பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவுக்கு சுகாதாரத்துறை ஒதுக்கீடு

பீகார்: பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவுக்கு சுகாதாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. விஜயகுமார் சவுத்ரி- நிதித்துறை, தேஜ் பிரதாப் யாதவ் சுற்றுச்சூழல், வனத்துறையை ஒதுக்கியுள்ளனர்.

காஷ்மீர் | ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து; 6 பேர் பலி

காஷ்மீர்: காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் 6 பேர் பலியானார்கள். பலரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “இந்திய – சீன எல்லை பாதுகாப்புப் படையினர் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்ற வாகனம் காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. விபத்துக்குள்ளான வாகனத்தில் பாதுகாப்புப் படையினர் 37 பேர் இருந்துள்ளனர். விபத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள் 6 பேர் பலியாகினர். 31 பேர் … Read more

'யாரா இருந்தாலும் கை, கால்களை உடைங்க..!' – சர்ச்சையில் ஆளுங்கட்சி எம்எல்ஏ!

“எதிர்த்து பேசுபவர்கள் யாராக இருந்தாலும் கால்களை உடையுங்கள்” என, மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு எம்எல்ஏ பிரகாஷ் சர்வே பேசி உள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில், சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மறைந்த பால் தாக்கரே உருவாக்கிய சிவசேனா கட்சி, தற்போது, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு, உத்தவ் தாக்கரே தரப்பு என, இரு தரப்பாக செயல்பட்டு வருகிறது. சிவசேனா கட்சிக்கு … Read more

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு: ஒருவர் காயம்

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர்: சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆப்பிள் தோட்டத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் இறந்தவர்களின் சகோதரர் படுகாயமடைந்தார்.

கர்நாடகா: நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்பு

கர்நாடகாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த கிரிதர் என்பவர் நேற்று மாலை தனது குடும்பத்துடன் கர்நாடக மாநிலம் கலபுர்கியில் உள்ள கங்காபூர் கோயிலுக்குச் காரில் சென்று கொண்டிருந்தார்.  அப்போது, கர்நாடக மாநிலம் பிதார் தாலுகாவில் உள்ள பங்கூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்த கிரிதர் (45), அவரது … Read more

திருப்பதி | விஐபி பிரேக் தரிசனம் ரத்தான பிறகும் 60 ஆதரவாளர்களுடன் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை என்பதால், பக்தர்கள் குவிவார்கள் என்பதை எதிர்பார்த்து, முதியோர், குழந்தைகள், தாய்மார்கள், மாற்று திறனாளி பக்தர்கள் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை திருமலை யாத்திரையை தள்ளிப்போட வேண்டும் என்று தேவஸ்தானம் கோரிக்கை விடுத்தது. ஆனால், பக்தர்கள் கடந்த வியாழக்கிழமை முதலே வரத் தொடங்கினர். இதனால், திருமலையில் தற்போது சுவாமி தரிசனம் செய்ய 36 மணி நேரம் … Read more

பீகார் அமைச்சரவை விரிவாக்கம்: தேஜஸ்விக்கு 16; நிதிஷ் குமாருக்கு 11

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார், கருத்து வேறுபாடுகள் காரணமாக, கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து, முதலமைச்சர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். இதை அடுத்து, எதிர்க்கட்சியான, லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான … Read more

தரமற்ற உணவு வழங்கியதால் கேட்டரிங் சர்வீஸ் மேலாளரின் கன்னத்தில் அறைந்த சிவசேனா எம்எல்ஏ

மகாராஷ்டிராவில் மதிய உணவுத் திட்டத்தில் தரமற்ற உணவு வழங்கியதாக கேட்டரிங் சர்வீஸ் மேலாளரை சிவசேனா எம்எல்ஏ கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் மீண்டும் பகிரப்பட்டு வருகிறது. ஹிங்கோலி மாவட்டத்தில் மதிய உணவுத் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா எம்எல்ஏ சந்தோஷ் பங்கர் ஆய்வு நடத்தினார். அப்போது, தரமற்ற உணவு தயாரித்து வழங்கியதாகக் கூறி கேட்டரிங் சர்வீஸ் மேலாளரிடம் சந்தோஷ் பங்கர் வாக்குவாதம் செய்து திடீரென கன்னத்தில் … Read more

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான மாநில அமைச்சரவை விரிவாக்கம்; 31 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பு..!!

பாட்னா: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான மாநில அமைச்சரவையில் 31 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் பகு சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பீகார் மாநில முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்ற நிலையில் அமைச்சரவை இன்று பதவியேற்றது. ஆட்சி கவிழ்ப்பில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொண்டதோடு பாரதிய ஜனதாவையும் ஓரம்கட்டிய நிதிஷ் குமார், தற்போது ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் இடதுசாரிகள் மற்றும் சுயேச்சைகளின் உதவியோடு மீண்டும் முதலமைச்சராகியுள்ளார். முதலமைச்சராக நிதிஷ் குமாரும், துணை … Read more

ஹரியானா | அனைத்து மதத்தினருக்கான ‘இன்குலாப்’ கோயில்: புரட்சி வீரர்களுக்கு பூஜை

புதுடெல்லி: அனைத்து மதத்தினருக்கான ‘இன்குலாப்’ கோயில், ஹரியானாவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 22 வருடங்களாக நாட்டின் சுதந்திரம் பெறப் பாடுபட்ட புரட்சியாளர்கள் பூசிக்கப்படுகின்றனர். சுதந்திரப் போராட்டத்தில் மிகவும் பிரபலமாக எழுப்பப்பட்ட கோஷம், ’இந்துஸ்தான் ஜிந்தாபாத் (இந்தியநாடு வாழ்க)’. இதை முதன்முறையாக 1921 இல் முஸ்லீம் அறிஞரான மவுலானா ஹசரத் மொய்னி எழுப்பியிருந்தார். சுதந்திரப்போராட்ட வீரரான மொய்னி, ஒரு சிறந்த கவிஞராகவும் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவராகவும் இருந்தார். இவரது கோஷத்தை சுதந்திரப் போராட்டத்தில் தூக்கிலிடப்பட்ட பகத்சிங், தொடர்ந்து எழுப்பியதால் … Read more