கேரளாவில் செயற்கை சுவாச உதவியுடன் தனித்தேர்வு எழுதிய 50 வயது பெண்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் மாவட் டம், வைக்கப்ரயார் பகுதியைச் சேர்ந்தவர் சிமிமோள்(50). இவர் கடுதுருத்தி பகுதியில் உள்ள புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு நிலையிலான தனித்தேர்வு எழுதினார். தீவிரமான நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் சிமிமோள் செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியோடு இந்தத் தேர்வினை எழுதினார். சிமிமோளிற்காக ஒதுக்கப்பட்ட தனி அறையில் ஆக்சிஜன் கலன்கள், சுவாசம் பெறுவதற்கான குழாய் ஆகிய வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. அந்த தனி அறையில் சிமிமோள் 12-ம் வகுப்பு தனித்தேர்வை எழுதினார். … Read more