Breaking: நடிகர் விஜய்யின் வாரிசு படத்துக்கு நோட்டீஸ்..!

அனுமதி பெறாமல் 5 யானைகளை பயன்படுத்தி காட்சிகள் படமாக்கப்பட்டதாக வந்த புகாருக்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவு பிரபல நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தெலுங்கு இயங்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கிய இந்த படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், வாரிசு படத்தை ஆந்திராவில் வெளியிட தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நெருக்கடிக்கு மத்தியில் வாரிசு படத்துக்கு அடுத்தடுத்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது. வாரிசு … Read more

தூது விட்ட டாக்டர்; மடல் கொடுத்த ஸ்டாலின்… திமுகவில் மீண்டும் சரவணன்?

திமுகவில் எம்.எல்.ஏவாக இருந்தவர் டாக்டர் சரவணன். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரையில் இவர் போட்டியிட எண்ணியிருந்த தொகுதி திமுகவின் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதை அடுத்து கட்சியிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார். பிறகு பாஜக சார்பாக களமிறங்கி தோல்வியடைந்தார். இருப்பினும் பாஜகவில் தொடர்ந்து பயணப்பட்டுவந்தார் டாக்டர் சரவணன். இப்படிப்பட்ட சூழலில் சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்தச் சம்பவம் … Read more

எஸ்ஆர்எம் பல்கலை. வளாகத்தில் 2022ம் ஆண்டிற்கான தமிழ் பேராய விருதுகளை வழங்கினார் பாரிவேந்தர் எம்.பி…!!

செங்கல்பட்டு: எஸ்ஆர்எம் பல்கலை. வளாகத்தில் 2022ம் ஆண்டிற்கான தமிழ் பேராய விருதுகளை பாரிவேந்தர் எம்.பி. வழங்கினார். புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது – நிவேதிதா லூயிஸ்; பாரதியார் கவிதை விருது – மௌனன்யாத்ரிகா பெற்றனர். அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது – முருகேசன், விழியன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

திருநள்ளாறு: 4 கால்களுடன் பிறந்த கோழி! வியப்புடன் பார்த்து செல்லும் மக்கள்!

திருநள்ளாற்றில் நான்கு கால்களுடன் பிறந்துள்ள அதிசயமான கோழிக்குஞ்சை அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். காரைக்கால் அடுத்த திருநள்ளாறு பகுதியில் பூமங்களம் கிராமத்தை சேர்ந்த சக்தி முருகன் என்பவரின் வீட்டில் வளர்த்து வரும் கோழி, சில தினங்களுக்கு முன் 10க்கும் மேற்பட்ட கோழி குஞ்சுகளை ஈன்றுள்ளது. அந்த 10-ற்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சிகளில் ஒரு கோழிக்குஞ்சு மிகவும் சுறுசுறுப்பாக ஓடி விளையாடி கொண்டு இருந்தது. இந்த நிலையில் அதனை உற்று நோக்கிய போது, அந்த கோழி குஞ்சிக்கு … Read more

பள்ளி வேனில் சென்ற மாணவிகளுக்கு மூச்சு திணறல்.! மதுரையில் பதற்றம்.! 

மதுரை மாவட்டத்தில் இருக்கின்ற திருப்பாலை பகுதியில் இருக்கும் மகளிர் மேல்நிலைப்பள்ளி வாகனத்தில் அப்பள்ளியில் படிக்கின்ற மாணவிகளை அழைத்து கொண்டு சென்றது. அப்போது, கள்ளந்திரி பகுதிக்கு அருகில் போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதையறிந்த டிரைவர், அங்கு இருந்த சந்து பகுதிக்குள் பள்ளி வாகனத்தை அரை மணி நேரம் நிறுத்தி இருக்கின்றார்.  அப்பொழுது நீண்ட நேரம் பள்ளி வேனில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த காரணத்தால், உள்ளே இருந்த மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு நான்கு பேர் மயக்கமடைந்துள்ளனர்.  … Read more

குட் நியூஸ்.. இவர்களுக்கு 7,500 ரூபாய்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!

தொழில் முறை ஆங்கிலத் தேர்வு எழுத உள்ள செவிலிய மாணவ – மாணவியரின் தேர்வு கட்டண சுமையை குறைக்கும் விதமாக, தலா 7,500 ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இங்கிலாந்து நாட்டில் செவிலியர் பணிக்கு தொழில் முறை ஆங்கிலத்தேர்வு கட்டாயமாகி உள்ளது. இந்தத் தேர்வை எழுதுவதற்காக தமிழக செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளில் இளநிலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் 481 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் தேர்வு செய்த பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி … Read more

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு

சென்னை: சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதிதியில் உதயநிதி ஸ்டாலின் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் எம்.எல்.ரவி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில், “கடந்த 2021-ல் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார்.ஆனால் தேர்தல் வேட்பு மனுவில் தவறான மற்றும் … Read more

இனி வாரந்தோறும் புதன்கிழமை… சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் ஏற்பாடு!

பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகள் ஆங்கிலத்தில் நாலு வார்த்தை பேச வேண்டும் என்பது தான் பல பெற்றோர்களின் விருப்பமாக இருக்கிறது. இதற்காகவே ஆயிரக்கணக்கில் கொட்டி கொடுத்து தனியார் பள்ளிகளில் சேர்த்து விடுகிறோம். அரசு பள்ளிகளில் அப்படியான கற்பித்தல், ஆங்கிலப் பயிற்சி, ஒழுக்கம் உள்ளிட்ட விஷயங்கள் இருக்காது என்ற மனநிலை இன்னும் நிலவி வருகிறது. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு விஷயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்சிக்கு முக்கியத்துவம் … Read more

என் முகம் என்பது மொழி; என் முகவரி என்பது என் இனம்: தமிழருவி மணியன் உரை

செங்கல்பட்டு:  என் முகம் என்பது மொழி; என் முகவரி என்பது என் இனம் என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் சார்பில் தமிழ்ப் பேராய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. விழாவில் தமிழருவி மணியன் உரையாற்றி வருகிறார்.

தேங்காய் எண்ணெய் கூட கொஞ்சம் செம்பருத்தி பூ.. முடி வளர்ச்சிக்கு இந்த எண்ணெய் டிரை பண்ணுங்க

தேங்காய் எண்ணெய் கூட கொஞ்சம் செம்பருத்தி பூ.. முடி வளர்ச்சிக்கு இந்த எண்ணெய் டிரை பண்ணுங்க Source link