பஹ்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வருகை

டெல்லி, இந்தியா – பஹ்ரைன் 5வது உயர்மட்ட கூட்டு ஆணைய கூட்டம் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க பஹ்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்திப் பின் ரஷித் அல்சானி நேற்று இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்த அவரை இந்திய அதிகாரிகள் வரவேற்றனர். அப்ப்துல்திப் பின் ரஷித் அல்சானி இன்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, சர்வதேச அரசியல் சூழ்நிலை, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் … Read more

என்னுடைய திட்டங்களை எளிதாகப் பின்பற்றி விளையாட முயற்சிக்கிறேன் – அர்ஷ்தீப் சிங்

ஹோபர்ட், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. மெல்போர்னில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது போட்டி ஹோபர்ட்டில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் … Read more

அமெரிக்காவில் மானியம் நிறுத்தம்: உணவு கிடைக்காமல் ஏழைகள் அவதி

வாஷிங்டன், அமெரிக்காவில் பெண்கள், குழந்தைகளின் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்ய கடந்த 1975-ம் ஆண்டு கூட்டாட்சி துணை ஊட்டச்சத்து உதவி திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி உணவு வாங்குவதற்காக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தால் சுமார் 4 கோடி பேர் பயன்பெற்று வருகின்றனர். ஆனால் இந்த திட்டத்துக்கான மானியத்தை நிறுத்துவதாக அமெரிக்க வேளாண் துறை சமீபத்தில் அறிவித்தது. இதனால் ஏழை மக்கள் பலரும் உணவு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் … Read more

லண்டன்: “ரயிலில் பயணிகளுக்கு கத்திகுத்து; 8-வது நிமிடத்தில் கைது'' – சம்பவத்தை விளக்கும் காவல்துறை

இங்கிலாந்தின் டான்காஸ்டரில் இருந்து லண்டனின் கிங்ஸ் கிராஸ் நிலையத்திற்கு சனிக்கிழமை மாலை 6:25 மணிக்கு ரயில் ஒன்று புறப்பட்டது. இரவு 7:42 மணிக்கு ரயிலில் இருந்தவர்கள் காவல்துறைக்கு அவசர அழைப்பு எண் மூலம் தொடர்பு கொண்டனர். பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஹண்டிங்டன் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது ரத்தக் களறியுடன் 32 வயது மதிக்கத்தக்க ஒருவர் கையில் கத்தியுடன் வெளியே வந்தார். அவரை காவல்துறை கைது செய்து, ஆயுதத்தையும் மீட்டது. லண்டன் – கத்தி குத்து அதைத் … Read more

சென்னையில் பருவமழையால் ஏற்பட்ட 4,503 சாலை பள்ளங்கள் சீரமைப்பு

சென்னை: பருவமழையால் ஏற்பட்ட 4,503 சாலை பள்ளங்கள் மாநகராட்சி சார்பில் சீரமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் உள்ள உட்புற சாலைகளில்தார் சாலை, சிமென்ட் கான்கிரீட் சாலை மற்றும் இணைப்பு கற்கள் அமைக்கும் பணிக்காக 2025-26 நிதியாண்டில் 3,908 சாலைகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 2,790 சாலைகள் முடிக்கப்பட்டுள்ளன, தற்பொழுது 207 சாலைகளில் சிமென்ட் கான்கிரீட் மற்றும் இணைப்பு கற்களைக் கொண்டு சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பேருந்து தட … Read more

தெலங்கானாவில் பேருந்து மீது டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்து: 20 பேர் உயிரிழப்பு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் செவெல்லா அருகே மிர்ஜாகுடா – கானாபூர் சாலையில் இன்று காலையில் ஆர்டிசி பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் மூன்று மாத பெண் குழந்தை உட்பட 20 பேர் உயிரிழந்தனர். விகாராபாத் – ஹைதராபாத் சாலையில் இன்று காலை 7.30 மணியளவில் இரு சக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது டிப்பர் லாரி ஆர்டிசி பேருந்து மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த பயங்கர விபத்தில் 20 பேர் இறந்ததாக … Read more

சினிமா என்பது ஒரு கொண்டாட்டமாக இருக்க வேண்டும்: நடிகர் ரியோ ராஜ்

சினிமாவை கொண்டாட வேண்டும் என்றுதான் அவரும் (நடிகர் அஜித்குமார்) தெரிவித்துள்ளார். அதைத்தான் நாங்களும் பின்பற்றுகிறோம் என்று நடிகர் ரியோ ராஜ் பேட்டி அளித்துள்ளார்.  

கோவையில் அதிர்ச்சி.. கல்லூரி மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை!

கோவை விமான நிலையம் அருகே 19 வயது சிறுமியை 3 பேர் கொண்ட கும்பல் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

கொல்கத்தா அணிக்கு கேப்டனாகும் பிரபல விக்கெட் கீப்பர்.. சஞ்சு சாம்சன் இல்லை.. யார் தெரியுமா?

KL Rahul Likely To Lead KKR In IPL 2026: 2026 ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. டிசம்பர் மாதம் 13, 15ல் நடக்க இருக்கும் மினி ஏலமே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. பல முக்கிய வீரர்கள் புதிய அணியில் இணைய இருக்கின்றனர். இந்த சூழலில், மற்றொரு முக்கிய வீரர் ஒருவரும் வேறு அணிக்கு மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை … Read more

Jio vs Airtel: தினசரி 3GB டேட்டா திட்டங்கள்: சிறந்த மற்றும் மலிவானது எது?

Jio vs Airtel Recharge Plans: ஜியோ மற்றும் ஏர்டெல் இரண்டும் இந்திய தொலைத்தொடர்புத் துறையில் முன்னணி நிறுவனங்களாக இருந்து வருகிறது. இந்த இரு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல சிறந்த நன்மைகளுடன் கூடிய திட்டங்களை வழங்கி வருகின்றன. அப்படி உங்களிடம் இந்த இரண்டு சிம் கார்டுகளும் உள்ளது என்றால், இந்தக் கட்டுரை உங்களுக்கானது. இன்று 3 ஜிபி தினசரி டேட்டா அணுகலை வழங்கும் இரு நிறுவனங்களின் திட்டங்களைப் பற்றிய இங்கே காணப் போகிறோம். இதன் மூலம் … Read more