1முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வர வேண்டாம்! அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வர வேண்டாம்.  தேர்வு நாட்களில், தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வ;நதால் போதும் என பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். இது மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு என்று கூறியுள்ளார். தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரமடைந்துள்ள நிலையில் இன்றுமுதல் 25 நாட்கள் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்கி உள்ளது. வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக, குழந்தைகள் … Read more

1-9 வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வரலாம்- அமைச்சர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரமடைந்துள்ள நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் இன்று தொடங்குகிறது. வருகிற 28ந்தேதி வரை இது நீடிக்கும் நிலையில், வரும் 24ந்தேதி வரை அனல் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார். பிறகு அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:- இதில் 1 முதல் … Read more

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி டீன்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை

சென்னை: அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி டீன்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தி வருகிறார். சம்ஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை விவகாரம், மருத்துவக் கழிவுகளை கையாளுவது உள்ளிட்டவை பற்றி ஆலோசனை நடைபெறுகிறது.

இந்தியாவில் மேலும் 3,205 பேருக்கு கோவிட்: 2,802 பேர் டிஸ்சார்ஜ்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,205 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 2,802 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,205 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,88,118 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 2,802 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,25,44,689 ஆனது. தற்போது 19,509 … Read more

ரிசர்வ் வங்கி கவர்னர் திடீர் அறிவிப்பு.. 2 மணிக்கு முக்கிய அறிக்கை வெளியீடு..!

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று மதியம் 2 மணிக்கு உலகளாவிய பணவீக்க கவலைகள் இந்தியாவின் மீட்சிக்கு சவாலாக இருப்பது குறித்து மிகவும் முக்கியமான அறிக்கையை வெளியிட உள்ளார். ரிசர்வ் வங்கி ஆளுநர் தனது உரையில் என்ன உரையாற்றுவார் என்பது தெளிவாகவும் முழுமையாகவும் தெரியவில்லை. ஆனால் கட்டாயம் பணவீக்கம் மூலம் இந்தியப் பொருளாதாரம் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு இருக்கும் வேளையில் வட்டி விகித உயர்வு குறித்த அறிவிப்புகள் தொடர்பாக இருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அமெரிக்கப் … Read more

நகைகளை மோசடி செய்து தலைமறைவான தோழி?! – புதுச்சேரி பாஜக தலைவரின் மனைவி அதிர்ச்சி

புதுச்சேரி லாஸ்பேட்டையில் பெத்துசெட்டிப்பேட் பகுதியில் வசிப்பவர் சாமிநாதன். மாநில பாஜக தலைவரான இவரின் மனைவி விஜயலட்சுமியும், வானரப்பேட்டையைச் சேர்ந்த கட்டட காண்டிராக்டர் பாபு என்பவரின் மனைவி விஜயகுமாரியும் நெருங்கிய தோழிகள். சிறுவயது முதல் தோழிகள் என்பதால் கடந்த 40 ஆண்டுகளாக சாமிநாதன் குடும்பத்தில் முக்கிய நபராக வலம் வந்திருந்திருக்கிறார் விஜயகுமாரி. விஜயலட்சுமியின் குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவரின் சகோதரியைப் போல உடனிருந்து நடத்தியிருக்கிறார் விஜயகுமாரி. நகைகள் மோசடி – கோப்புப் படம் இந்நிலையில்தான் கடந்த 2018-ம் ஆண்டு … Read more

துருப்புகளை குவிக்கிறது ரஷ்யா! பிரித்தானியா முக்கிய தகவல்

 உக்ரைனில் நிலவும் சூழ்நிலை குறித்து பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகம் புது தகவலை வெளியிட்டுள்ளது. கிழக்கு உக்ரைனில் ரஷ்ய அதன் படைகளை குவிப்பதாக பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. டான்பாஸின் வடக்கில் முன்னேறும் முயற்சியில், ரஷ்யா 22 பட்டாலியன் குழுக்களை கிழக்கு உக்ரைனின் கார்கிவ் பகுதியின் Izium அருகே நிலைநிறுத்தியுள்ளது. உக்ரேனிய பாதுகாப்புகளை உடைத்து முன்னேற போராடிய போதிலும், ரஷ்யா Izium தாண்டி கிராமடோர்ஸ்க் மற்றும் செவெரோடோனெஸ்ட்க் நகரங்களைக் கைப்பற்ற விரும்புகிறது. இது வடகிழக்கு டான்பாஸில் ரஷ்ய ராணுவக் … Read more

சமஸ்கிருத உறுதிமொழி விவகாரம்: மதுரைமருத்துவக்கல்லூரி முதல்வராக மீண்டும் டாக்டர் ரத்னவேல் நியமனம்!

சென்னை: மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வராக டாக்டா் ஏ.ரத்தினவேலை மீண்டும் நியமித்து இருப்பதாக  சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்தார். மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் புதிதாகச் சோ்ந்த மாணவா்களை வரவேற்று வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியில், மாணாக்கர்கள் உறுதிமொழி எடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.  மாணவா்கள் தங்களது சீருடையை அணிந்தபின்பு ஏற்றுக்கொள்ளும் வழக்கமான ‘ஹிப்போகிரட்டிக்’ உறுதிமொழிக்குப் பதிலாக, மாணவா் தலைவர் ஆங்கிலத்தில் மொழிபெயா்க்கப்பட்ட சமஸ்கிருத ‘மகரிஷி சரக் சப்த்’ உறுதிமொழியை வாசித்தனர். இதை … Read more

இலங்கை மக்களுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் நிதி உதவி- கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: இலங்கை மக்களுக்கு உதவ நிதி வழங்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததோடு, தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்திருப்பதை வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த காலங்களில் இலங்கை தமிழர்கள் பெரும் இன்னல்களை பெருமளவில் அனுபவித்திருக்கிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் 1987ம் ஆண்டு, … Read more

நடிகையும் மராட்டிய எம்.பி.யுமான நவ்நீத் ராணாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது மும்பை சிறப்பு நீதிமன்றம்

மும்பை: நடிகையும் மராட்டிய எம்.பி.யுமான நவ்நீத் ராணாவுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. நவ்நீத் ராணாவின் கணவர் ரவி ராணாவுக்கும் சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது .  கடந்த 23-ம் தேதி மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே வீடு முன்பு அனுமன் துதி பாடியதற்காக இருவரும் கைதாகினர்.