பஞ்சாப் மருத்துவமனை டீன் விவகாரம்: சுகாதார அமைச்சர் செயலுக்காக மன்னிப்புக் கேட்ட சக அமைச்சர்

சண்டிகர்: அழுக்கான மருத்துவமனை படுக்கையில் டீனை படுக்கவைத்த பஞ்சாப் அமைச்சர் சேத்தன் சிங் ஜோரம்ஜா பதவி விலகக் கோரி எழுந்துள்ள சர்ச்சை, எதிர்கட்சிகளின் தாக்குதலைத் தொடர்ந்து அமைச்சரின் செயலுக்கு அமைச்சரவையின் மற்றொரு அமைச்சரான ஃபவுஜா சிங் சராரி மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அமைச்சர் ஃபவுஜா சிங் சராரி கூறுகையில், அமைச்சர்கள் மரியாதை செலுத்துவதற்கு தான் இருக்கிறார்கள், அதிகாரம் செலுத்துவதற்கு இல்லை. அரசியல் தலைவர்கள் அதிகாரிகள் மீது ஆதிக்கம் செலுத்தவோ, அழுத்தம் தரவோ கூடாது. அமைச்சர் சார்பில் நான் … Read more

ஐரோப்பிய நாடுகளை ஒவ்வொன்றாக வேட்டையாடும் ரஷ்யா… இந்த முறை சிக்கிய குட்டி நாடு

போலந்து, பின்லாந்து, நெதர்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுக்கான எரிவாயு வழங்கலை தடை செய்துள்ளதையடுத்து, லாத்வியாவுக்கான எரிவாயுவை ரஷ்ய அரசு துண்டித்துள்ளது. உக்ரைன் விவகாரத்தில் தன்னை எதிர்த்த தலைவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், எரிசக்தி விநியோகங்களை ஆயுதமாக்குவதால் ஐரோப்பிய நாடுகள் கடுமையான எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், தற்போது ரஷ்யாவின் Gazprom நிறுவனம் லாத்வியாவுக்கான எரிவாயு வழங்கலை துண்டித்துள்ளதுடன், ரஷ்யாவுக்கான உள்ளூர் பணத்தில் வர்த்தகம் செய்ய மறுத்ததாக குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த … Read more

அமெரிக்கா, இங்கிலாந்துக்கு இணையாக வளர்ச்சி அடையும் இந்தியா : பிரதமர் மோடி

அகமதாபாத் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு இணையாக இந்தியா வளர்ச்சி அடைந்து வருவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் சர்வதேச நிதி சேவை மைய ஆணையத்தின்(ஐ எஃப் எஸ் சி ஏ) அடிக்கல் நாட்டு விழா நட்ந்தது.   இதில் பிரதமர் மோடி கலந்துக்  கொண்டார். அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றினார். மோடி தனது உரையில், “உலக அளவில் கடந்த 2008-ம் ஆண்டு உலக அளவில் மிகப்பெரும் தேக்க நிலை உருவானது. … Read more

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய… இன்று கடைசி!| Dinamalar

புதுடில்லி:வருமான வரி கணக்கு தாக்கலுக்கான கடைசி நாள், இன்றுடன் முடிவடைகிறது. இருப்பினும், கால அவகாசம்நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பலர் உள்ளனர். ஆனால், நீட்டிக்க வாய்ப்பில்லை என மத்திய அரசுஉறுதிபட கூறியுள்ளது.ஆண்டு வருவாய் 2.5 லட்சம் ரூபாயை தாண்டும் அனைவரும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.வரி ஆதாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு, உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கட்டாயமாக கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அபராதக் கட்டணம் கடந்த 2021 – 2022 நிதியாண்டுக்கான கணக்கை தாக்கல் … Read more

தந்தையின் 70வது பிறந்தநாள் : சினேகா தந்த சர்ப்ரைஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சினேகா. நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டு அன்பான இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இனிய இல்லறம் நடத்தி வருகிறார். அதேசமயம் தற்போதும் செலக்டிவான, கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில் சினேகாவின் தந்தை ராஜாராமுக்கு 70வது பிறந்தநாள். அவருக்கு சர்ப்ரைஸ் தர வேண்டும் என விரும்பினார் சினேகா. அதன்படி சென்னை ரெட்ஹில்ஸில் உள்ள ஷெல்ட்டர் ஹோமுக்கு தனது தந்தையை அழைத்து சென்ற சினேகா, அங்கிருந்த சிறப்பு குழந்தைகளுடன் … Read more

ஆடம்பர பொருள் இறக்குமதிதடையை நீக்கியது பாகிஸ்தான்| Dinamalar

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் ஆடம்பர பொருள் இறக்குமதிக்கு விதித்து இருந்த தடையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கடந்த ஏப்ரலில் அந்நாட்டு பிரதமராக பொறுப்பேற்ற ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் கடந்த மே மாதம் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில், நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்துக்கு பின், அத்தியாவசியமற்ற மற்றும் ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது. இதில் 860 பொருட்கள் இடம்பெற்று … Read more

மக்களுக்கு தேவையானதை முன்கூட்டியே அறிந்து செயல்படுபவர் மோடி- நிர்மலா புகழாரம்.!

சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமர் மோடியின் ஆட்சி குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.  சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், ” பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த பல்வேறு நாடுகள் கூட தற்போது பின்தங்கி விட்டன. இப்படிப்பட்ட நிலையில், உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா … Read more

அனைத்துக்கட்சிக் கூட்டம்: அதிமுக அலுவலகத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம் – பதில் கடிதம் அனுப்பிய ஓபிஎஸ்

தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அதிமுக-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் கட்சியையே பிளவுபடுத்தியிருக்கிறது. இந்த நிலையில் அதிமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மற்றொரு பக்கம் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக-வின் பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் நான்தான் எனக் கூறிக் கொண்டு அறிக்கைகளை வெளியிட்டுவருகிறார். இவ்வாறு நாளுக்கு நாள் இந்தப் பிரச்னை பெரிதாகிக்கொண்டே வருகிறது. நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, 2023 மார்ச் 31 -ம் … Read more

“மின் துறையில் தன்னிறைவு பெற்றுள்ளோம்” – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பெருமிதம்

புதுச்சேரி: “மின் துறையில் நாம் தன்னிறைவு பெற்றுள்ளோம். தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும் என்பது நம்முடைய எண்ணம்” என புதுவை முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி காமராஜர் மணி மண்டபத்தில் நடந்த மின் சக்தி திருவிழா நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு பேசியது: ‘‘அனைத்து துறைகளிலும் நம்முடைய நாடு தன்னிறைவு பெற்று தலைசிறந்த நாடாக விளங்க வேண்டும் என்பது மத்திய அரசின் எண்ணம். புதுச்சேரி மின் துறையின் வளர்ச்சியை எண்ணிப் … Read more

"ஊழல்வாதிகள் பெயர்களை கூறுங்கள்" – கைது செய்யப்பட்ட பார்த்தா சாட்டர்ஜி க்கு மிதுன் சக்கரவர்த்தி அறிவுரை..!

ஆசிரியர் பணியிட நியமனத்தில் ஊழல் செய்ததாக சில தினங்களுக்கு முன் மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில் அவரது உதவியாளர் வீட்டில் கோடிக்கணக்கில் பணங்கள் கைப்பற்றப்பட்டன. அவர்களது பண்ணை வீட்டில் பெட்டிகளில் பணம் கண்டுபிடிக்கப்பட்டது. ₹20 கோடிக்கு மேல் பணம் பெட்டியில் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர் அமலாக்கத் துறையினர். மேலும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி பணத்தை கைப்பற்றினர். அவரது நெருங்கிய உதவியாளரான அர்பிதா முகர்ஜியின் அடுக்குமாடி குடியிருப்பில் ₹28 கோடி ரூபாய் மதிப்பிலான … Read more