சென்னையில் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் உயரிழப்பு

சென்னை: சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலையில் ஷெக்மேட் என்ற தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் மற்கூரை, வியாழக்கிழமை இரவு எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இடிபாடுகளில் … Read more

‘இளம் மம்தா’, உள்ளூர் போராளி… – யார் இந்த சயோனி கோஷ்? | 2024 தேர்தல் கள புதுமுகம்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் இரண்டாவது மகளான ரோகிணி ஆச்சார்யா, மைசூர் தொகுதியில் பாஜக சார்பில் மைசூர் மன்னர் குடும்ப வாரிசான யதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ வாடியார் உள்ளிட்ட பல புது முகங்களைப் பற்றி பார்த்தோம். அந்த வரிசையில், பெங்காலி நடிகையும், அரசியல்வாதியுமான சயோனி கோஷ் மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்பூர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் … Read more

டெல்லிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்!

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய ஐபிஎல் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது.  ராஜஸ்தானின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.  கடந்த போட்டியில் டெல்லி அணி தோல்வியை சந்தித்து இருந்தது, ராஜஸ்தான அணி வெற்றி பெற்று இருந்தது.  மேலும் இந்த வருட ஐபிஎல்லில் இதுவரை நடந்து முடிந்த 8 போட்டிகளில் சொந்த மைதானத்தில் விளையாடிய  அணிகள் … Read more

தலைவர் 171 அப்டேட்டை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்…

தலைவர் 171 குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். #Thalaivar171TitleReveal on April 22 🔥 pic.twitter.com/ekXFdnjNhD — Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 28, 2024 ரஜினிகாந்த்-தின் 171வது படமான இந்தப் படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் கடந்த நான்கு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இது குறித்த முக்கிய அறிவிப்பு இன்று … Read more

வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ்

நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், பாண்டவர் இல்லம் சீரியலில் மல்லிகா என்ற கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர் ஆர்த்தி சுபாஷ். பாண்டவர் இல்லம் தொடரில் முடிந்தது முதலே மற்ற நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்காத அவர், தற்போது விஜய் டிவியில் புதிதாக உருவாகி வரும் வீட்டுக்கு வீடு வாசப்படி என்கிற தொடரில் வில்லியாக என்ட்ரி கொடுத்துள்ளார். இதனால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. சமீபத்தில் இந்த சீரியலின் ப்ரோமோ வெளியான நிலையில் ஆர்த்தி சுபாஷுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தின் வேட்டையன் படத்தின் ஷூட்டிங் விரைவில் நிறைவடைய உள்ளது. இந்தப் படத்தை டிஜே ஞானவேல் இயக்கி வருகிறார். படத்தில் அமிதாப் பச்சன், ரித்திகா சிங், பகத் ஃபாசில் உள்ளிட்ட பல நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171

கிழக்கு மாகாணத்தில் 80 இலட்சம் ரூபாய் செலவில் சத்துமா உற்பத்தி நிலையம் திறப்பு …

கிழக்கின் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயத்தியமலை பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்துமா உற்பத்தி நிலைய திறப்பு விழா நேற்று (27) இடம்பெற்றது. நியூசிலாந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் நிதி உதவியின் கீழ் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆயத்தியமலையில் 80 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட சத்துமா உற்பத்தி நிலைய திறப்பு விழா நிகழ்வு அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்பும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை மட்டக்களப்பு … Read more

`வின்டேஜ் காங்கிரஸின் கலாசாரமே இதுதான்' – பிரதமர் மோடி சாடுவதென்ன?

மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா உட்பட 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், நீதித்துறை அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதாகவும், அரசியல் மற்றும் தொழில்சார் அழுத்தங்களிலிருந்து நீதித்துறையைப் பாதுகாக்க வேண்டுமெனவும் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியிருக்கின்றனர். அதில், “நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கவும், நீதித்துறை செயல்பாட்டில் செல்வாக்கு செலுத்தவும், அற்பமான தர்க்கங்கள் மற்றும் பழமையானவற்றின் அடிப்படையில் நீதிமன்றங்களை அவதூறு செய்யவும் ஒரு குழு முயன்று வருகிறது. அரசியல் வழக்குகளில், குறிப்பாக ஊழல் குற்றம் சாட்டப்பட்ட அரசியல் … Read more

திண்டுக்கல் பாமக வேட்பாளர் திலகபாமா உடன் தகராறு: முன்னாள் வேட்பாளர் கட்சிப் பதவி பறிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமா உடன் அக்கட்சியை சேர்ந்த ஜோதிமுத்து தகராறு செய்ததாக கூறி அவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இவர் கடந்த முறை மக்களவை தொகுதியில் போட்டியிட்டவர். திண்டுக்கல் வடக்கு மாவட்ட பா.ம.க., செயலாளர் ஜோதிமுத்து. இவர் கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பா.ம.க., வேட்பாளராக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டார். தற்பாது இவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இம்முறை அக்கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா பாஜக கூட்டணியில் பாமக … Read more

ஏப்.6-ல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு – 5 நீதிக் கொள்கைகளில் கவனம் 

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 6-ம் தேதி ஜெய்ப்பூரில் இருந்து வெளியிடப்படும் என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாசாரா தெரிவித்துள்ளார். இதில், கட்சியின் 5 நீதிக் கொள்கையின் கீழ் 25 வாக்குறுதிகள் மற்றும் பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கான உறுதிமொழிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸின் உயர் மட்ட தலைவர்களும், மாநில … Read more