மக்கள் உணர்வை புரிந்து சேவையாற்ற வேண்டும்: ஐஏஎஸ்.களுக்கு முர்மு அறிவுரை
புதுடெல்லி: ‘மக்களின் உணர்வுகளை புரிந்து சேவை செய்ய வேண்டும்,’ என்று இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுரை வழங்கினார். ஒன்றிய அமைச்சகத்தின் பல்வேறு துறைகளில் உதவி செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள, 2020ம் ஆண்டின் 175 ஐஏஎஸ் அதிகாரிகள், ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேற்று சந்தித்தனர். அவர்களடையே முர்மு பேசியதாவது: அரசின் நலத் திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் குறித்து எதுவுமே தெரியாதவர்களுக்கு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். தங்களின் துறையில் நாட்டை முதலாவது இடத்துக்கு கொண்டு வரும் ஆர்வத்துடன் … Read more