மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்துவர தடை!

வேலூர்: மாணாக்கர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் சில மாணவர்கள் பள்ளியின் டெஸ்க் பெஞ்சுகளை அடித்து நொறுக்கிய விவகாரம் தொடர்பான வீடியோ வெளியாகி, அரசு பள்ளியின் அவலம் பொதுமக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், செல்போன் எடுத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக பள்ளி மாணவர்களின் நடவடிக்கை, ஆசிரியர்களே அஞ்சும் வகையில் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் வகுப்பறைக்குள் பாயை விரித்து படுத்து உறங்கிய மாணவனை தட்டிக்கட்ட ஆசிரியரை மாணவன் தாக்கும் … Read more

துணைவேந்தர்களை தமிழகஅரசே நியமிக்கும் மசோதா! ஒப்புதலுக்காக இன்று ஆளுநர் மாளிகை செல்கிறது…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில், நேற்று நிறைவேற்றப்பட்ட துணைவேந்தர்களை தமிழகஅரசே நியமிக்கும் மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்காக இன்று ஆளுநர் மாளிகையான ராஜ்பவனுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று தாக்கல் செய்யப்பட்டு நிறை வேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு அதிமுக, பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. இந்த மசோதா குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராகவும் , இணை வேந்தராக … Read more

மே 4ம் தேதி எல்.ஐ.சி. பொதுப்பங்குகள் வெளியிடப்படும் என தகவல்

சென்னை: மே 4ம் தேதி எல்.ஐ.சி. பொதுப்பங்குகள் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் பொதுப்பங்குகள் மே 4 ஆம் தேதி முதல் துவங்கும் என்றும், இந்த விற்பனை மே 9 ஆம் தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதற்கட்டமாக 5 சதவீத பங்குகளை விற்க முடிவு செய்து, இதற்கான வரைவு அறிக்கையை செபியிடம் மத்திய அரசு தாக்கல் செய்தது. காப்பீட்டு நிறுவனத்தை முழுவதுமாக வைத்திருக்கும் அரசாங்கம், 3.5 சதவீத … Read more

அதிமுக உட்கட்சி தேர்தல்: இன்று உத்தரவு பிறப்பிக்கிறது உயர்நீதிமன்றம்

சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது. அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதிக்க கோரி கே.சி.பழனிசாமி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னதாக மனுதாக்கல் செய்திருந்தனர்.அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது:தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின்,அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டது,கட்சியின் விதிகளுக்கு எதிரானது என்றும்,  ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளருக்கு கட்சியின் பொதுச்செயலாளரின் … Read more

ஐபிஎல் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனை படைத்த தவான்

மும்பை:  சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை ஷிகர் தவான் படைத்துள்ளார். இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இலங்கை 262 ரன்களை எடுத்தது. இதனையடுத்து விளையாடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களை எடுத்து 36 ஆவது ஓவரிலேயே வெற்றிப்பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் ஷிகர் தவான் 86 … Read more

ஐபிஎல் 2022: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி

மும்பை: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் ஷிகர் தவான் அதிகபட்சமாக 88 ரன்கள் அடித்தார். சென்னை அணி பந்து வீச்சாளர்களில் பிராவோ 2 விக்கெட்டையும், மகேஷ் தீக்ஷனா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். … Read more

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்தை எதிர்த்து வழக்கு! கோடை விடுமுறைக்கு பிறகு விசாரணை

டெல்லி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்தை எதிர்த்து வழக்கை கோடை விடுமுறைக்கு பிறகு விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசு, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை கடந்த 2019ம் ஆண்டு,  ஆகஸ்டு 6ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் பகுதியை சட்டசபை உள்ள யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதியை சட்டசபை அற்ற யூனியன் … Read more

வனத்துறை குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் அறிவித்த புதிய அறிவிப்புகள்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை குறித்து பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதாக விவாதம் நடந்து வரும் நிலையில்,  இன்று வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்பொழுது பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் தாங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அறிவித்தார். வனத்துறை புதிய … Read more

தவறான செய்தி கூறிய 16 யூடியூப் செய்தி சேனல்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி

புதுடெல்லி: தவறான செய்திகளை ஒளிபரப்பும் 16 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல்களை 16 சேனல்கள் ஒளிபரப்பியதாகவும், இதனை அடுத்து அந்த சேனல்கள் முடக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது நாட்டின் மத நல்லிணக்கம் வெளியுறவு பாதுகாப்பு குறித்து தவறான தகவல்கள் உறுதி செய்யப்படாத தகவல்கள் ஆகியவற்றை 16 யூடியூப் சேனல்கள் ஒளிபரப்பிய நிலையில் இதில் பாகிஸ்தானைச் … Read more

பெரியார் போல எந்த தலைவரும் எந்த இனத்துக்கும் கிடைத்தது இல்லை – ஸ்டாலின் புகழாரம்

சென்னை: பெரியார் போன்று எந்த தலைவரும் எந்த இனத்துக்கும் கிடைத்தது இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெரியார் திடலில் நீட் தேர்வு எதிர்ப்பு பிரச்சார பயணத்தின் நிறைவு விழா கூட்டம் இன்று நடைபெற்றது வருகிறது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார், அப்போது, இந்த அரசு மக்களுக்கானது, எனவே முடியுமா என்று எண்ணத் தேவையில்லை. முடியாத பலவற்றை நாம் முடித்துக் காண்பித்துள்ளோம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், எந்த நுழைவுத்தேர்வும் … Read more