இந்தியா – ஆஸ்திரேலியா 4வது டி20 போட்டி: ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா? கம்பீரின் பிளான் என்ன?

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது. இதுவரையில் 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிவடைந்திருக்கிறது. இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ளன. ஏற்கனவே ஒருநாள் தொடரை இழந்த நிலையில், டி20 தொடரை வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடி வருகிறது.  Add Zee News as a Preferred Source இத்தொடரின் முதல் போட்டி ரத்தானதை அடுத்து இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் மூன்றாவது போட்டியில் இந்திய அணியும் வென்றது. … Read more

பரப்புரை, ரோடு ஷோ கூட்டக் கட்டுப்பாடு தொடர்பாக நவ.6ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்! தமிழ்நாடு அரசு

சென்னை: பரப்புரை, ரோடு ஷோ கூட்டக் கட்டுப்பாடு தொடர்பாக நவ.6ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்  நவ.6-ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கரூர் தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை, ரோடு ஷோ வின் போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடு நெறிமுறைகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து,  அனைத்துக்கட்சிகளின் கூட்டத்தை தமிழ்நாடு அரசு கூட்டி … Read more

‘தமிழ்நாட்டின் மகள்களுக்கு பாதுகாப்பு தர முடியாத திமுக அரசு வெட்கப்பட வேண்டும்’ – தவெக

சென்னை: கோவையில் கல்லூரி மாணவியின் நண்பரை தாக்கி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது. தமிழ்நாட்டின் மகள்களுக்கு பாதுகாப்பு தர முடியாத திமுக அரசு வெட்கப்பட வேண்டும் என தவெக தெரிவித்துள்ளது. இதுகுறித்து தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது என்பதற்கு, கோவை தனியார் கல்லூரி மாணவி மீது நிகழ்த்தப்பட்ட கூட்டு பாலியல் வன்முறை மற்றுமொரு சாட்சி. போதை கலாச்சாரத்தால் தமிழகத்தின் … Read more

கர்நாடக முதல்வர் விவகாரத்தில் கட்சித் தலைமையின் முடிவே இறுதியானது: சித்தராமையா

பெங்களூரு: கர்நாடக முதல்வர் விவகாரத்தில் கட்சித் தலைமையின் முடிவே இறுதியானது என சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா மைசூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, முதல்வர் மாற்றம் தொடர்பாக வெளிவரும் செய்திகள் உண்மையா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சித்தராமையா, “பலரும் பல கருத்துக்களைத் தெரிவிக்கலாம். கட்சி மேலிடத்தின் முடிவே இறுதியானது. இது தொடர்பாக கட்சித் தலைமை இதுவரை எதையும் தெரிவிக்கவில்லை. அமைச்சரவை மாற்றம் குறித்து பிஹார் தேர்தலுக்குப் பிறகு கட்சித் தலைமையிடம் … Read more

ரூ.21 கோடி மதிப்பிலான எருமை உயிரிழப்பு! கண்காட்சியில் நேர்ந்த அதிர்ச்சி..

21 Crores Worth Buffalo Death : ராஜஸ்தானின் புஷ்கர் கண்காட்சியில், 21 கோடி மதிப்பிலான எருமை வைரலானது. இந்த எருமை தற்போது உயிரிழந்துள்ளது.

SIR -ஐ தொடர்ந்து தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு – முக்கிய தகவல்

Tamil Nadu : தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடக்க உள்ளது. முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.  

Bison: “எனக்குள் ஏதோ ஒன்றை" – பைசன் பட ஷூட்டிங்க் வீடியோவை பகிர்ந்து நெகிழும் நடிகை அனுபமா

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘பைசன்’. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை அனுபமா பரமேஸ்வரன், முன்னதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “பைசனின் 10 நாட்கள்… என் இதயம் இன்னும் தனக்குக் கிடைத்த அன்பை எப்படித் தக்க வைத்துக்கொள்வது என்பதைக் கற்றுக்கொண்டே இருக்கிறது. சில படங்கள் வெறும் புராஜெக்ட்களாக இருப்பதில்லை, அவை ஒரு உணர்வாக, ஒரு … Read more

சமூக வலைத்தளங்களை சிறார்கள் பயன்படுத்தத் தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்…

டெல்லி: சமூக வலைத்தளங்களை சிறார்கள் பயன்படுத்தத் தடை கோரிய  மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு  தெரிவித்துள்ளது.  நேபாளம் அத்தகைய தடையை முயற்சித்தபோது என்ன நடந்தது தெரியுமா? என்றும் கேள்வி எழுப்பியது. நாடு முழுவதும் டிஜிட்டல் வளர்ச்சியின் பயனாக குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் இணையதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.  இணையதளங்களில் பயன்படுத்துவதில் எவ்வளவுக்கு எவ்வளவு நல்லது உள்ளதோ அந்த அளவுக்கு கெடுதலாக தகவல்களும் உள்ளன. இதனால், சிறுவர்கள் இணையதளத்தை பயன்படுத்தும்போது பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என … Read more

தெலுங்கானா: அரசு பஸ் மீது லாரி மோதி 15 பேர் பலி

ஐதராபாத், தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் செவல்லா காவல் நிலையத்திற்கு உட்பட்ட கானாப்பூர் கேட் பகுதியில் இன்று காலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், 15-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில், பஸ் மீது டிப்பர் லாரி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், பஸ்சில் இருந்த 17 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். பாரதீய ராஷ்டீரிய சமிதியின் தலைவரான தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். … Read more