கா பார்வையாளர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.! பூங்கா நிர்வாகம் அறிவிப்பு.!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இன்று முதல் வண்ணத்துப்பூச்சி பூங்காவை காணுவதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.  சென்னை அருகே இருக்கும் வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வந்த நிலையில், கொரானா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்ட 7 பார்வையாளர்கள் காணுமிடம் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றது.  இத்தகைய சூழலில், இரவு விலங்குகள் இருப்பிடம், சிறுவர் பூங்கா பயோ சென்டர், பாம்புகள் இருப்பிடம் உள்ளே சென்று காணும் பறவைகளின் … Read more

சாக்லேட் பால்ஸ், பாலக் தாலிபித், பூரி பரோட்டா… புதுமாதிரியான வீக் எண்டு விருந்து ஸ்பெஷல்!

சாக்லேட் பால்ஸ் இன் கஸ்டர்ட் சாஸ் தேவையானவை: பால் – 2 கப் சர்க்கரை – அரை கப் கஸ்டர்டு பவுடர் – 2 டேபிள்ஸ்பூன் சாக்லேட் பிஸ்கட் – 10 துருவிய சாக்லேட் அல்லது சாக்லேட் சிப்ஸ், டிரை ஃப்ரூட்ஸ், நட்ஸ் – தேவையான அளவு சாக்லேட் பால்ஸ் இன் கஸ்டர்ட் சாஸ் அவல் சாலட் | கார்ன் சாலட் | எடைக் குறைப்பு சாலட் – சாலட் ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்! செய்முறை: … Read more

தமிழகத்தில் 12 இடங்களில் நவீன அரிசி ஆலை – அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்

பழநி: தமிழகத்தில் 12 இடங்களில் நவீன அரிசி ஆலை அமைக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். பழநி அருகே தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் பேசியதாவது: நத்தம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அடுத்த ஆண்டு அரசு கல்லுாரி தொடங்கப்படும். 25 ஆண்டுகள் பழமையான ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நியாய விலைக் கடைகளில் உணவுப் பொருட்களை பாக்கெட்களில் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகத்தில் … Read more

அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். நாடு முழுவதும் 676 மாவட்ட சட்டப் பணிகள் ஆணையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆணையங்களின் தலைவராக அந்தந்த மாவட்ட நீதிபதிகள் செயல்படுகின்றனர். மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் தேசிய அளவிலான முதல் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்க உரையாற்றியானார். அவர் பேசியதாவது: நாடு விடுதலை அடைந்து 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை … Read more

நான் துரோகி என்றால் நீங்கள் யார்? ஏக்நாத் ஷிண்டே சரமாரி கேள்வி!

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மாநிலத்தை விட்டு வெளியேறினர். இதனால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை உத்தவ் தாக்கரே நிரூபிக்குமாறு மாநில ஆளுநர் பிகத் சிங் கோஷியாரி உத்தரவிட்டார். இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து, உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் தொடர்ச்சியாக, மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னவிசும் பொறுப்பேற்றனர். நம்பிக்கை … Read more

யார் இந்த மனிஷா ருபேட்டா: பாகிஸ்தானின் முதல் இந்து பெண் டிஎஸ்பி!

பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மையினர். அந்நாட்டு இந்துக்கள் அரசுத் துறையில் குறைவாகவே பணியில் உள்ளனர். அதிலும், உயர் பொறுப்புகளுக்கு இந்துக்கள் தேர்வாவது கடினமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மனிஷா ரூபேட்டா என்ற இந்து பெண் அந்நாட்டின் முதல் பெண் டிஎஸ்பியாக பதவியேற்றுள்ளார். பாகிஸ்தானில் அரசு அதிகாரிகளாக பெண்கள் நியமிக்கப்படுவது அரிதான விஷயமாக பார்க்கப்படும் நிலையில், அதிலும், இந்து பெண் ஒருவர் டிஎஸ்பியாக பதவியேற்றுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். மனிஷா ருபேட்டாவின் குடும்பம் பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் … Read more

மரத்தடியில் பாடம் கற்கும் தமிழக மாணவர்களுக்கு புதிய வகுப்பறை : அமைச்சர் அறிவிப்பு

சேலம் மரத்தடியில் பாடம் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு 2500 புதிய வகுப்பறை அமைக்கப்படும் எனத் தமிழக அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். நேற்று சேலத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அமைச்சர் தனது பதிலில், “தற்போது தமிழகம் முழுவதும் 10,031 பள்ளிகள் இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது., இந்த ஆண்டு இந்த  பள்ளிகள் மேம்பாட்டுக்கு ரூ.1,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. … Read more