இண்டிகோவின் 6 புதிய நிறுவனம்.. வெளிநாடு செல்லும் பயணிகள் மகிழ்ச்சி!

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ விமான நிறுவனம் புதிதாக 6 விமானங்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. உள்நாட்டு விமான போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில் கடந்த ஆண்டு 38 புதிய விமானங்களை அறிமுகப்படுத்திய இண்டிகோ, தற்போது வெளிநாட்டு விமான பயணத்தையும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையிலான தொடர்பை அதிகரிக்க இண்டிகோ நிறுவனம் 6 புதிய விமானங்களை அறிமுகப்படுத்த உள்ளதால் வெளிநாட்டு விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். … Read more

மூக்கு வழியே கோவிட்-19 தடுப்பு மருந்து; பாரத் பயோடெக்கிற்கு மத்திய அரசு அனுமதி!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இன்னமும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. இந்தியா உள்ளிட்ட நாடுகள், கொரோனா தொற்றுக்கு தடுப்பூசிகளை கண்டறிந்து, மக்களுக்கு செலுத்தியதன் பயனாக, தொற்றுப் பரவல் குறைந்துள்ளது. எனினும், கொரோனாவை முழுமையாக விரட்டும் நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாவுக்கு மூக்கு வழியே செலுத்தும் தடுப்பு மருந்தின் பயன்பாட்டுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டாவியா வேண்டாம் டாட்டூ மோகம்… கொட்டிக்கிடக்கும் ஆபத்துகள்… எச்சரிக்கும் மருத்துவர்! … Read more

சீரான விநியோகம் இல்லாததால் சென்னையில் 2-வது நாளாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு

சென்னை: எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 4 நாட்களாக பெட்ரோல் பங்குகளுக்கு சீரான விநியோகம் செய்யாததால், சென்னையில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் இரண்டாவது நாளாக இன்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் மதிப்பு மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பின் அடிப்படையில், தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படும். இந்தநிலையில், கடந்த 108 நாட்களுக்கும் மேலாக சென்னையில் எந்தவிதமான மாற்றமும் இன்றி பெட்ரோல் லிட்டர் 102 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் … Read more

அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக ‘சின்னதல’ சுரேஷ் ரெய்னா அறிவிப்பு…

டெல்லி: ஐபிஎல் உள்பட அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக  ‘சின்னதல’ என்று சிஎஸ்கே ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா அறிவித்து உள்ளார்.  அனைத்து வகையான கிரிக்கெட் விளையாட்டுகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது ஓய்வுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள சுரேஷ் ரெய்னா,   நாட்டுக்காகவும், உத்தர பிரதேச மாநிலத்துக்காகவும் விளையாடியது, தனக்கு கிடைத்த மிகப்பெரும் மரியாதை.  தனக்கு ஆதரவு அளித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், உத்தர பிரதேச கிரிக்கெட் சங்கம், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் … Read more

காஸ் திறந்துவிட்டு தற்கொலைக்கு முயற்சி காப்பாற்ற சென்றவர்கள் சிலிண்டர் வெடித்து காயம்: உயிர் பிழைத்தவர் தூக்கிட்டு சாவு

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் காஸ் சிலிண்டரை திறந்து வைத்து தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்ற சென்றவர்கள் சிலிண்டர் வெடித்ததில் படுகாயம் அடைந்தனர். தற்கொலை முயற்சி தோல்வியில் முடிந்ததால் வாலிபர் தூக்கிட்டு இறந்தார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே மலையடிப்பட்டி சம்மந்தபுரத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (38). இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்துவிட்டு மதனிப்பட்டியில் உள்ள சகோதரி முத்துமாரி வீட்டிற்கு செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை மீண்டும் … Read more

தயாரிப்பாளர் ஆனார் பாபி சிம்ஹா

சென்னை: நேரம், ஜிகர்தண்டா, பேட்ட, சாமி 2, திருட்டப்பயலே 2, சூது கவ்வும் உள்பட பல படங்களில் நடித்தவர் பாபி சிம்ஹா. இப்போது தயாரிப்பாளராக மாறியுள்ளார். அறிமுக இயக்குநர் ஜே.வி.மது கிரண் இயக்கத்தில் தயாராகும் …

ஆப்கனை சேர்ந்த 2 பேர் கைது ரூ.1,200 கோடி மதிப்பிலான போதைப் பொருள் சிக்கியது: டெல்லியில் பரபரப்பு

புதுடெல்லி: டெல்லியில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 2 பேரிடம் இருந்து ரூ.1,200 கோடி மதிப்பிலான போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது. டெல்லியில் போதைப்பொருள் குற்றங்களை கண்காணிக்க சிறப்பு போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. 2 பேர் அதிக மதிப்புள்ள போதைப் பொருளை கடத்துவதாக இவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் நேற்று தீவிர சோதனையில் இறங்கினர். அப்போது, மிதாபூர் சாலை, கலிண்டி கஞ்ச் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான … Read more

என்.எஸ்.இ., முன்னாள் தலைவர் ரவி நாராயணன் கைது| Dinamalar

புதுடில்லி- பண மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள என்.எஸ்.இ., எனப்படும் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைவர் ரவி நாராயண் கைது செய்யப்படடார். .தேசிய பங்குச் சந்தையின் ஆலோசகராக ஆனந்த் சுப்ரமணியன் என்பவரை நியமனம் செய்ததில் மோசடி நடந்ததாக, என்.எஸ்.இ.,யின் முன்னாள் நிர்வாக இயக்குனர்களான சித்ரா ராமகிருஷ்ணா, ரவி நாராயண் ஆகியோர் மீது, ‘செபி’ எனப்படும் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு குற்றஞ்சாட்டியது. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் நிர்வாக இயக்குனர் என்.எஸ்.இ., … Read more

கமல் பின்னணி குரல் கொடுக்க ‛பொன்னியின் செல்வன்' டிரைலர் வெளியீடு : மிரட்டும் பிரமாண்டம்

கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வனை படமாக்க எம்ஜிஆர், கமல் உள்ளிட்டோர் முயற்சித்த நிலையில் அது நடக்கவில்லை. தற்போது மணிரத்னம் அதை படமாக எடுத்து சாதித்து விட்டார். இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இந்த படத்தின் முதல்பாகம் செப்., 30ல் வெளியாக உள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், ரகுமான், ஐஸ்வர்ய லட்சுமி, ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயசித்ரா, பிரகாஜ்ராஜ், சோபிதா துலிபாலா உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் … Read more

கத்திக்குத்து கொலையாளி உடல் மீட்பு| Dinamalar

வெல்டன்:கனடாவில் தொடர் கத்திக் குத்து சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் இருவரில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.வட அமெரிக்க நாடான கனடாவின் சாஸ்கத்செவான் மாகாணத்தில், நேற்று முன்தினம் வெவ்வேறு இடங்களில், கத்திக்குத்து சம்பவங்கள் நடந்தன. இதில், 10 பேர் உயிரிழந்தனர்; 18 பேர் காயமடைந்தனர்.இந்த சம்பவத்தில், டேமியன் சேன்டர்சன், 31, அவருடைய சகோதரர் மைல்ஸ் சேன்டர்சன், 30, ஈடுபட்டதாக போலீசார் சந்தேகப்படுகின்றனர்.இந்நிலையில், கத்திக் குத்து சம்பவம் நடந்த ஒரு இடத்துக்கு அருகே, புதரில் இருந்து டேமியன் சேன்டர்சனின் உடல் நேற்று … Read more