வெள்ளப்பெருக்கில் சேதமான பொருட்களுடன் கிடந்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.6.31 லட்சம் அபேஸ்: தமிழ்நாட்டைச் சேர்ந்த லாரி டிரைவர் கைது
திருவனந்தபுரம்: கேரளாவில் இருந்து பழைய வீட்டு பொருட்களுடன் கிடைத்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.6.31 லட்சம் பணத்தை அபேஸ் செய்த தமிழக லாரி டிரைவரை செங்கனூர் போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் செங்கனூரை சேர்ந்தவர் ஷாஜி. இவர் துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். கடந்த இரு வருடங்களுக்கு முன் செங்கனூர் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஷாஜியின் வீட்டுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதில் வீட்டில் இருந்த ஏராளமான பொருட்கள் சேதமடைந்தன. … Read more