கர்நாடக பாணியில் ம.பி.-யில் ‘போன் பே’ போஸ்டர் பிரச்சாரம்: காங்கிரஸுக்கு ‘போன் பே’ நிறுவனம் எச்சரிக்கை
போபால்: மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சவுகான் ஊழல் செய்திருப்பதாக குற்றம்சாட்டி காங்கிரஸ் கட்சி ஒட்டியுள்ள போஸ்டர்களில் தங்களது பிராண்ட் ‘லோகோ’ பயன்படுத்தப்படிருப்பதற்கு ‘போன் பே’ நிறுவனம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் தங்களின் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. இதன் விளைவாக இரண்டு கட்சிகளுக்கும் இடையில் மாநிலத்தில் போஸ்டர் யுத்தம் தொடங்கியுள்ளது. இரு கட்சிகளும் எதிர்தரப்பின் முக்கியத் தலைவர்களின் படங்களை … Read more