உலகின் முதல் ஏஐ மசாஜ் சேவையை அறிமுகப்படுத்திய நிறுவனம்: மனித வேலைகளுக்கு சவாலா?

கடந்த இரண்டு ஆண்டுகளில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், மனிதர்களின் வேலைவாய்ப்புகள் குறைவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த Aescape என்ற நிறுவனம், உலகின் முதல் AI இயங்கும் மசாஜ் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உலகளவில் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. AI மசாஜ் Aescape நிறுவனத்தின் நிறுவனர் எரிக் லிட்மேன், அறுவை சிகிச்சை ரோபோக்களை ஒத்த ரோபோக்களைப் பயன்படுத்தி AI மசாஜ் சேவையை வழங்குகிறார். மசாஜ் தொடங்குவதற்கு முன், வாடிக்கையாளர்கள் … Read more

குளித்தலையில் கூகுள் மேப் பார்த்து நடைபாலத்தில் சிக்கிய கார் மீட்பு

கரூர்: குளித்தலை அருகே கூகுள் மேப் பார்த்து சென்றவரின் கார் நடைபாலத்தில் சிக்கியது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் முகமது(50). இவர் காரில் கோயம் புத்தூர் சென்றுவிட்டு மீண்டும் கும்பகோணத்துக்கு நேற்று காரில் திரும்பியுள்ளார். கரூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில் குளித்தலை அருகே தொழுகை நடத்துவதற்காக கூகுள் மேப் மூலம் பள்ளிவாசலை முகமது தேடியுள்ளார். அப்போது, குளித்தலை தென்கரை பாசன வாய்க்காலின் குறுக்கே உள்ள நடைபாலத்தை கடந்து செல்ல வேண்டும் என கூகுள் மேப் காட்டியுள்ளது. … Read more

உ.பி. அரசு நிலத்தில் ரூ.250 மாத வாடகையில் இயங்கும் சமாஜ்வாதி கட்சி அலுவலகம்: காலி செய்ய உத்தரவு

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் முராதாபாத் மாவட்டத்தில் உள்ள சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தை காலி செய்ய அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கட்சியின் நிறுவனர் முலாயம்சிங் யாதவ் பெயரில் 31 வருடங்களாக இந்த இடம் ரூ.250 மாத வாடகையில் இருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உ.பி.யின் முராதாபாத்தில் சமாஜ்வாதி கட்சியின் அலுவலகம் அமைந்துள்ளது. உ.பி.யின் எதிர்கட்சியான சமாஜ்வாதியின் நிறுவனர் முலாயம்சிங் யாதவ் பெயரில் இந்த கட்டிடம், ஜூலை 13, 1994-ல் உபி அரசால் அளிக்கப்பட்டிருந்தது. அப்போது உ.பி.யில் சமாஜ்வாதி … Read more

திருப்பூர் ரிதன்யா வழக்கில் ஏற்பட்ட புதிய மாற்றம்! 3 ஆண்டுகளுக்கு முன்பே விபரீத முயற்சி?

Tirupur Rithanya Dowry Death : திருப்பூரில் வரதட்சனை கொடுமை மற்றும் கணவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட ரிதன்யாவின் உயிரிழப்பு, தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  

ஆசிய கோப்பையில் இருந்து முக்கிய வீரர் விலகல்? இந்தியாவிற்கு பின்னடைவு!

அனைவரும் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆசிய கோப்பை தொடர் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. செப்டம்பர் 9ம் தேதி தொடங்கும் இந்த போட்டிகள் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் நடைபெற வேண்டிய ஆசிய கோப்பை தொடர் UAE நாட்டில் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அனைவரும் எதிர்பார்த்தபடி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் Aல் இடம் பெற்றுள்ளன. இந்த இரண்டு நாடுகளும் செப்டம்பர் 14ஆம் தேதி மோத … Read more

"சிறந்த துணை நடிகர் விருதை வென்ற தம்பி எம்.எஸ். பாஸ்கர்…" – பாராட்டும் கமல்ஹாசன்

திரைக் கலைஞர்களுக்கு மத்திய அரசின் 71-வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், சிறந்த தமிழ் படத்துக்கான விருது, சிறந்த திரைக்கான விருது (இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்), சிறந்த துணை நடிகருக்கான விருது (எம்.எஸ். பாஸ்கர்) என மூன்று விருதுகள் பார்க்கிங் திரைப்படத்துக்கு கிடைத்தது. மேலும், சிறந்த இசையமைப்பாளர் விருது (பாடல்கள்) வாத்தி திரைப்பட இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுக்கு அறிவிக்கப்பட்டது. எம்.எஸ்.பாஸ்கர் மேலும், லிட்டில் விங்ஸ் ஆவணப்படத்துக்காக non-feature film பிரிவில் சிறந்த ஒளிப்பதிவாளர் விருது சரவணமுத்து … Read more

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியதா? டிரம்ப் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு விளக்கம்

டெல்லி: தனது மிரட்டலை தொடர்ந்து இந்தியா ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எப்போதும்போல பதிவு போட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது- இந்த நிலையில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.  இந்த விஷயத்தில்  3-வது நாட்டின் தலையீடு இருக்காது என கூறப்பட்டுள்ளதுடன்,  இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் … Read more

ட்ரம்பின் வரி யுத்தம் – சிக்கலில் இந்திய அமெரிக்க உறவுகள்? உடனடி விளைவுகள் என்னென்ன? | In Depth

முன்னாள் ஆசிரியர், பிபிசி உலகசேவை, லண்டன் கட்டுரையாளர்: மணிவண்ணன் திருமலை இந்திய இறக்குமதிகள் மீது 25 சதவீதம் வரிவிதித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜூலை 31ம் தேதி வெளியிட்ட  அறிவிப்பு இந்திய அரசியல் மற்றும் வர்த்தக, தொழில் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பது வியப்பளிக்கவில்லை.  `அரசியல் ரீதியாக,  கடந்த சுமார் 20 ஆண்டுகளாக மேம்பட்டு வந்த இந்திய – அமெரிக்க உறவுகளை இது பாதிக்கும்’ என்ற கருத்து இருக்கிறது.  பொருளாதார ரீதியாக,  இந்த வர்த்தக வரி விதிப்பு நீடித்தால், … Read more

“நோயாளிகளை மருத்துவப் பயனாளிகள் என அழைக்கலாம்” – ‘நலம் காக்கும்’ திட்டம் தொடங்கிய முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மருத்துவர்களையும், மருத்துவமனையையும் நாடுபவர்களை நோயாளிகள் என்றழைக்காமல், மருத்துவப் பயனாளிகள் என்றழைக்கலாம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘நலம் காக்​கும் ஸ்டாலின்’ திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கிவைத்துப் பேசியது: “சில நாட்களுக்கு முன்னர் எனக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கே சில பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று அனுமதிக்கப்பட்டேன். அங்கு இருந்தபோதும் கூட முக்கியமான அரசு அலுவல்களை மேற்கொண்டேன். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் பற்றி அதிகாரிகள், ஆட்சியர்கள், … Read more

பிஹார் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: செப். 1-ம் தேதி வரை ஆட்சேபனை தெரிவிக்க அவகாசம்

புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. பிஹார் மாநில சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) கடந்த ஒரு மாதமாக தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வந்தது. இந்த நடவடிக்கையின் போது பிஹாரில் இறந்து போனவர்கள், நிரந்தரமாக முகவரி மாற்றம் செய்தவர்கள் என ஆயிரக்கணக்கானோரை கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த ஜூலை 25-ம் தேதி … Read more