’புழுதி அடங்கவே 10 நிமிடம் ஆகும்’-நொய்டா இரட்டை கோபுர இடிப்பு குறித்து நிபுணர்கள் விளக்கம்

நொய்டா இரட்டை கோபுரங்களை தகர்க்கும்போது உருவாகும் புழுதி தரையில் படிவதற்கு 10 நிமிடங்கள் ஆகும். உத்தரப் பிரதேசம் நொய்டாவில் எமரால்டு கோர்ட் வளாகத்தில் ‘சூப்பர் டெக்ஸ்’ என்ற பெயரில் பிரமாண்டமான இரட்டை கோபுரங்கள் கட்டப்பட்டன. 40 மாடிகள் கொண்ட இந்த இரண்டு கோபுரங்களும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவற்றை இடிக்க உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து இந்த இரட்டை கோபுரங்களை இடிக்கும் பணி ‘எடிஃபைஸ்’ என்ற தனியார் நிறுவனத்திடம் … Read more

சூர்யாவின் ஒளிப்பதிவாளர் திருமணம் : நடிகையை மணந்தார்

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் நிகேத் பொம்மி ரெட்டி. அதற்கு முன் பல விளம்பர படங்களுக்கும், குறும்படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுத்தம் சரணம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆனார். அதன்பிறகு பிளாக்ஷிப் என்ற வெப் சீரிசுக்கு ஒளிப்பதிவு செய்தார். சமீபத்தில் அன்டே சுந்தரி படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். இந்த நிலையில் நிகேத் பொம்மி ரெட்டி தனது நீண்டநாள் தோழியும், நடிகையுமான மெர்ஸி ஜானை திருமணம் … Read more

பதான் படத்திலிருந்து மிரட்டலான போஸ்டரை வெளியிட்ட ஷாருக்கான்: இதுதான் ரியல் மாஸ், குஷியான ரசிகர்கள்

மும்பை: பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது பதான், ஜவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் பதான் திரைப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி வருகிறார் பதான் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் ஷாருக்கான் சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகளை கடந்துவிட்டார். இது அவ்வளவு எளிதானதல்ல, காரணம் ஷாருக்கான் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து திரையுலகில் அறிமுகமானவர். இந்தியாவின் … Read more

கூகுள் அதிரடி.. 2000 கடன் செயலிகள் தடை..!

இந்தியா முழுவதும் லட்ச கணக்கான மக்கள் இந்தப் போலி கடன் செயலிகள் மூலம் பணத்தை இழப்பது மட்டும் அல்லாமல் மன நிம்மதி இழந்து தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்குத் தள்ளப்படுகின்றனர். இந்த நிலையில் கூகுள் முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. கூகுள் நிறுவனம் ஜனவரி முதல் இந்தியா பிளே ஸ்டோரில் இருந்து 2,000க்கும் மேற்பட்ட லோன் ஆப்-களை விதிமுறைகளை மீறியதற்காகவும், கேள்விக்குரிய மற்றும் சந்தேகத்திற்கு இடமான ஆஃப்லைன் பிகேவயர் ஆகிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கூகுள் நீக்கியுள்ளது. … Read more

களத்தில் எதிரிகள்… வெளியில் நண்பர்கள்… வைரலாகும் கோலி – பாபர் அசாம் வீடியோ!

 Virat Kohli – Babar Azam Tamil News: ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் செப்டம்பர் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் காண்கிறது. இதற்கான இந்திய அணி தூபாயில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்தியா அணி முதல் போட்டியில் … Read more

ஏமாற்றமே மிச்சம் : பாதுகாக்கத் தவறிவிட்ட ஒப்பந்தம் –  அதிர்ச்சியில் மருத்துவர் இராமதாஸ்.!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம், அவர்களின் நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றம் மட்டும் தான் மிஞ்சியிருக்கிறது. போக்குவரத்து தொழிலாளர்களின் குறைந்தபட்ச உரிமைகளைக் கூட பாதுகாக்கத் தவறிவிட்ட இந்த ஊதிய ஒப்பந்தம், தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுகள் … Read more

திருவாரூர்: கோலாகலமாய் நடைபெற்ற அரசு – வேம்பு திருக்கல்யாணம் – திருவடிக்குடில் சுவாமிகள் வாழ்த்துரை!

திருவாரூர் மாவட்டம், குடவாசலை அடுத்த அரசவனங்காடு கிராமத்தில் அருள்மிகு மதிலழகி காளியம்மன் திருக்கோயில் வளாகத்தில், அரசு – வேம்பு திருக்கல்யாணம் நேற்று (24.08.2022 ) நடைபெற்றது. அரச மரமும் வேம்பமரமும் சேர்ந்து நிற்கும் இடங்களில் இந்த தெய்விக மரங்களுக்குத் திருமணம் செய்துவைக்கும் முறை, காலம் காலமாக நடைபெற்று வருகிறது. வேம்பு திருக்கல்யாணம் – அந்த வகையில் அரசவனங்காடு கிராமத்தில் உள்ள பழைமையான அரசு வேம்பு விருட்சங்களுக்கு நேற்று 7-ம் ஆண்டாகத் திருக்கல்யாணம் செய்விக்கப்பட்டது. விரைவில் திருமணம் நடைபெற … Read more

மதுரை | முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டம் தாமதமாவதாக அதிமுக குற்றச்சாட்டு – மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு

மதுரை: முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர்த் திட்டம் தாமதமாகி வருவதாக அதிமுக குற்றச்சாட்டு வைத்ததை அடுத்து மாநகராட்சி ஆணையாளர் விரைந்து சென்று பார்வையிட்டார். மதுரை மாநகராட்சியில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புபடி 14 லட்சத்து 68 ஆயிரத்து 989 மக்கள் வசித்தனர். தற்போது மதுரை மாநகராட்சியின் மக்கள் தொகை 20 லட்சத்தை நெருங்கிவிட்டது. வெளியூர்களில் இருந்து தினமும் மதுரைக்கு வந்து செல்லும் பயணிகளையும் சேர்த்தால் மக்கள் தொகை 20 லட்சத்தை தாண்டிவிடும். தற்போது மாநகராட்சியின் குடிநீர் … Read more

இந்தியாவில் ரூ.20,000-க்கு குறைவான பட்ஜெட்டில் கிட்டும் 5ஜி ஸமார்ட்போன்கள் – ஒரு பட்டியல்

இந்தியாவில் வெகு விரைவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதற்கான பணியில் டெலிகாம் நிறுவனங்கள் பிசியாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், இந்திய சந்தையில் ரூ.20,000-க்கும் குறைவாக பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்ப்போம். இந்த ஸ்மார்ட்டான டிஜிட்டல் யுகத்தில் வசித்து வரும் மக்களுக்கு அத்தியாவசியமானதாக உள்ளது ஸ்மார்ட்போன்கள். அது பள்ளி செல்லும் குழந்தைகள் தொடங்கி அனைத்து வயதினருக்கும் பொருந்தும். செல்போனை வடிவமைத்த மார்ட்டின் கூப்பர் கூட பின்னாளில் அதன் பரிணாம வளர்ச்சியானது இப்படி எல்லாம் … Read more