அதிமுக பொதுக்குழு வழக்கு.. இருதரப்பு வாதத்தின் முடிவில் நீதிபதி அதிரடி உத்தரவு.!

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயா்நீதிமன்றத்தின் தனிநீதிபதி தீர்ப்பு வழங்கியிருந்தார். இந்த உத்தரவை எதிா்த்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் இரு நீதிபதிகள் அமா்வில் கடந்த வாரம் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான இறுதி விசாரணை இன்று நடந்தது. அப்போது, “இந்த வழக்கில் உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்று, எடப்பாடி கே பழனிசாமி தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.மேலும், “பொதுக்குழுவில் எடுக்கும் … Read more

LIGER: டைட்டில் கிரியேட்டிவிட்டி கொஞ்சம் படத்துலயும் இருந்துருக்கலாம்! இதுக்கு எதுக்கு மைக் டைசன்?

மும்பை வீதிகளில் இருக்கும் ஒரு ஏழைச் சிறுவன் எப்படிப் படிப்படியாக உயர்ந்து உலகின் முன்னணி MMA போட்டிகளில் பங்கேற்கிறான் என்பதுதான் ‘லைகர்’. மும்பை மாநகரில் ஷாருக் கான், சல்மான் கானால் மட்டுமே கட்ட முடிந்த அளவுக்கு பார்ஷான ஒரு குட்டி இரும்புக் கொட்டகை அமைத்து, பீச் அருகே தன் தாயார் ரம்யா கிருஷ்ணனுடன் வாழ்கிறார் விஜய் தேவரகொண்டா. மிகவும் ஏழ்மையான பின்னணியில் இருக்கும் விஜய் தேவரகொண்டா எப்படியாவது MMA என்கிற Mixed Martial Arts போட்டிகளில் சாதிக்க … Read more

கனல் கண்ணன் ஜாமீன் கிடைக்குமா? – தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைப்பு

சென்னை: ‘பெரியார் சிலையை உடைக்க வேண்டும்’ என்று பேசியதாக கைது செய்யப்பட்ட திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் ஜாமீன் கோரிய வழக்கை தீர்ப்புக்காக சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், திரைப்பட சண்டைப் பயிற்சி நிபுணர் கனல் கண்ணன், … Read more

25,000 கோடி முறை பார்க்கப்பட்ட கரோனா விழிப்புணர்வு தகவல்கள் – இந்திய தகவல் பணி அதிகாரிகளுக்கு யூடியூப் பாராட்டு

புதுடெல்லி: கரோனா தொடர்பான வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு தகவல்கள் 25,000 கோடி முறை பார்க்கப்பட்டதற்காக இந்திய தகவல் பணி (ஐஐஎஸ்) அதிகாரிகளுக்கு யூடியூப் பாராட்டு தெரிவித்துள்ளது. சர்வதேச ஆய்வுகளின்படி, மனித குலத்தில் நூற்றாண்டுக்கு ஒருமுறை தொற்றுநோய்கள் ஏற்படுகின்றன. இதில் ஒருவகையான ‘கோவிட்-19’ எனும் கரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதிலும் பரவியது. அப்போது கரோனா தொடர்பான தவறான தகவல்களும் மக்கள் மத்தியில் பரவின. இதைத் தடுக்க மத்திய அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் தற்போதும் தொடர்கின்றன. இந்தியா … Read more

பாழாகும் மாணவர்களின் எதிர்காலம்: அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு ரவிக்குமார் எம்.பி. கடிதம்!

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடாததால் எண்ணற்ற மாணவர்களின் எதிர்காலம் பாழாவதாக சுட்டிக்காட்டியுள்ள விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் இது தொடர்பாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் முதுநிலைப் பட்டயபடிப்புக்கு மாணவர்களைச் சேர்த்துவருகிறது. இந்த ஆண்டு (2022) விண்ணப்பம் கோரப்பட்டு மாணவர்கள் நுழைவு தேர்வு எழுதி நேர்முக தேர்வுக்கும் சென்று வந்துள்ளனர். எனது விழுப்புரம் நாடாளுமன்ற … Read more

முதல்வரை தகுதி நீக்கம் செய்ய ஆளுநர் முடிவு? -மாநில அரசியலில் பரபரப்பு!

ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோக்சா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முதல்வர் சோரன் தமது பதவியை தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக சுரங்க உரிமத்தை பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு, முதல்வர் ஹேமந்த் சோரன் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிராக செயல்பட்டுள்ளதாகக் கூறி, பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தது. இந்த புகார் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஹேமந்த் சோரன் முறைகேடாக சுரங்க … Read more

தக்காளி விலை கடும் வீழ்ச்சி தென்காசி விவசாயிகள் வேதனை

தென்காசி சுந்தரபாண்டியபுரம் பகுதியில் தக்காளி அதிக அளவில் விளைவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சந்தையில் வியாபாரிகள் மிகவும் குறைந்த விலைக்கு தக்காளியை விவசாயிகளிடம் கேட்கிறார்கள். வியாபாரிகள், 1 கிலோ தக்காளி ரூ.2-க்கு கேட்கிறார்கள். அவ்வாறு சில வியாபாரிகள், விவசாயிகளிடம் வாங்கி சந்தையில் ரூ.7-க்கு விற்கிறார்கள்.  இதனால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளான விவசாயிகள் சாலை ஓரங்களில் கடை அமைத்து  தக்காளிகளை பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்கிறார்கள். கேரள மாநிலத்தில் இருந்து தென்காசி பகுதிக்கு வரும் பொதுமக்கள் விவசாயிகளிடம் 30 கிலோ தக்காளியை … Read more

பிரான்ஸில் பிச்சைக்காரருக்கு ஏ.டி.எம் கார்டை தந்து விரும்பிய பணத்தை எடுக்க சொன்னவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி! வீடியோ

பிரான்ஸில் பிச்சை எடுக்கும் நபரிடம் தனது ஏடிஎம் கார்டை கொடுத்த நபருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நைஜீரியாவை சேர்ந்த இளைஞர் பிரான்ஸில் உள்ள ஒரு இடத்தில் அமைந்திருக்கும் ஏடிஎம் மையம் அருகே நின்று பிச்சை எடுத்து கொண்டிருந்தார். அப்போது பல ஏழைகளுக்கு உதவி செய்யும் நபர் ஒருவர் அங்கு வந்து தனது ஏடிஎம் கார்டை நைஜீரிய இளைஞரிடம் கொடுத்து உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ அதை எடுத்து கொள் என கூறினார். இதையடுத்து அந்த இளைஞர் கார்டை ஏடிஎம் … Read more

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீடு வழக்கு! தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு  தொடர்பான தனி நீதிபதியன் உத்தரவை எதிர்த்து, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுமீதான விசாரணை இன்று நடைபெற்று முடிந்த நிலையில், நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக, எடப்பாடி கூட்டிய பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் உயர்நீதிமன்றம், உச்சநீதி மன்றங்களில் வழக்கு போட்டார். இந்த வழக்கில் இபிஎஸ் ஜூன் 11ந்தேதி பொதுக்குழுவை கூட்டலாம் தனி நீதிபதி உத்தரவு அளித்தார். இதையடுத்து அதிமுக பொதுக்குகூடி, … Read more

திருவாரூரில் மின்சாரம் திருடிய தனியார் பேக்கரிக்கு ரூ.3 லட்சம் அபராதம்

திருவாரூர்: திருவாரூரில் மின்சாரம் திருடியதாக கூத்தாநல்லூரில் செயல்படும் தனியார் பேக்கரிக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடையின் மேல்புறம் செல்லும் மின் ஒயரின் வழியாக கொக்கியை மாட்டி மின்சாரத்தை பேக்கரி உரிமையாளர் திருடியுள்ளார்.