புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் சாலையில் விதித்த கட்டுப்பாட்டை திரும்ப பெற முடியாது – உயர்நீதிமன்றம் கருத்து <!– புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் சாலையில் விதித்த கட்டுப்… –>

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் சாலையில் வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதித்த உத்தரவை திரும்பப் பெற அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது குறித்த வழக்கில், இரவில் சரணாலயப் பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதித்த ஆட்சியரின் உத்தரவை அமல்படுத்த உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. இவ்வழக்கில் இன்று நடைபெற்ற விசாரணையில், வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதித்ததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக  அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு, … Read more

பிரச்சாரக் களத்தில் ஒதுங்கும் முக்கிய நிர்வாகிகள்: கலக்கத்தில் மதுரை மாநகராட்சி அதிமுக வேட்பாளர்கள்

மதுரை: மாநகர செயலாளர் செல்லூர் கே.ராஜூவுடனான கோஷ்டி பூசலால் ஒதுங்கி நிற்கும் மாநகர முக்கிய நிர்வாகிகள் கடைசி நேரத்தில் ஏதாவது உள்ளடி வேலைப்பார்பார்களோ என்ற கலக்கத்தில் மதுரை மாநகராட்சி அதிமுக வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். மதுரை மாநகராட்சி அதிமுக மேயராக 2011-2016-ம் ஆண்டு வரை விவி.ராஜன் செல்லப்பா இருந்தபோது, மாநகர செயலாளராக இருந்த செல்லூர் கே.ராஜூ அமைச்சராகவும் இருந்தார். அதனால், மாநகர அதிமுகவில் இருவரும் இரு பெரும் கோஷ்டியாக செயல்பட்டனர். மாநகரத்தில் நடந்த மாநகராட்சி விழாவுகளுக்கு மேயர் … Read more

திருவள்ளூர்: ஆற்றின் வழியே முழங்காலளவு தண்ணீரில் சடலங்களை சுமந்து செல்லும் அவலம்

திருத்தணி அருகே இறந்தவரின் சடலத்தை ஆற்றில் முழங்காலளவு தண்ணீரில் தூக்கி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. அக்கிராமத்தில் சுடுகாடும் இல்லாததால் ஆற்றங்கரையில் கிராம மக்கள் சடலங்களை அடக்கம் செய்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த சூரியநகரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பொம்ம ராஜபுரம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய சுடுகாடு வேண்டி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக இதுதொடர்பாக வட்டாட்சியர் … Read more

வீடியோ: ரயிலில் மோதி நொறுங்கிய பைக்; மயிரிழையில் தப்பிய ஓட்டுனர்

Tamil Viral Update : மும்பையில் ரயில் வருவதற்கு முன் தண்டவாளத்தை கடந்துவிடலாம் என்று சென்ற ஒரு நபர் மயிரிழையில் உயிர் தப்பிய வீடியோ காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்தியா முழுவதும் ரயில் வரும்போது சாலையுடன் தொடர்புடைய கேட்கள் அடைக்கப்படுவது வழக்கமான ஒன்று. ரயில் சென்றவுடன் சிறிது நேரத்தில் அந்த கேட் திறககப்பட்டுவிடும். ஆனால் ரயில் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னமே இந்த கேட் அடைக்கப்டுவதால், பலரும் அவசரமாக செல்ல வேண்டும் என்று … Read more

வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாநகராட்சி ஏற்பாடு.!

நூறு சதவீதம் வக்குப்பதிவை வலியுறுத்தி சென்னை அரசு பள்ளிகளில் வண்ணக்கோலங்கள் வரையப்பட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 100 விழுக்காடு வாக்குப்பதிவை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. சென்னை மாநகராட்சியும் 200 வார்டுகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி பொதுமக்களிடையே 100 விழுக்காடு வாக்குப்பதிவு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள மாநகரட்சி பள்ளிகளில், வண்ணக்கோலங்கள் வரைந்து 100 விழுக்காடு வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு … Read more

திமுக பிரமுகரைத் தாக்கியதாக அதிமுக வேட்பாளர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் சாலை மறியல் <!– திமுக பிரமுகரைத் தாக்கியதாக அதிமுக வேட்பாளர் கைது செய்யப்… –>

சேலத்தில் திமுக பிரமுகரைத் தாக்கியதாக அதிமுக வேட்பாளர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாநகராட்சி 58வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் பாண்டியன் என்பவருக்கும் அதே வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் உறவினரான சின்னு என்பவருக்கும் கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்வது தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் பாண்டியன் தன்னைத் தாக்கியதாக சின்னு கொடுத்த புகாரின் பேரில் பாண்டியனை போலீசார் கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த … Read more

அனுதாபத்தில் வாக்களிக்காதீர்… என் 10 ஆண்டு சேவையை பாருங்கள்! – மதுரையில் மாற்றுத்திறனாளி அதிமுக வேட்பாளர்

மதுரை: அனுபதாபத்தை உருவாக்கி கட்சியில் ‘சீட்’ பெறுவது, அதையே மூலதனமாக கொண்டு தேர்தலில் வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்களுக்கு மத்தியில் மதுரை திருமங்கலம் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் 26-வது வார்டு அதிமுக வேட்பாளர் கால் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி எஸ்.செல்வராஜ் சற்று வித்தியாசமானவர். வாக்காளர்களிடம் தவிழ்ந்து சென்று ஆதரவு கேட்கும் இவர், ‘‘நான் இப்படியிருப்பதால் அனுதாபத்தில் யாரும் வாக்களிக்க வேண்டும். எந்த பதவியும், அதிகாரமும் இல்லாமல் கடந்த 10 ஆண்டாக நமது பகுதியில் செய்த என்னுடைய சமூகப்பணியைப்பார்த்து வாக்களியுங்கள்,’’ … Read more

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்: விடுதி வார்டனிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டம்

தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், சிபிஐ 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளது. ஜாமினில் வெளியே வந்த விடுதி வார்டனிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டி தூய இருதய பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மாணவிகள் விடுதியில் மாணவியை சுத்தம் செய்யக்கூறி வார்டன் கொடுமைப்படுத்தியதால் மாணவி மனமுடைந்து … Read more

கொள்ளை அடிப்பவர்களை இனியும் தலையில் தூக்கிவைத்து ஆட வேண்டாம்: கமல்ஹாசன் பிரச்சாரம்

Tamilnadu Local Body Election : தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ந் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.  இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் வரும் 17-ந தேதியுடன் முடியவடைய உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மதுரையில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் கூறுகையில், அடுத்த முறை … Read more

எல்.ஐ.சி பங்கு விற்பனை : தனியார் நலனுக்காக தேச வளர்ச்சியை காவு கேட்கும் மத்திய அரசு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்.!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மணிலா செயலாளர் கே பாலகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கான அடுத்த நகர்வை அரசாங்கம் செய்துள்ளது. இந்திய பங்குச் சந்தை பத்திர மாற்று ஆணையத்தில் (செபி) நிறுவன தகவல் அறிக்கையை எல்.ஐ.சி தாக்கல் செய்துள்ளது. இது தேச வளர்ச்சிக்கான நிதியாதாரங்களை, சாமானிய நடுத்தர மக்களின் சமூகப் பாதுகாப்பை, கோடானு கோடி பாலிதாரர்களின் நலனை பாதிக்கிற இந்த முடிவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வன்மையாக கண்டிக்கிறது. நாடாளுமன்றத்தில் தனி மசோதாவாக … Read more