டுவிட்டர் குழுவிலிருந்து ஜாக் டோர்ஸி விலகல்| Dinamalar

ஜாக் டோர்ஸி விலகல் டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குனர் குழுவிலிருந்து ஜாக் டோர்ஸி நேற்று விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. டுவிட்டர் நிறுவனத்தை ஜாக் டோர்ஸி டுவிட்டர் உருவாக்கியதில் இருந்து அதன் சி.இ.ஓ-ஆக இருந்த நிலையில், திடீரென பராக் அகர்வால் என்ற இந்தியரை டுவிட்டரின் புதிய சி.இ.ஓ.வாக நியமித்தார். அதன் பிறகு பராக் அகர்வாலுக்கு பதில், ஜாக் டோர்ஸி மீண்டும் சி.இ.ஓ பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இந்த நிலையில் டுவிட்டர் இயக்குனர் குழுவில் இருந்து விலகுவதாக ஜாக் … Read more

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் போரில் பங்கேற்க மறுத்த ரஷிய ராணுவ வீரர்கள் 115 பேர் பணி நீக்கம்

  27.5.2022 04.30: ரஷியாவுக்கு ஆதரவாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ராணுவ வீரர்களை அனுப்ப உள்ளதாக பெலாரஸ் தெரிவித்துள்ளது. ரஷியா உக்ரைன் மீது ராக்கெட் தாக்குதல்களை நடத்த பெலாரஸ் பகுதிகளை பயன்படுத்தி வந்தது. எனினும் இந்த போரில் இதுவரை ரஷியாவிற்கு ஆதரவாத பெலாரஸ் களம் இறங்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் உக்ரைனின் எல்லைப் பகுதிக்கு ராணுவ வீரர்களை அனுப்ப உள்ளதாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார். 03.30: மரியுபோல் துறைமுக பகுதியில் இருந்து நேற்று … Read more

இலங்கையில் நடந்த கலவரம்மாஜி பிரதமரிடம் விசாரணை| Dinamalar

கொழும்பு-இலங்கையில் இம்மாத துவக்கத்தில் நடந்த கலவரம் தொடர்பாக, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். நம் அண்டை நாடான இலங்கையின் கடும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி, கொழும்புவில் உள்ள அவரது அலுவலகத்தின் முன் ஏராளமானோர் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். அதுபோல, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவின் வீட்டின் முன்பாகவும் போராட்டம் நடந்தது. கடந்த, 9ம் தேதி மகிந்த ராஜபக்சே … Read more

பாகிஸ்தான் அரசுக்கு மாஜி பிரதமர் கெடு| Dinamalar

இஸ்லாமாபாத்,-”பாக்., அரசு, அடுத்த ஆறு நாட்களுக்குள் அனைத்து மாகாண சட்டசபைகளையும் கலைத்து தேர்தல் அறிவிப்பு வெளியிட வேண்டும்,” என, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாக்., அரசு கடந்த மாதம் கவிழ்ந்தது. இதையடுத்து பிரதமர் ஷெபாஸ் ஷரீப் தலைமையில் எதிர்கட்சிகளின் கூட்டணி அரசு அமைந்துள்ளது. ‘என் ஆட்சி கவிழ பாக்., ராணுவமும், அமெரிக்காவும் தான் காரணம்’ என கூறி வரும் தெஹ்ரீக் – … Read more

உக்ரைனில் போர் விமானங்களுக்கு என்ஜின் தயாரிக்கும் பட்டறைகள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல்.!

உக்ரைனின் பழமைவாய்ந்த மோட்டார் சிச் நிறுவனத்தின் உற்பத்தி பட்டறைகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்துள்ளார். மோட்டார் சிச் நிறுவனம் சோவியத் காலத்தில் இருந்து உக்ரைன் விமானப்படைகளின் போர் விமானங்களுக்கு என்ஜின்களை தயாரித்து கொடுத்து வந்தது. துல்லியமான நீண்ட தூர வான் மற்றும் கடல் அடிப்படையிலான ஏவுகணைகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

“உக்ரைன் கதை முடிந்தது; போலந்து தான் அடுத்த இலக்கு” ரஷ்ய அதிபர் புதினின் ஆதரவாளர் ராம்ஜான் கடிரோவ் எச்சரிக்கை

உக்ரைனுக்கு அடுத்தபடியாக போலந்து நாட்டை தாக்க திட்டமிட்டிருப்பதாக ரஷ்ய ஆதரவாளரும் செசன்ய குடியரசு தலைவருமான ராம்ஜான் கடிரோவ் (Ramzan Kadyrov) எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், உக்ரைனின் கதை முடிந்து விட்டது எனவும் போலந்தின் மீது தாக்குதல் நடத்த ஆர்வமாக இருப்பதாகவும் கூறுகிறார். உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அடுத்த 6 நொடிகளில் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை நிகழ்த்தி காட்டுவோம் என கூறியுள்ள ராம்ஜான் கடிரோவ், ஆயுதங்களுடன் போருக்கு தயாராக இருக்குமாறு போலந்தை … Read more

‘இங்கிலாந்தின் முதல் தலித் பெண் மேயர்’ – லண்டன் கவுன்சிலின் மேயர் ஆன மிதா!

லண்டன்: இந்திய வம்சாவளியும், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவருமான மொஹிந்தர் கே மிதா, லண்டன் கவுன்சிலின் மேயராக பதவியேற்றுக் கொண்டார். இவர் லண்டன் கவுன்சிலின் முதல் தலித் பெண் மேயர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். செவ்வாயன்று நடந்த கூட்டத்தில், 2022-23-க்கான மேற்கு லண்டனின் மேயராக மிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். மிதா 2,272 வாக்குகளுடன் இந்த வெற்றியை பெற்றுள்ளார். மேயர் தேர்தல் பிரசாரத்தின்போது, கரோனாவிலிருந்து வாழ்வாதாரத்தை மீட்டெடுத்தல், கவுன்சில் செயல்பாட்டை வெளிப்படையாக மாற்றுதல் குறித்த கருத்துகளை எடுத்துரைத்தார். இதுகுறித்து … Read more

பிரான்சில் அந்தரத்தில் 2 ஆயிரத்து 200 மீட்டர் நீள கயிற்றின் மீது நடந்து சென்று புதிய உலக சாதனை.!

பிரான்சில் அந்தரத்தில் 2 ஆயிரத்து 200 மீட்டர் நீள கயிற்றின் மீது நடந்து சென்று ஒருவர் புதிய உலக சாதனை படைத்தார். மோன்ட் செயிண்ட் – மிச்செல் தீவில் பாரம் தூக்கும் கருவிக்கும், மடாலயம் இடையே கட்டப்பட்டிருந்த கயிற்றின் மீது நாதன் பாலின் என்பவர் வெறும் காலில் நடந்து சென்று பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். அவர் கயிற்றின் மறுமுனையை 2 மணி நேரத்தில் அடைந்தார். Source link

போராடிய மக்கள் மீது தாக்குதல்: மகிந்தா ராஜபக்சேவிடம் இலங்கை போலீஸார் விசாரணை

கொழும்பு: இலங்கையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து முன்னாள் பிரதமர் மகிந்தா ராஜபக்சேவிடம் இலங்கை சிபிசிஐடி போலீஸார் 3 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர். இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை அர அரசியலில் அங்கம் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக்கோரி கொழும்பில் நாடாளுமன்றம் செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் போராடி வருகின்றனர். அண்மையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ராஜபக்சே ஆதரவாளர்கள் … Read more

ரூ.12 லட்சத்தில் நாய் போல் மாறிய மனிதன் – வைரலாகும் வீடியோ!

ஜப்பான் நாட்டில், 12 லட்சம் ரூபாய் செலவு செய்து, ஒருவர் நாய் போல் மாறி உள்ளது, வியப்பை ஏற்படுத்தி உள்ளது. வாழ்க்கையில், மனிதனுக்கு பல ஆசைகள் இருக்கும். ஒருவருக்கு, ஐஏஎஸ் ஆக வேண்டும்; ஐபிஎஸ் ஆக வேண்டும்; முதலமைச்சர் ஆக வேண்டும்; பிரதமர் ஆக வேண்டும்; நடிகராக வேண்டும் என, இப்படி பல ஆசைகள் இருக்கும். ஆனால் கிழக்கு ஆசிய நாடான ஜப்பானைச் சேர்ந்த நபர் ஒருவர், மனிதனாக வாழ்ந்து போரடித்து விட்டு எனக் கூறி, நாய் … Read more