தேர்வு அறையில் முகக்கவசம் கட்டாயமா?- விளக்கமளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி வரும் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  மாநிலம் முழுவதும் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்களும், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகளும் என மொத்தமாக 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர்,  பிளஸ் டூ பொதுத் தேர்வுகளை எழுதுகின்றனர். இதற்காக தமிழகம் முழுவதும் 3,119 தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த நிலையில், பிளஸ்-2 தேர்வு எழுதும் … Read more

யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக்: பைனலில் லிவர்பூல்

வில்லாரியல்:  யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில்  இங்கிலாந்தின் லிவர்பூல் 10வது முறையாக இறுதியாட்டத்துக்கு முன்னேறியுள்ளது. ஐரோப்பிய கால்பந்து கிளப்களுக்கு இடையிலான யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியின் 2வது சுற்று  ஆட்டங்கள் இன்றுடன் முடிகின்றன. ஸ்பெயினின் வில்லாரியல்  நகரில் நேற்று நடந்த  அரையிறுதி 2வது சுற்றின் முதல் ஆட்டத்தில்   வில்லாரியல்(ஸ்பெயின்), லிவர்பூல்(இங்கிலாந்து) அணிகள் மோதின.வில்லாரியலின் சொந்த மண்ணில் ஆட்டம் நடந்தாலும்  லிவர்பூல் தான் ஆதிக்கம் செலுத்தியது. ஆனாலும் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்தில்  … Read more

1200% டிவிடெண்ட்.. இலக்கு விலை ரூ.9800.. இந்த ஆட்டோமொபைல் பங்கினை வாங்க கூறும் நிபுணர்கள்..!

பங்கு சந்தையில் முதலீடு செய்வதை விட, எப்படி சரியான பங்கினை தேர்வு செய்வது என்பது தான் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களில் ஒன்று. ஏனெனில் ஒரு பங்கினை சரியாக தேர்வு செய்யாவிடில் அதுவே உங்கள் இழப்புக்கு காரணமாக அமையலாம். ஆக பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள் உங்களுக்கு சரியான அனுபவம் இருப்பின் பங்குகளை நீங்களே தேர்வு செய்யலாம். அப்படி இல்லாதபட்சத்தில் நிபுணர்களின் ஆலோசனையுடன், நீங்களூம் பரிசீலித்து வாங்குவது நல்லது? மெகா டிவிடெண்ட் அந்த வகையில் நாம் இன்று … Read more

ஸ்ரீராமாநுஜ ஜயந்தி: நாராயணனுக்கு மட்டும் அல்ல, எல்லோருடைய அன்புக்கும் உரியவர் ஸ்ரீராமாநுஜர்!

1017-ம் ஆண்டு, சித்திரை திருவாதிரை நன்னாளில் ஸ்ரீபெரும்புதூரில் ஆசூரி கேசவசோமயாஜி – காந்திமதி தம்பதியருக்கு ஸ்ரீஆதிசேஷனின் அம்சமாக, திருமாலவன் அருளால், ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் மாமா பெரிய திருமலைநம்பி. அந்தக் குழந்தைக்கு ராமாநுஜன் என்றும், லக்ஷ்மணனின் பெயரான இளையாழ்வார் என்றும் பெயர் சூட்டினார். அந்தக் குழந்தையே வைஷ்ணவத்தின் மாபெரும் ஞானியாக, 1000 ஆண்டுகளுக்கு முன்பே சாதி ஏற்றத்தாழ்வுகளை புரட்டித் தள்ளிய மாபெரும் புரட்சியாளராக உருவெடுத்தது. சிறுவயது முதலே ஸ்ரீராமாநுஜரின் வைஷ்ணவப் பற்றும் பக்தியும் தீவிரமாக … Read more

தமிழக சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்து, சுற்றுலாத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துத்துறை மற்றும் சுற்றுலாத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. சட்டசபையில், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் மார்ச்சில் தாக்கல் செய்யப்பட்டது. துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதம், ஏப்ரல் 6 முதல் நடந்து வருகிறது. இன்று காலை கேள்வி நேரத்திற்குப் பின், போக்குவரத்துத்துறை மற்றும் சுற்றுலாத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. இதுமட்டுமின்றி அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த சட்ட … Read more

ஜோத்பூர் வன்முறை: இதுவரை 140 பேர் கைது- மே 6 வரை ஊரடங்கு நீட்டித்து உத்தரவு

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரம்ஜான் பண்டிகையின்போது கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதில், 4 போலீசார் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.   இதையடுத்து, ஜோத்பூர் பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜோத்பூரில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருந்தாலும் தொடர்ந்து பதற்றமான … Read more

பாலியல் சீண்டல் : விழுப்புரத்தில் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் நன்னாட்டான் பாளையத்தில் பள்ளி ஆசிரியர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் மாவட்ட கல்வி அலுவலர் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.

சந்திரன், செவ்வாயைத் தொடர்ந்து வெள்ளி கோளை ஆராய இஸ்ரோ திட்டம்!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: சல்பியூரிக் அமில மேகங்கள் சூழ்ந்து மிகவும் வெப்பமான கிரகமாக காணப்படும் வெள்ளி கிரகத்திற்குள், என்ன என்ன இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய இஸ்ரோ விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளது. 2024 டிசம்பரில் வெள்ளி கோளுக்கு விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்துள்ளது. அப்போது வெள்ளி கோளும், பூமியும் மிகவும் நெருக்கமாக நேர்கோட்டில் அமைந்திருக்கும். அதனால் விண்கலத்தை குறைந்த அளவு உந்துசக்தியைப் பயன்படுத்தி வெள்ளி கோளின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த முடியும். இதே … Read more

அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை 0.50% உயர்த்தியது.. இந்திய பங்குச்சந்தையை பாதிக்குமா?

அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை எப்போது உயர்த்தும் என உலக நாடுகளின் பங்குச்சந்தைகள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், நேற்று நள்ளிரவில் அதற்கான அறிவிப்பு வெளியானது. அதன்படி, அமெரிக்க ஃபெடரல் வங்கி 0.50 சதவீதமாக இருந்துவந்த வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் உயர்த்தி 1 சதவீதமாக அறிவித்துள்ளது. 20 வருடங்களுக்குப் பிறகு பெடரல் வங்கி இந்த அளவிற்கு வட்டியை உயர்த்தியுள்ளது என கூறுகின்றனர். பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் உயர்வு.. பந்தன் வங்கி சூப்பர் அறிவிப்பு! பணவீக்கம் … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக-வுக்கு டஃப் கொடுக்க, எதிர்க்கட்சிகளின் வியூகம் என்ன?!

தற்போதைய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடிவடைகிறது. எனவே, புதிய குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. அதைத் தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவர் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. 2017-ம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத்தலைவர் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டு, வெற்றிபெற்றவர் ராம்நாத் கோவிந்த். இரண்டாவது முறையாக அவருக்கு பா.ஜ.க வாய்ப்பு கொடுக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. வெங்கய்ய நாயுடு காரணம், `75 வயதைக் கடந்தவர்களுக்கு அரசுப் பதவிகள் … Read more