பேருந்தில் பயணிகளை தகாத வார்த்தையால் திட்டிய பெண் நடத்துனர்! சர்ச்சையைக் கிளப்பிய வீடியோ!

கேரள அரசு  பேருந்தில் ஏறி இருந்த பயணிகளை தகாத வார்த்தையால் திட்டும் பெண் நடத்துனரின் வீடியோ வெளியாகியுள்ளது. கேரள அரசுப் பேருந்து ஒன்று இன்று மதியம் 12 மணிக்கு திருவனந்தபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த பேருந்தில் 15க்கும்  மேற்பட்ட பயணிகள் அமர்ந்திருந்தனர். அப்போது அந்த பேருந்தின் பெண் நடத்துனர் தாம் சாப்பிடப் போவதாக வும் எனவே பயணிகள் அனைவரையும் கீழே இறங்குமாறும் கூறியுள்ளார். அப்போது பேருந்தில் இருந்த ஒரு சிலர் பேருந்தில் உங்களுக்கு … Read more

பல்கலையில் ஒப்பந்த முறையில் நிபுணர்கள் :யு.ஜி.சி., புதிய வழிகாட்டுதல்| Dinamalar

புதுடில்லி :’புரொபசர்ஸ் ஆப் பிராக்டிஸ்’ என்ற திட்டத்தின் கீழ், பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லுாரிகள் ஒப்பந்த அடிப்படையில் பயிற்சி பெற்ற நிபுணர்களை பேராசிரியர்களாக நியமித்துக் கொள்ள, யு.ஜி.சி., எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டுதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.யு.ஜி.சி., வெளியிட்ட புதிய வழிகாட்டுதல் அறிக்கை:பொறியியல், அறிவியல், மீடியா, இலக்கியம், தொழில் முனைவு, சமூக அறிவியல், நுண்கலைகள், சிவில் சர்வீசஸ் மற்றும் ஆயுதப் படைகள் உள்ளிட்ட துறைகளில் உள்ள நிபுணர்களை பயிற்சி பேராசிரியர்களாக நியமிக்கலாம். 15 ஆண்டுகள் அனுபவம் இவர்கள் … Read more

6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் பஹத் பாசில் – அபர்ணா

நடிகர் பஹத் பாசில் கடந்த ஆண்டில் தெலுங்கில் புஷ்பா, இந்தாண்டு தமிழில் வெளியான விக்ரம் என இரண்டு படங்களிலும் வித்தியாசமான நடிப்பை தந்து தென்னிந்திய மொழி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நடிகராக மாறிவிட்டார். இந்தநிலையில் அவர் கன்னடத்திலும் முதன்முதலாக கால் பதிக்கிறார். கன்னட இயக்குனர் பவன்குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்கிறார். கடந்த 2016ல் மலையாளத்தில் வெளியாகி பஹத் பாசிலுக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த … Read more

நள்ளிரவு முதல் பெற்றோல் விலை ரூ.40வினால் குறைக்கப்படும்

இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 40 ரூபாவினால் குறைவடையவுள்ளது. ஒன்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 30 ரூபாவினால் குறைவடையும். ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 410 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக பெற்றோலின் புதிய விலை … Read more

மூத்த அரசியல் தலைவர் காலமானார்!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார். அவருக்கு வயது 69. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான கொடியேரி பாலகிருஷ்ணன் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் காரணமாக ஆகஸ்ட் கடைசி வாரத்தில் தான் பொறுப்பு வகித்த கேரள மாநில செயலாளர் பதவியிலிருந்து … Read more

உச்சத்தில் ஆம்னி பேருந்து கட்டணம் – மக்கள் வேதனை!!

தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தென் மாவட்டங்களுக்கு செல்கின்றனர். இதனால், தனியார் சொகுசு பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் சொகுசு பேருந்துகளில் கட்டணம் உச்சம் தொட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, குலசை, திசையன்விளை போன்ற பகுதிகளுக்கு செல்லும் தனியார் சொகுசு பஸ்களின் கட்டணம் பல மடங்காக உள்ளது. சென்னையில் இருந்து நெல்லை செல்லும் தனியார் பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் ரூ. … Read more

புதுச்சேரி: “இந்த விஷயத்தில் அரசியல் செய்யாதீர்கள்” – மின்தடை விவகாரத்தில் அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரியில் மின்துறை தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் கடந்த இரண்டு நாட்களாக புதுச்சேரி முழுவதும் ஆங்காங்கே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று மாலை புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களிலும் ஒரே நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனால் ஒட்டுமொத்த புதுச்சேரி மாநிலமும் இருளில் மூழ்கியது. மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமயில், … Read more

நான் ஓசில வரமாட்டேன்; டிக்கெட் கொடு – வைரல் மூதாட்டி மீது வழக்குப்பதிவு: அண்ணாமலை கண்டனம்

சென்னை: அரசுப் பேருந்தில் நான் ஓசில வரமாட்டேன் என்று கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டு அடம்பிடிக்கும் மூதாட்டி மீது வழக்குப் பதிவு செய்ததற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்வது பற்றி அமைச்சர் பொன்முடி பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி பெண்களைப் பார்த்து, “நீங்க எங்க போனாலும் ஓசி பஸ்லதானே போறீங்க?” என்று கேட்டார். பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை … Read more

எனது மகனை பழிவாங்க வேண்டாம் – சவுக்கு சங்கரின் தாய் முதல்வருக்கு கடிதம்..!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது மகனை பழிவாங்க வேண்டாம் என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சவுக்கு சங்கரின் தாயார் கமலா முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்; நீதிமன்ற அவமதிப்பு என்ற பெயரில் எனது மகன் சங்கர் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு கொடுத்த தீர்ப்பால் ஆறு மாதம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதை செய்திகளின் வாயிலாக … Read more

OH MY GOD..! குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் – குழந்தைகள் உட்பட 25 பேர் பலியான சோகம்!

உத்தர பிரதேச மாநிலத்தில், குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், குழந்தைகள் உட்பட 25 பேர் பலியாகி உள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தில், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள கோவில் ஒன்றுக்கு சென்று விட்டு, சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள், கான்பூர் மாவட்டத்திற்கு, டிராக்டர் இழுவை வாகனம் மூலம் வந்து கொண்டிருந்தனர். கட்டம்பூர் என்ற இடத்தில் டிராக்டர் இழுவை வாகனம் வந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை திடீரென்று இழந்து சாலையோரத்தில் இருந்த குளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில், … Read more