காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசிதரூர், கார்கே போட்டி! தேர்தல் செயலாளர் அறிவிப்பு

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளதாகவும், ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கேஎன் திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்று தேர்தல் செயலாளர் மதுசூதன் மிஸ்திரி அறிவித்து உள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அக்டோபர் 17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல்  24ந்தேதி தொடங்கி 30ந்தேதி (நேற்று) உடன் நிறைவு பெற்றது.  வேட்புத்தாக்கலின் கடைசி … Read more

வெற்றிக்கனியை ருசிக்கப் போவது யார்?: காங். தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி..!!

டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்டை சேர்ந்த கே.என்.திரிபாதியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வேட்புமனுக்களை திரும்பப்பெற அக்டோபர் 8ம் தேதி கடைசி நாள் ஆகும். மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை கார்கே ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாக மாநிலங்களை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு … Read more

’என்மீதுபொய் வழக்கு போட்டுள்ளனர்’ – கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் எடுத்த விபரீத முடிவு

புதுக்கோட்டை அருகே பெண் ஒருவர் மீது பொய் வழக்குப்பதிவு செய்ததாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்ணின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கீரமங்கலம் காவல் நிலையத்தின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த நீலகண்டன் மனைவி கோகிலா என்பவர் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரிழந்தார். இறப்பதற்கு முன்பு அவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்ததாகவும் … Read more

தமிழில் கூடுதல் கவனம் செலுத்தும் கிர்த்தி ஷெட்டி

தெலுங்கில் உப்பெனா என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் கிர்த்தி செட்டி. அதன் பிறகு தெலுங்கில் சில படங்களில் நடித்தவர் , தொடர்ந்து ராம் பொத்தினேனி நடிப்பில் லிங்குசாமி இயக்கிய தி வாரியர் படத்திலும் நடித்தார். ஆனால் தான் நடித்த படங்கள் அடுத்தடுத்து அதிர்ச்சி தோல்விகளை கொடுத்து விட்டதால் தற்போது கிர்த்தி ஷெட்டியின் கவனம் டோலிவுட் பக்கம் திரும்பியுள்ளது. தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் வணங்கான் படத்தில் நடித்து வரும் இவர் அடுத்து வெங்கட் பிரபு … Read more

நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக , பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரட்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் நிலக்கரியை கொண்டு வரும் சில கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன. இதன்படி, மின் துண்டிக்கப்படும் நேரத்தை அதிகரிப்பதற்கான தேவை ஏற்பாடாது. இரண்டு இலட்சத்து 25 ஆயிரம் மெற்றிக் தொன் நிலக்கரி தற்போது கையிருப்பில் உள்ளது. இதேவேளை அடுத்த வருடத்திற்கு தேவையான 25 இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரிக்கான விலைமனு கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருந்த … Read more

இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி!!

மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு ஆளுநராக இருக்கக்கூடிய இல.கணேசன் இன்று காலை சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மருத்துவமனையில் இதயத்துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக … Read more

இந்தியாவில் 23.28 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்!!

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 23 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகள் கடந்த ஆண்டு அமலுக்கு வந்தது. அதன்படி, 50 லட்சத்துக்கும் அதிகமான பயனாளர்களை கொண்ட சமூக வலைதள நிறுவனங்கள், புகார்கள் குறித்தும், அவற்றின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் மாதந்தோறும் அறிக்கை வெளியிட வேண்டும். அதன்படி, புகார்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து வாட்ஸ்அப் நிர்வாகம் மாதந்தோறும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், … Read more

அயன் படத்தை மிஞ்சும் வகையில் கடத்தல்!!

சென்னை விமான நிலையத்தில் ஊழியர் வைத்திருந்த கிளினிங் மாப்பிலிருந்து 1.8 கிலோ தங்கப்பசை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் வருகை பகுதியை, விமான நிலைய ஒப்பந்த பணியாளர்கள் தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தொழில் பாதுகாப்புப் படை வீரருக்கு, ஒரு ஊழியர் வைத்திருந்த கிளினிங் மாப் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து பாதுகாப்புப் படை வீரா்,அந்த மாப்பைக் கழட்டிக் காட்டும் படி ஊழியரிடம் கூறியுள்ளார். பின்னர் மாப்பைக் கழட்டியபோது, மாப்பின் கைப்பிடி … Read more

புதுச்சேரி முழுவதும் மின்சாரம் துண்டிப்பு! – மின்துறை ஊழியர்கள் போராட்டத்தால் மக்கள் கடும் அவதி

யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறைகளை தனியார்மயமாக்குவதற்கு முடிவெடுத்திருக்கும் மத்திய அரசு, அதற்கான பணிகளைத் துரிதப்படுத்திவருகிறது. புதுச்சேரியில் மின்துறை தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து புதுச்சேரி மின்துறையில் பணியாற்றும் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தினர் ஒருங்கிணைந்து மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவை ஏற்படுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். பொதுமக்கள் சாலை மறியல் ஆனால் காங்கிரஸ் ஆட்சி முடிந்து, என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு மின்துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கை … Read more

ஆறுமுகசாமி ஆணையத்தில் எழுத்துபூர்வமாக அறிக்கை தாக்கல் செய்தது ஏன்? – சசிகலா விளக்கம்

சென்னை: ஆறுமுகசாமி விசாரணை தொடர்பாக எனக்கு 3 வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான், நான் எனது வாக்குமூலத்தை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்தேன்” என்று வி.கே.சசிகலா கூறியுள்ளார். சென்னையில் வி.கே.சசிகலா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் சசிகலா உட்பட 3 பேரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ” இந்த விசாரணை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அதனால் இதுகுறித்து நான் … Read more