இருளில் மூழ்கிய புதுச்சேரி – மக்கள் போராட்டம்!!

புதுச்சேரி முழுவதும் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் இன்று 4 வது நாளாக ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நகரம் மற்றும் கிராமப்புறம் முழுவதுமாக 2 மணி நேரத்திற்கும் மேலாக ஏற்பட்டள்ள மின்வெட்டு காரணமாக புதுச்சேரி இருளில் மூழ்கி உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக மின்துறை … Read more

சென்னையில் அரையாண்டில் ரூ.945 கோடி வரி வசூல்!!

சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.945 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களுக்கு உட்பட்ட 200 வார்டுகளில் கட்டிட மற்றும் நில உரிமையாளர்களிடம் சொத்து வரியும் தொழில் மற்றும் வணிகம் சார்ந்து இயங்கும் கட்டிடங்களில் தொழில் வரியும், தொழில் உரிமம் வரியும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2022-23ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. அந்த அரையாண்டில் மட்டும் ரூ.945 கோடி வரி வசூல் … Read more

காந்தி ஜெயந்தி அன்று ஒரு ரூபாய் புரட்சி – குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவத்துக்கான முன்னெடுப்பு!

அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று அமைதிக்கான யாத்திரை எனும் முன்னெடுப்பைத் தொடங்கியிருக்கிறது ஒன் நேஷன் அமைப்பு. ஸ்ரீ சத்ய சாய் அன்னப்பூர்னா நிர்வாகம் ஆரம்பித்த அமைப்பான இந்த ஒன் நேஷன் அமைப்பு இந்தியாவிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் முறையான கல்வி, மருத்துவம், மற்றும் தரமான உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இவர்கள் ஆரம்பித்த முன்னெடுப்புதான் ஒரு ரூபாய் ஆப் (One Rupee App). தன்னார்வலர்கள் இந்த ஆப்பில் பதிவு செய்து இவர்களின் இந்த … Read more

சமய நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி மறுப்பு: உத்தரவை ரத்து செய்யக் கோரி கம்யூ., விசிக மனு

சென்னை: சமய நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சிபிஎம், சிபிஐ மற்றும் விசிக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், “காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் … Read more

கேரளா | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் மரணம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், முன்னாள் கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாலகிருஷ்ணன், அதற்காக கடந்த சில மாதங்களாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சென்னையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 68. கேரளாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான கொடியேரி, கட்சியின் முக்கிய முடிவெடுக்கும் அமைப்பான மார்க்சிஸ்ட் பொலிட்பீரோவில் உறுப்பினராக இருந்தார். 2006-2011 ஆண்டுகால மார்க்சிஸ்ட் அரசில் விஎஸ் அச்சுதானந்தன் தலைமையிலான … Read more

நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி; சுங்க கட்டணத்துக்கு செம திட்டம்!

இந்தியா முழுதும் 805 இடங்களில் சுங்கச்சாவடிகளில் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 54 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பணம் இல்லாத பரிவர்த்தனை என்ற அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிப்பதற்காக, பாஸ்டேக் முறை அமல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தேசிய மற்றும் தனியார் பணப்பரிமாற்ற வங்கிகள் வாயிலாக பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டு பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பாஸ்டேக் முறையை பின்பற்றும் வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் … Read more

மேற்கு வங்க கவர்னருக்கு உடல்நலக்குறைவு – சென்னை மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக இருந்தவர் இல.கணேசன். பாஜக மூத்த தலைவரான இவர், தேசிய செயலாளராகவும், தேசிய துணைத்தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். பாஜகவில் இணைவதற்கு முன்பு இவர் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராகவும் இருந்தார்.  இவர், தென் சென்னை மக்களவை தொகுதியில் 2009, 2014ஆம் ஆண்டு தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர், 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பதவியேற்றுக்கொண்டார்.  தொடர்ந்து, எம்பி பதவி காலாவதியாகும் முன்பே, கடந்தாண்டு மார்ச் … Read more

காவல் ஆணையரின் 15நாள் தடை? அக்டோபர் 11-ம் தேதி மனித சங்கிலி பேரணி நடைபெறும் என அறிவிப்பு…

சென்னை: சென்னையில் காவல்துறை 15நாட்கள் ஊர்வலம், பேரணி, பொதுக்கூட்டம் நடத்த தடை விதித்துள்ள நிலையில், அக்டோபர் 11ந்தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடைபெறும் என திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்து உள்ளன. இந்த பேரணி காவல்துறையினரின் உத்தரவை மீறி நடத்தப்படுமா அல்லது காவல்துறை அறிவித்த தனது தடையை விலக்கிக்கொள்ளுமா என்பது விரைவில் தெரிய வரும். மகாத்மா காந்தி பிறந்த நாளன்று மாநிலம் முழுவதும் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்ற நிலையில், … Read more

ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்ற ஜார்க்கண்டில் இருந்து 800 பெண்கள் வருகை; சிறப்பு ரயிலில் அழைத்துவரப்பட்டனர்

ஓசூர்: ஓசூர் அருகே இயங்கி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக, ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து 800க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் சிறப்பு ரயில் மூலம் நேற்று அழைத்து வரப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கெலமங்கலம் பகுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் என்ற செல்போன் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக பிளஸ்2 படித்த உள்ளூர் மற்றும் வெளியூர் … Read more

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கு – மீட்க வராத வனத்துறையால் பொதுமக்கள் அதிருப்தி

தேன்கனிக்கோட்டை காந்தி சாலையில் மின்சாரம் தாக்கி குரங்கு படுகாயம் அடைந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை  வனப்பகுதியிலிருந்து குரங்குகள் உணவைத் தேடி அடிக்கடி ஊருக்குள் வந்து விடுகின்றன. இந்நிலையில் இன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குரங்கு ஒன்று தேன்கனிக்கோட்டை காந்தி சாலையில் கோயில் அருகே மின்சார வயரில் தொங்கி விளையாடியது. அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் கை, கால் பகுதிகளில் தீப்புண் ஏற்பட்டு படுகாயம் அடைந்த குரங்கை மீட்க பொதுமக்கள் முயற்சி செய்தும் முடியவில்லை. இதனையடுத்து … Read more