தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ஒருவார வசூல் இத்தனை கோடிகளா?

நடிகர் தனுஷ் நடிப்பில் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம், 7 நாட்களிலேயே 50 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், மித்ரன் ஆர் ஜவஹர் எழுத்து இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி கடந்த 18-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்தில் ஷோபனா கதாபாத்திரத்தில் நடிகை நித்யா … Read more

இலவசமா? மக்கள் நலத் திட்டமா? இதனால் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சி என்ன?

India bbc-BBC Tamil தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் குறித்து அறிவிக்கக்கூடாது என வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாநில அரசுகள் தம் மாநில மக்களுக்கு ‘விலையில்லா பொருட்களை’ அளிப்பது சரியா என்ற விவாதம் எழுந்திருக்கிறது. அரசியல் கட்சிகள் தேர்தலின்போது, இலவசங்கள் அளிக்கப்படும் என்ற வாக்குறுதியைத் தரலாமா என்ற விவாதம் நாடு முழுவதும் எழுந்திருக்கிறது. நீதிமன்றங்களில், தொலைக்காட்சிகளில், அரசியல் தலைவர்களின் செய்தியாளர் சந்திப்புகளில் இந்த விவகாரம் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. மக்களுக்கு விலையில்லாமல் பொருட்களை வழங்குவது என்பது இந்தியாவில் … Read more

ஒரே நேரத்தில் கமல் – ராம்சரண் படப்பிடிப்பு நடக்கும் : ஷங்கர் அறிவிப்பு

இயக்குனர் ஷங்கர் எப்போதுமே மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான படங்களை எடுப்பவர். அதனால் அவர் ஒரு படத்தை இயக்கி முடித்ததும் தான், அடுத்த படத்திற்கு செல்வார். ஆனால் தற்போது கொரோனா தாக்கம் உள்ளிட்ட சில கால சூழ்நிலைகளால், ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கும் சூழ்நிலைக்கு ஆளாகி இருக்கிறார் இயக்குனர் ஷங்கர். 25 வருடங்களுக்கு முன்பு கமல் – ஷங்கர் கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு துவங்கினார் … Read more

ஒரே சமயத்தில் இத்தனை போட்டோவா?…லீக்கான போட்டோக்களால் ஷாக்கில் பொன்னியின் செல்வன் டீம்

சென்னை : இந்திய சினிமாவே அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீசாக உள்ளது. உலகம் முழுவதும் இந்த படத்தை பிரம்மாண்டமா ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. வரலாற்று காவியமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தில் மொத்தம் 50 … Read more

WFH குறித்து பிரதமர் மோடி என்ன கூறியிருக்கிறார் பாருங்க.. ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்

பிரதமர் நரேந்திர மோடி தொழிலாளர்கள் மாநாட்டில், வீட்டில் இருந்து பணி புரியும் சூழல் மற்றும் பெண்களுக்கு பணியாற்ற உகந்த நேரம் ஆகியவற்றை உள்ளடக்கிய தொலை நோக்கு பார்வையை உருவாக்க மத்திய தொழிலாளர் அமைச்சகம் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால், ஆகஸ்ட் 25 – 26 தேதிகளில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இரண்டு நாள் தொழிலாளர் உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் வீடியோ கான்ப்ரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். … Read more

நீங்களும் இந்த சீசன் பிக் பாஸ் போட்டியாளர் ஆகலாம்: விஜய் டி.வி முக்கிய அப்டேட்

பிக்பாஸ் சீசன் 6 விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ப்ரமோ மூலம் விஜய் டிவி அறிவித்துள்ளது. ரசிகர்களின் ரசனைக்கேற்ப ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்புவதில் முன்னணியில் உள்ள விஜய் டிவியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 6-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. எவ்வித தொடர்பும் இல்லாமல் சக … Read more

மனம் கவர்ந்த ஆசிரியர் அவர்களுக்கு! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் என் அப்பா சுங்க இலாகா அதிகாரி என்பதால் எனது பள்ளி மற்றும் கல்லூரி பருவம் பாண்டிச்சேரி , எடப்பாடி மேட்டூர், தர்மபுரி, வளவனூர், விழுப்புரம் இப்படி பல ஊர்களில்.. அதனால் ஒரு ஆசிரியருக்கு மட்டும் நன்றி சொல்வது என்பது முடியாத காரியம். பாண்டிச்சேரியில் … Read more

“திமுகவில் இருந்த அதிகாரப் போட்டிகள் தெரியாதா?” – முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக பதிலடி

மதுரை: “அதிமுகவிற்கு தகுதி இல்லை என்று முதல்வர் கூறுவது, ஜனநாயக பாதையில் இருந்து அவர் சர்வாதிகார பாதையில் பயணிக்க தொடங்கிவிட்டாரா என்ற கேள்வியை எழுப்புகிறது” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “கோவை, பொள்ளாச்சி போன்ற நகரங்களுக்கு சென்று நலத்திட்டம், பொதுக்கூட்டங்களில் முதல்வர் பேசிய விதம் முரணானது. பிரதான எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி ஆளுங்கட்சியின் அவல நிலை, நிர்வாக சீர்கேட்டு, மக்கள் விரோதப் போக்கு, அறிவித்த திட்டங்களை … Read more

தமிழ்நாட்டில் செப்.1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு: எவ்வளவு தெரியுமா?

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் சுங்கச்சாவடிகள் உள்ளதாக தரவுகள் கூறுகின்றன. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 800-க்கும் கூடுதலான சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில் 566 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவற்றில் 48 சாவடிகள் தமிழகத்தில் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளையும், மாநில நெடுஞ்சாலைகளையும் பராமரித்தல் மற்றும் மேம்படுத்துவதற்காக அனைத்து வாகனங்களிடமும் சாலை வரி வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, பெட்ரோல், டீசல் மீதும் லிட்டருக்கென்று சாலை மற்றும் உட்கட்டமைப்பு கூடுதல் தீர்வையாக வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 28 சுங்க … Read more

அதிமுக அலுவலக கலவர விவகாரம்; ஓபிஎஸ் உள்ளிட்டோர் மீது 7 பிரிவுகளின் வழக்குப்பதிவு

அதிமுக பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டி, எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தனர். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக அலுவலகம் சென்றது. அங்கு ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இருந்த நிலையில், இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் அப்பகுதியே கலவர பூமியாக காட்சியளித்தது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் உத்தரவின்படி அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான சிவி சண்முகம் … Read more