டெல்லி வெற்றிக்கு பிரதமரின் திட்டங்கள்தான் காரணம்: பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கருத்து

கோவை: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக்கான காரணம் பிரதமர் மோடியின் திட்டங்கள் மக்கள் மனதைத் தொட்டுள்ளது என்பது தான் என பாஜக தேசியக்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று வந்த போதிலும், சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. பாஜக தற்போது 48 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. … Read more

டெல்லி தேர்தலில் பாஜக அபார வெற்றி: 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது எப்படி?

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் அக்கட்சி 48 இடங்களில் வெற்றி பெற்றது. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தின. பாஜக 68 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் … Read more

நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு? தனி நபர் மசோதா தாக்கல்! பி.வில்சன் அதிரடி!

நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வலியுறுத்தி மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான பி.வில்சன் நாடாளுமன்றத்தில் தனி நபர் மசோதாவை கொண்டு வந்துள்ளார்.

இன்று டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என பாஜக ஆலோசனை

டெல்லி இன்று டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து பாஜக ஆலோசனை செய்ய உள்ளது. கடந்த 5 ஆம் தேதி நடந்து 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தலில், ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி இருந்தன. நேற்று காலை 8 மணியளவில் தொடங்கியது. தொடக்கம் முதலே, பா.ஜ.க. பல்வேறு இடங்களில் முன்னிலை பெற்றது. எனவே  பா.ஜனதா வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில் … Read more

மணிப்பூரில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

இம்பால், மணிப்பூர் மாநிலத்தில் 22 மாதங்களுக்கும் மேலாக மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே இனக்கலவரம் நடந்து வருகிறது. கலவரத்தை கட்டுப்படுத்தி அமைதியை மீட்டெடுக்கும் முயற்சியாக மாநிலத்தில் பல்லாயிரக்கணக்கான மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பதற்றம் நிறைந்த பகுதிகளில் தொடர் தேடுதல் வேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள ஐகேஜாங் பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பீரங்கி … Read more

சாம்பியன்ஸ் டிராபி: விராட் கோலி எத்தனை சதங்கள் அடிப்பார்..? சுரேஷ் ரெய்னா கணிப்பு

மும்பை, 8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. … Read more

சிலியில் பற்றி எரியும் காட்டுத்தீ; அவசர நிலை பிரகடனம்

சாண்டியாகோ, தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. அந்நாட்டின் நுபல், மவுலி ஆகிய மாகாணங்களில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்புப்படையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இரு மாகாணங்களிலும் 15 இடங்களில் காட்டுத்தீ பரவி வருகிறது. இந்நிலையில், காட்டுத்தீ காரணமாக நுபல், மவுலி ஆகிய 2 மாகாணங்களிலும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை, காட்டுத்தீயை பற்ற வைத்ததாக இதுவரை 60 பேர் … Read more

Herbal Hair Care: முடி வளர்ச்சிக்கு 4 மூலிகைத் தைலம்!

ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உறுதியான முடியைப் பெறமுடியவில்லை. ஆரம்பத்தில், இத்தகைய தைலங்களைப் பயன்படுத்தும்போது முடி நன்றாக வளர்வதுபோல் தெரியும். ஆனால், அதை நிறுத்தும்போதுதான் இன்னும் அதிகமாக முடி கொட்டத் தொடங்கும். ‘முடி வளருதோ இல்லியோ… இருக்கிற முடியைத் தக்கவைச்சுக்கிட்டா போதும் என்ற மனநிலைதான் இன்று பலருக்கும் இருக்கிறது. நம்முடைய பாரம்பரிய முறைகளைப் பின்பற்றினாலே போதும்… இருக்கும் முடியை தக்கவைக்கலாம்… வளர்ச்சியைக் கூட்டி, … Read more

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக அமோக வெற்றி: நாதக உட்பட 45 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 91 ஆயிரத்து 558 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நாதக வேட்பாளர் உட்பட 45 பேரும் டெபாசிட் இழந்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், இண்டியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் … Read more

சர்ச்சைக்குரிய பேச்சால் பாஜகவில் அதிருப்திக்கு உள்ளானவர்: கேஜ்ரிவாலை வீழ்த்திய பர்வேஷ் வர்மா யார்?

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித்தின் மகன் சந்தீப் தீக்சித்தும் தோல்வி அடைந்தார். இந்த 2 முக்கிய பிரபலங்களை தோற்கடித்து வெற்றி பெற்றவர் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா, ஆனால், பாஜக மேலிடத்தில் இவர் மீது கடும் அதிருப்தி நிலவியது. கடந்த … Read more