சசிகலா EPS-ஐ விட இளையவர்… குண்டை தூக்கிப்போட்ட கே.சி. பழனிச்சாமி – என்ன மேட்டர்?

Edappadi Palanisamy News: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை விட வயதில் மூத்தவர் என்று அக்கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினர் கே.சி. பழனிசாமி கூறியுள்ளார். இதன் பின்னணி என்ன என்பதை இதில் காணலாம். 

RCB vs KKR: ஆஹா கண்கொள்ளா காட்சி… விராட் கோலியை கட்டிபிடித்த கௌதம் கம்பீர்!

IPL 2024 RCB vs KKR: ஐபிஎல் தொடரின் 10ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று மோதியது. கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா அணியில் நிதிஷ் ராணா, சுயாஷ் சர்மாவுக்கு பதில் அனுகுல் ராய் மற்றும் அங்கிரிஷ் ரகுவன்ஷி ஆகியோர் இடம்பிடித்தனர். ஆர்சிபி அணியில் இம்பாக்ட் பிளேயராக இப்போட்டியில் வைஷாக் விஜயகுமார் இரண்டாம் … Read more

Exclusive: "இது மாதிரி ரஜினியைப் பார்த்திருக்க மாட்டோம்!" – நம்பிக்கை விருது விழாவில் லோகேஷ் கனகராஜ்

2023-ம் வருடத்துக்கான ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் தற்போது நடந்துவருகிறது. இந்த விழாவில் சினிமா ஸ்டன்ட் இயக்குநர்களான அன்பறிவ் சகோதரர்களுக்கு டாப் 10 இளைஞர்களுக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை வழங்க வந்திருந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மேடையேறிய லோகேஷ், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் 171-வது படம் குறித்த அப்டேட்டைப் பகிர்ந்தார். நிகழ்வில் அவர் பேசியதாவது… Thalaivar 171 “‘இனிமேல்’ பாடல் பண்ணது குருபக்திக்காக! ‘தலைவர் 171’ படத்தின் டைட்டில் டீசர் ஏப்ரல் … Read more

விரிஞ்சிபுரம் காவல்நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு

விரிஞ்சிபுரம் விரிஞ்சிபுரம் காவல்நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது, வரும் ஏப்ரல் 19 அன்று தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. எனவே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. அனுமதியின்றி கட்சி விளம்பரங்களை சுவர்களில் வரைவது, கட்சி கொடி கம்பங்கள் நடுவது, அனுமதியின்றி ஊர்வலம் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. வேலூர் பொய்கை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சுற்றியுள்ள சுவர்களில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சம்பந்தப்பட்ட சுவர் விளம்பரங்கள் மற்றும் கட்சி சின்னங்கள் … Read more

மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்'

கடந்த 2014ம் ஆண்டு வெளியான படம் 'அஞ்சான்'. லிங்குசாமி இயக்கியிருந்தார் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் அவரே தயாரித்திருந்தார். இந்த படத்தில் சூர்யா, சமந்தா, வித்யூத் ஜம்வால், சூரி, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இந்த நிலையில் படத்தை மறு வெளியீடு செய்யும் முயற்சிகள் நடந்து வருகிறது. படத்தில் முன்பு செய்த தவறுகளை சரி செய்து இயக்குனர் … Read more

Actress Nayanthara: படத்திற்கு படம் சம்பளத்தை ஏற்றும் நயன்தாரா?.. த்ரிஷாவை தொடர்ந்து அதிரடி?

சென்னை: நடிகை நயன்தாரா 20 ஆண்டுகளை கடந்து சினிமாவில் பயணித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்திப் படங்களில் நடித்துவருகிறார் நயன்தாரா. திருமணம் ஆகி வாடகைத்தாய் முறையில் இரு குழந்தைகளுக்கு தாயான நிலையிலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். கோலிவுட்டில் கணிசமான படங்களை கைவசம் வைத்துள்ள நயன்தாரா, அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். கடந்த

`வானதி சப்போர்ட்டில் வெற்றிபெறலாம் என நினைத்து மாட்டிக்கொண்டார்!'- அண்ணாமலை குறித்து கனிமொழி கருத்து

கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகே, தி.மு.க கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர், கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, கனிமொழி எம்.பி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய கனிமொழி, “தளபதியின் ஆதரவு பெற்ற வேட்பாளர் ராஜ்குமார். இந்த தொகுதியில் நாம் தெளிவாக ஓட்டு போட வேண்டும். தவறாகச் சென்றால் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது.  சொந்த தொகுதியில் நின்றால் விரட்டி விட்டுவிடுவார்கள் என தெரிந்து, புதிய தொகுதியில் போட்டியிடுகிறார் அண்ணாமலை. வானதியின் சப்போர்ட்டில் வெற்றி பெற்றுவிடலாம் என கணக்குபோட்டு மாட்டிக்கொண்டிருக்கிறார் … Read more

ஒரு காலத்தில் மதுரை ‘கெத்து’… இப்போது ‘ஒத்து’ – பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசன் பேச்சு

மதுரை: “பாஜக வென்றால் ரவுடித்தனம் ஒழியும். பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும். மின் தடை இருக்காது. நல்ல சாலை, குடிநீர் கிடைக்கும்” என மதுரை பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசன் பேசினார். மதுரை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசன் மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் கட்சி பாஜக. பாஜகவுக்கு ஓட்டுப்போட்டால் தான் மதுரை வளரும். மதுரையின் பெருமையை மீட்டெடுக்க வந்த கட்சி பாஜக. ஒரு காலத்தில் மதுரை என்றால் … Read more

பிரியங்காவின் ராஜஸ்தான் நம்பிக்கை… யார் இந்த சஞ்சனா ஜாதவ்? | 2024 தேர்தல் கள புதுமுகம்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், ராஜஸ்தானின் பாரத்பூர் தொகுதியில் களம் காண்கிறார் 26 வயதான சஞ்சனா ஜாதவ். இவர் பட்டியலின மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முக்கிய இளம் தலைவராக பார்க்கப்படுகிறார். ராஜஸ்தானில் இந்த முறை காங்கிரஸ் கட்சி வித்தியாசமான வியூகம் வகுத்து செயல்படுவதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் வளர்ந்து வரும் அரசியல்வாதியான சஞ்சனா ஜாதவ், காங்கிரஸ் தலைமையை எப்படி இந்த சிறு வயதிலேயே … Read more

வருமான வரித்துறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நோட்டிஸ்

டில்லி வருமான வரித்துறை காங்கிரஸை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. கடந்த 2017-18 நிதியாண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரை 4 ஆண்டுகளுக்கு   காங்கிரஸ் கட்சி வருமான வரிக் கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என்றும், இதற்கு வட்டியுடன் கூடிய அபராதமாக ரூ.1,800 கோடி செலுத்த வேண்டும் என்றும் அக்கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தங்களின் நிதியை அரசு முடக்க பார்ப்பதாக காங்கிரஸ் … Read more