மீண்டு வாருங்கள் Doge… மீம்ஸ் மன்னனுக்கு உடல்நலக்குறைவு – சீம்ஸ் அனுப்பிய ஆறுதல்!

நீங்கள் பேஸ்புக், ட்விட்டரில் அதிக நேரம் செலவழிப்பவராக இருந்தால், Doge (நாய்) மீம்ஸ் குறித்து உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். பல்வேறு நகைச்சுவை சூழல்களை நாய்களுக்கு இடையேயான உரையாடல் பாணியில் உருவாக்கப்படும் இந்த மீம்ஸ்கள் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை.  இளைஞர்கள் இந்த வகை மீமஸ்களை பகிர்வது மட்டுமின்றி, Doge மீம்ஸ் கதாபாத்திரங்களை தங்களுடன் ஒப்பிட்டுக்கொண்டு புதிது புதிதாக எண்ணிலடங்கா மீம்ஸ்களை இணையத்தில் குவித்துள்ளனர்.  உலகம் முழுவதும் இந்த வகை மீம்ஸ்கள் பிரபலம் என்ற சூழலில், தமிழ்நாட்டை மட்டும் … Read more

கரோனா பாதிப்பு அதிகரிப்பு – இந்திய மருந்துகளை வாங்க விரும்பும் சீன மக்கள்

பெய்ஜிங்: சீனாவில் இதுவரை இல்லாத அளவில் கரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நடப்பாண்டில் ஃபைசர் நிறுவனத்தின் பாக்லோவிட், அஸ்வுடின் ஆகிய இரண்டு கரோனா தடுப்பு மருந்துகளுக்கு மட்டுமேசீனா அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதுவும், அந்த இரண்டு மருந்துகளும் சில மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கிறது. இந்த நிலையில், தேவை அதிகரித்து வரும் சூழலில் இந்தியாவில் இருந்து மலிவான விலையில் கரோனா ஜெனரிக் மருந்துகளை சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்ய பெரும்பாலான சீனர்கள் விரும்புவதாக சவுத் … Read more

இந்திய இருமல் மருந்தை அருந்தி 18 குழந்தைகள் பலி: உஸ்பெகிஸ்தான் குற்றச்சாட்டு

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை அருந்தியதில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 18 குழந்தைகள் பலியானதாக உஸ்பெகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Doc-1 Max என்ற இருமல் மருந்த உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த மருந்து இந்தியாவின் நொய்டா நகரில் உள்ள மேரியான் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை நாங்கள் ஆய்வுக்கூட பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அதில் எத்திலின் க்ளைக்கால் என்ற நச்சுப் பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதி … Read more

கோவிட் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு.. இந்திய மருந்துகளை கள்ளச்சந்தையில் வாங்குவதில் சீனமக்கள் ஆர்வம்..!

சீனாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் சூழலில், அங்கு மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, கள்ளச்சந்தையில் இந்திய மருந்துகளின் விற்பனை கூடியுள்ளது. சீனாவில் கோவிட் மருந்துகள் கிடுகிடுவென விலை உயர்ந்து வருவதால், இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மலிவான மருந்துகளை கள்ளச்சந்தையில் வாங்க சீனர்கள் விரும்புகின்றனர். சீன அரசு நடப்பு ஆண்டில் இரண்டு கோவிட் தடுப்பு மருந்துகளை மட்டுமே அங்கீகரித்தது. ஃபைசர் நிறுவனத்தின் Paxlovid மற்றும் சீன நிறுவனத்தின் Azvudine, ஆகிய இந்த இரண்டு மருந்துகளும் சீனாவில் … Read more

விஷமாக மாறிய இந்திய இருமல் மருந்து… 18 குழந்தைகள் பலி!

Uzbekistan 18 children death : உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”இந்தியாவின் நொய்டாவை சேர்ந்த மாரியோன் பயோடெக் நிறுவனம் தயாரித்த Doc-1 Max-1 Syrup இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அந்த மருந்தை ஆய்வகத்தில் பரிசோதித்ததில் எதிலின் கிளைகோல்  (ethylene glycol) என்ற நச்சுப்பொருள் மருந்தின் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இந்த மருத்து, மருத்துவர்களின் பரிந்துரை இன்றி, வீட்டில் பெற்றோர்களால் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்று பெற்றோர்களாக இந்த மருந்தை வாங்கியிருக்க வேண்டும் … Read more

அமெரிக்காவில் வீசிய கடும் பனிபுயலால், பனிப்பாறையாக உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி..!

அமெரிக்காவில் வீசிய கடும் பனிபுயலால், உலகப் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி பனிப்பாறையாக உறைந்துள்ளது. வரலாறு காணாத அளவிற்கு வீசிய பனிப்புயல் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்கள் ஸ்தம்பித்தன. குளிர்கால பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கிய நிலையில், ஏரிகள், ஆறுகள் உறைந்துள்ளன. அமெரிக்கா – கனடாவின் எல்லையில் உள்ள நயாகரா நீர் வீழ்ச்சியின் ஒரு பகுதி முற்றிலும் பனிப் பாறையாக உறைந்துள்ளது. சில இடங்களில் மட்டும் பனிப்பாறைக்கு கீழ்ப்பகுதியில் இருந்து தண்ணீர் கொட்டுகிறது. Source … Read more

5 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்..!

சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங், தாய்லாந்து மற்றும் சிங்கப்பூரில் மீண்டும் கோவிட் பரவல் அதிகரித்துள்ளதால் அங்கிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு, விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனையை அடுத்த வாரம் முதல் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு நாட்களில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 6 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பரிசோதித்ததில் இதுவரை 39 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா இன்று டெல்லி … Read more

நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்தது அமெரிக்காவில் தொடரும் பனி சூறாவளி| Niagara Falls is frozen by the ongoing snow storm in the United States

நியூயார்க்,-அமெரிக்காவில் வீசும் பனி சூறாவளி காரணமாக, உலகப் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி பனிப்பாறையாக உறைந்தது. அமெரிக்காவில், கடந்த சில நாட்களாக கடும் பனி சூறாவளி வீசுகிறது. இதனால், நாடு முழுதும் பனிக்கட்டியால் உறைந்து கிடக்கிறது. இந்த கடும் சூறாவளிக்கு நேற்று வரை, 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர். விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏரிகள், ஆறுகள் உறைந்து கிடக்கின்றன. இந்நிலையில், உலகப் புகழ் … Read more

பயங்கரவாதம் வேரோடு ஒழிக்கப்படும் வரை ஓயமாட்டோம்: ஐ.நா.வில் ருசிரா கம்போஜ் பேச்சு

நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி ருசிரா கம்போஜ் இன்று பேசும்போது, உலக நாடுகள் தீவிர கவனத்தில் கொள்வதற்கு முன்பே தசாப்தங்களாக எல்லை கடந்த பயங்கரவாதத்தின் பயங்கரங்களை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. இதில் பல அப்பாவி உயிர்களை இழந்து விட்டோம். பூஜ்ய சகிப்பு தன்மையுடன் பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம். தொடர்ந்து போராடுவோம். எங்களது பிரதமர் குறிப்பிட்டது போன்று, பயங்கரவாதம் வேரோடு ஒழிக்கப்படும் வரை ஓயமாட்டோம். 2 … Read more