கடந்த மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனை ரூ.11 லட்சம் கோடி

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த மாதத்தில் யுபிஐ மூலம் ரூ.11.16 லட்சம் கோடிக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை நடந்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை கிராமங்கள் வரை சென்றடையக் காரணமாக இருந்தது யுபிஐ தான்.   கட்டணமில்லா சேவை என்பதால் கூகுள் பே, போன் பே போன்ற ஆப் கள் மூலமாக யுபிஐயை பயன்படுத்தி பெட்டிக்கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை மக்கள் பணம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தேசிய பரிவர்த்தனை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாடு முழுவதும் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும் … Read more

'சாதிய மோதல்களை தடுக்க கைதிகள் தனி அறையில் தங்கவைப்பு' – சிறைத்துறை டிஐஜி பழனி தகவல்

தமிழகத்தில் நன்னடத்தை சிறைவாசிகளை கொண்டு மேலும் 5 பெட்ரோல் நிலையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக சிறைத்துறை டிஐஜி பழனி தெரிவித்துள்ளார். மேலும் சாதிய மோதல்களை தடுக்க கைதிகள் தனி அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆய்வு செய்த சிறைத்துறை டிஐஜி பழனி, நன்னடத்தை சிறைவாசிகளை கொண்டு செயல்படுத்தப்படும் பெட்ரோல் நிலையத்தில் மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்தார். பாளையங்கோட்டை சிறைவாசிகளை கொண்டு நடத்தப்படும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 5 கோடி … Read more

பாலியல் சித்ரவதை 10 வயது சிறுவன் பலி| Dinamalar

புதுடில்லி :டில்லியில், நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து ௧௦ வயது சிறுவனை பாலியல் ரீதியாக கடுமையாக சித்ரவதை செய்ததை அடுத்து, அச்சிறுவன் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தான்.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, புதிய சீலாம்பூர் பகுதியைச் சேர்ந்த ௧௦ வயது சிறுவன், அங்குள்ள அரசு பள்ளியில் ௫ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த மாதம், இச்சிறுவனின் நண்பர்கள் மூன்று பேர், இவனை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுவன் … Read more

பொன்னியின் செல்வன் முதல்நாள் வசூல் : தமிழில் புதிய சாதனை

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படம் உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரபு, ஐஸ்வர்ய லட்சுமி, விக்ரம் பிரபு, ஜெயராம் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்து இருந்தார். கல்கி எழுதிய நாவலை படமாக்கியுள்ளதால் இப்படத்திற்கு தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் இப்படம் பெரும் ஆவலைத் தூண்டியது. அதற்கு சாட்சியாக … Read more

சென்னையில் இருந்து கூடுதலாக 938 பேருந்துகள் இயக்கம்..!!

அக்டோபா் முதல் வாரத்தில் 2ம் தேதி காந்தி ஜயந்தி விடுமுறை, 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை மற்றும் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்லதிட்டமிட்டுள்ளனர். அவர்களுக்கு பயனளிக்கும் வகையில், நேற்றும், இன்றும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து, வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக, 2,050 சிறப்பு பேருந்துகளும், மற்ற ஊர்களில் இருந்து 1,650 சிறப்பு … Read more

02.10.22 ஞாயிற்றுக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | October – 02 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

என் குப்பை என் பொறுப்பு… ஆளும் கட்சியினருக்கு அந்தப் பொறுப்பு கிடையாதா?

கள்ளக்குறிச்சி: ’என் குப்பை என் பொறுப்பு’ என அரசு ஒருபுறம் பல கோடிகளை செலவழித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் வேளையில், மறுபுறம் ஆளும்கட்சியினரே சாலைகளிலும் பொது இடங்களிலும் குப்பைகளை உருவாக்கி அசுத்தமாக்கி வருகின்றனர். நாட்டை தூய்மைப்படுத்தவும் நோய்களைத் தீர்க்கவும் அரசாங்கத்தை எதிர்பார்ப்பதோடு அரசாங்கத்தைக் குறை கூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். கோடிக்கணக்கானோர் கொட்டும் கழிவுகளை அரசாங்கம் ஒரு சிலரைக் கொண்டு தூய்மைப்படுத்துவதென்பது சிம்ம சொப்பனமே. இறுதியில் பெரும் துன்பத்திற்கு ஆளாவது மக்களாகிய நாம் மட்டுமே. எனவே, வளர்ந்த நாடுகளில் … Read more

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதியா? மோசடித்தனமில்லையா? – சீமான் கேள்வி!

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பேரணிக்கு நவம்பர் 6 ஆம் தேதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பேரணியை நவம்பர் 6 அன்று நடத்திக் கொள்வதற்கு அனுமதியளித்துத் தீர்ப்பு வழங்கியிருக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் முடிவு பெரும் ஏமாற்றமளிக்கிறது. ஆர்எஸ்எஸ்ஸின் பேரணி நடத்தப்பட்டால், சட்டம் – ஒழுங்கும், சமூக அமைதியும் குலைக்கப்படுமெனக் கருதி, தமிழக அரசு அதற்கு அனுமதி மறுத்திருக்கும் நிலையில், சட்டம் – … Read more

ஜிஎஸ்டி நிலுவை தொகையை தமிழகத்துக்கு உடனே தர வேண்டும்; ஒன்றிய அமைச்சரிடம், தமிழக நிதியமைச்சர் வலியுறுத்தல்

புதுடெல்லி: தமிழகத்துக்கு தராமல் நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி நிலுவை ெதாகையை உடனே விடுவிக்க வேண்டும்  என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஐன் வலியுறுத்தி உள்ளார். தமிழக அரசு சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 2ம் கட்ட ரயில்வே பணிகள் வேகமெடுத்துள்ளன. அதற்கான நிதியை தமிழக அரசு ஏற்கனவே அளித்துள்ள நிலையில், ஒன்றிய அரசு இதுவரை வழங்காமல் தாமதித்து … Read more

குறைந்த விலைக்கு பாலை பெற்று ஆவினில் விலையேற்றி விற்பது வருத்தமளிக்கிறது- உற்பத்தியாளர்கள்

குறைந்த விலையில் பாலைப் பெற்றுக்கொண்டு அதன் உப பொருட்களின் விலையை உயர்த்தி விற்பது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ள பால் உற்பத்தியாளர்கள், பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தியுள்ளனர். உலகளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலாவது இடத்திலும், இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளன. இருப்பினும், தமிழ்நாட்டில் பால் உற்பத்தி செய்து வரும் விவசாயிகளின் நிலை மிக மோசமாக இருப்பதாக கவலை தெரிவிக்கப்படுகிறது. பால் உற்பத்திக்கானச் செலவு அதிகரித்துள்ள போதிலும் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை என்று மதுரை … Read more