புதுச்சேரி புதிய டிஜிபியாக ஸ்ரீனிவாசன் பொறுப்போற்பு

புதுச்சேரி, கடந்த 2022 ஜூலையில் புதுச்சேரி டிஜிபியாக மனோஜ் குமார் லால் பொறுப்பேற்றிருந்தார். அவர் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது அவர் இடமாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, ஜம்மு காஷ்மீரில் பணியாற்றும் சீனிவாசன் புதுச்சேரியின் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், ஸ்ரீனிவாசன் புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுக்கொண்டார். புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். தினத்தந்தி Related Tags : புதுச்சேரி  டிஜிபி  Puducherry  DGP 

மைதானங்களை மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை – கம்ரன் அக்மல் கண்டனம்

லாகூர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கம்ரன் அக்மல் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:- “உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையில் ஆஸ்திரேலியா ( பெங்களூரு) மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக (சென்னை சேப்பாக்கம்) தாங்கள் விளையாடும் இடங்களை மாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்தது. இதே போல் இந்தியாவுக்கு எதிராக ஆமதாபாத்திலும் விளையாட விரும்பவில்லை. ஆனால் பாகிஸ்தானின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிராகரித்தது சரியான முடிவாகும். இது போன்ற … Read more

சீன அதிபர் ஜின்பிங்குடன் நியூசிலாந்து பிரதமர் பேச்சுவார்த்தை

பீஜிங், நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் கடந்த ஜனவரியில் பதவி விலகினார். அவருக்கு பின்னர் நாட்டின் பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றார். இந்தநிலையில் 5 நாட்கள் அரசுமுறை பயணமாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் சீனா சென்றுள்ளார். அவர் பதவியேற்புக்கு பின்னர் முதன்முறையாக சீனாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவின் முக்கிய ஏற்றுமதி சந்தையாக நியூசிலாந்து உள்ளது. மேலும் இருநாடுகளுக்கு இடையே நல்லுறவு நீடித்து வரும் நிலையில் இந்த பயணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. டியான்ஜினில் நடைபெற்ற … Read more

2671இல் இருந்து 2023க்கு வந்த டைம் டிராவலர்? – அடுக்கடுக்காக வெளியிடும் அதிர்ச்சி தரும் தகவல்கள்!

Eno Alaric Prediction: 2671ஆம் ஆண்டில் இருந்து நிகழ்காலத்திற்கு திரும்பியுள்ளதாக தன்னை தானே கூறிக்கொள்ளும் ஒரு நபர் அதிர்ச்சி தரும் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

`செந்தில் பாலாஜி கைதுக்காகப் பழிவாங்குகிறார்கள்..!' – சிடுசிடுக்கும் எஸ்.ஜி.சூர்யா

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கைதுசெய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்திருக்கும் தமிழக பா.ஜ.க மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவிடம் சில கேள்விகளை எழுப்பினேன். “பா.ஜ.க-வினர் கைது அன்றாட செய்திகளில் ஒன்றாகி வருகிறதே… என்ன காரணம்?” “அண்ணாமலையைப் பற்றியோ பிரதமர் மோடியைப் பற்றியோ விமர்சிப்பவர்கள்மீது புகார் கொடுத்தாலும் நடவடிக்கை இருப்பதில்லை. தி.மு.க-வையோ, அதன் கூட்டணிக் கட்சிகளையோ விமர்சித்தால் மட்டும் உடனடியாக நடவடிக்கை பாய்கிறது. செந்தில் பாலாஜியின் கைது தி.மு.க அரசை பதற்றத்தின் உச்சிக்கே கொண்டு சென்றிருக்கிறது. அதனால்தான் இத்தகைய கைதுகள் … Read more

பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு: மதுரை ஆட்சியர் ஜூலை 10ம் தேதி ஆஜராக உத்தரவு

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நில நிர்வாக ஆணையரும், மதுரை மாவட்ட ஆட்சியரும் ஜூலை 10ம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மேலூர் அம்பலக்காரன்பட்டியைச் சேர்ந்த ரமணி கோபால், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவில், “மேலூர் தாலுகா அம்பலக்காரன்பட்டியில் தனியார் பட்டா நிலத்தை 1994-ல் நானும், என் மனைவியும் வாங்கினோம். அந்த நிலத்துக்கு என் பெயரில் பட்டா கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால் அந்த இடம் பஞ்சமி நிலம் … Read more

மணிப்பூரில் தடுத்து நிறுத்தப்பட்டது ராகுல் காந்தியின் வாகனம் – பாதுகாப்பை காரணம் காட்டி காவல்துறை நடவடிக்கை

இம்பால்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூருக்கு 2 நாள் பயணமாக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வருகைதந்த நிலையில் அவரது பாதுகாப்பு வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது. தலைநகர் இம்பாலில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிஷ்ணுபூர் பகுதியில் ராகுலின் பாதுகாப்பு வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது. ராகுல் காந்தி சூர்சந்த்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அந்தப் பகுதிதான் மேய்த்தி – குகி இனக் கலவரத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராகுல் காந்தியின் … Read more

பிரான்சில் 17 வயது ஆப்பிரிக்க வம்சாவளி சிறுவனை சுட்டுக் கொன்ற போலீஸ்: பற்றி எரியும் பாரிஸ் நகரம்

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வாகண தணிக்கையின்போது காரை நிறுத்தாமல் சென்ற 17 வயதே ஆன ஆப்பிரிக்க வம்சாவளி சிறுவனை போலீஸார் சுட்டுக் கொன்ற நிலையில் அந்நகரம் முழுவதும் காவல்துறைக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டன. அது வன்முறையாக வெடிக்க, தொடர்ந்து இரண்டாவது நாளாக பாரிஸ் நகரின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அமைதியை நிலைநாட்ட சுமார் இரண்டாயிரம் போலீஸார் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்க வம்சாவளி சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்துள்ள அதிபர் இமானுவேல் … Read more

'பொம்மை முதல்வர் ஸ்டாலின்'… கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி தற்கொலை.. சரமாரியாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தேரடி தெருவில் நகைக்கடை நடத்தி வந்தவர் ரோஜா ராஜசேகர். 58 வயதான இவர் தனது கடையில் திருட்டு நகையை வாங்கியதாக கூறி திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசார், பட்டுக்கோட்டை வந்து நகைக்கடையில் சோதனை நடத்தினர். பின்னர் ரோஜா ராஜசேகர் மற்றும் அவருடைய மனைவி லட்சுமி ஆகியோரை போலீசார் விசாரணைக்கு திருச்சிக்கு அழைத்துச்சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான ரோஜா ராஜசேகர், நேற்று இரவு ரயில் முன் பாய்ந்தார். இதில் உடல் சிதறி … Read more

மணிப்பூரில் திடீர் பரபரப்பு… ராகுல் காந்தியை தடுத்து நிறுத்திய போலீசார்… உள்ளே அனுமதிக்கவில்லை!

மணிப்பூர் கலவரம் குறித்த செய்திகள் கடந்த சில வாரங்களாகவே தலைப்பு செய்தியாக இடம்பெற்று வருகின்றன. இரண்டு இனக் குழுக்களுக்கு இடையில் நடந்த மோதல் மாநில அளவில் விஸ்வரூபாக வெடித்து கிளம்பியது. இதில் ஏராளமான உயிர் சேதம், பொருட் சேதம் ஏற்பட்டு நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றது. மணிப்பூர் மாநில நிலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தது. ராகுல் காந்தி மணிப்பூர் பயணம் தற்போது நிலைமை சீரடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் … Read more