படியில் நிற்காதே என கண்டித்த ஓட்டுநர் மீது தாக்குதல்! பள்ளி மாணவர்கள் அட்டூலியம்!

காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து நேற்று மாலை 5.30மணியளவில் காஞ்சிபுரத்திலிருந்து புரிசைக்கு செல்லும் அரசு பேருந்து புறப்பட்டு செல்லும் போது அந்த அரசு பேருந்தின் முன் படியில் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் தொங்கியவாறு பயணித்துள்ளனர்.  இதனையெடுத்து பேருந்து ஓட்டுநர் ரமேஷ் மேலே எறி வரும் படி கூறியுள்ளார். இதனால் ஓட்டுநருடன் பள்ளி மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பேருந்து நிலைய பின்புறம் பகுதியில் பேருந்தினை நிறுத்தி அம்மாணவர்களிடம் படியில் பயணித்ததால் பேருந்தைவிட்டு இறங்க சொல்லியிருக்கிறார் … Read more

கனடாவில் இந்த வார இறுதியில் தமிழர்களுக்கான ஒரு விழா… இலங்கையின் சிறப்பு உணவுகளை ஒரு கை பார்க்கலாம்

கனடாவில் இந்த வார இறுதியில் Tamil Fest 2022 விழா கொண்டாடப்பட உள்ளது. இலங்கை உணவுகளை ஒரு கை பார்ப்பதுடன், இந்திய, இலங்கை கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்கலாம். கனடாவின் Scarboroughவில் சனிக்கிழமை மதியம் முதல் இரவு 11.00 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமை காலை11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் நடைபெற உள்ள இந்த விழாவில், இதற்கு முன், 2019ஆம் ஆண்டு 250,000 பேர் கலந்து கொண்ட நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கையை முறியடிக்கும் … Read more

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்கம்…! புதிய முதல்வர் யார்?

டெல்லி: சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை இந்திய தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்துள்ளதாக, ஆளுநருக்கு தெரிவித்து உள்ளது.. இதனால் ஜார்கண்டில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதிய முதல்வராக தேர்வு செய்யப்படப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜார்க்கண்ட்  மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜேஎம்எம் கட்சி கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. அங்குள்ள சட்ட மன்றத்தில்  ஜேஎம்எம் கட்சிக்க்கு 30 எம்எல்ஏக்கள் உள்ளனர். மேலும்  … Read more

பள்ளிக்கு செல்லும்போது ஆபத்தான பயணம்; விதிமீறி பைக்குகளில் மின்னல் வேகத்தில் பறக்கும் சிறுவர்களால் விபத்து அபாயம்

வேலூர்: 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் லைசென்ஸ் இல்லாமல், பள்ளிக்கு செல்லும்போது, பைக்குகளில் மின்னல் வேகத்தில் சாகச பயணம் மேற்கொள்வது தொடர்கிறது. இது சாலை விதிகளை கடைபிடித்து செல்லும் வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் கண்காணிக்க கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் உள்ளன. மோட்டார் வாகன சட்டத்தின்படி 18 வயதுக்கு மேல் உள்ளவர்களே வாகனம் ஓட்ட தகுதியுள்ளவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு … Read more

திருவள்ளூர் அருகே கஞ்சா கடத்தி விற்க முயன்ற 5 இளைஞர்கள் கைது

திருவள்ளூர்: செவ்வாப்பேட்டையில் கஞ்சா கடத்தி விற்க முயன்ற தமிழரசன், சுதன், வம்சி, தீபக், வசந்தகுமார் உள்ளிட்ட 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து 1.2 கிலோ கஞ்சா, ஆட்டோ, பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

கர்நாடகாவில் லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு; பிரதமர் மோடி இரங்கல்; குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

டெல்லி: கர்நாடகாவில் லாரி மீது ஜீப் மோதி விபத்து ஏற்பட்டதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் உள்ள சிரா பகுதி அருகே இன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது ஜீப் ஒன்று வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். அதில் 3 பேர் குழந்தைகள் ஆவர். மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு … Read more

ஆகஸ்ட் 26 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்: திரையரங்கு (Theatre) லிகர் (தெலுங்கு) – Aug 25தீர்ப்பு (மலையாளம்) – Aug 25டைரி (தமிழ்) – Aug 26 களப்புரம் (தெலுங்கு) – Aug 26மைக் (மலையாளம்) – Aug 26Three Thousand … Read more

ரூ.4 லட்சம் வரதட்சணைக்காக இளம்பெண்ணை உயிருடன் எரித்த குடும்பம்.. மயிலாடுதுறையில் பயங்கரம்

Tamilnadu oi-Jackson Singh மயிலாடுதுறை: ரூ. 4 லட்சம் வரதட்சணைக்காக இளம்பெண்ணை மாப்பிள்ளை வீட்டார் உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகரீகமும், பண்பாடும் எவ்வளவு மேம்பட்ட போதிலும், சில மனிதர்களிடம் இன்னமும் பல கீழ்த்தரமான பழக்கவழக்கங்கள் இருக்கவே செய்கின்றன. அதில் முக்கியமானது வரதட்சணை. திருமண பந்தத்தை ஏதோ சந்தைக் கடை வியாபாரம் போல பேரம் பேசும் வரதட்சணை பழக்கம், இன்னும் நம் நாட்டில் தொடரவே செய்கிறது. ஏழை, செல்வந்தர் என எந்த வித்தியாசமும் … Read more

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வித்துறை| Dinamalar

புதுடில்லி: நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி சேர்ந்துள்ள மாணவர்கள், மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி சேர்ந்துள்ள மாணவர்கள் மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த உதவித்தொகையை பெறும் தகுதி பெற்ற மாணவர்கள் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. புதுடில்லி: … Read more

மோகன்லால் மம்முட்டியை தொடர்ந்து திலீப்புடன் மோதும் ஜெகபதிபாபு

மலையாள திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் ரபி (மெக்கார்டின்). தமிழில் சரத்குமார் நடித்த தென்காசி பட்டணம் படத்தை இயக்கியவர் இவர் தான். திலீப் – கீர்த்தி சுரேஷ் நடித்த ரிங் மாஸ்டர் மற்றும் 2 கண்ட்ரீஸ் படங்களை தொடர்ந்து திலீப்பை வைத்து மீண்டும் 'வாய்ஸ் ஆப் சத்தியநாதன்' என்கிற படத்தை இயக்குகிறார் ரபி.. இதில் திலீப்புக்கு ஜோடியாக வீணா நந்தகுமார் நடிக்கிறார். கடந்த வருடம் அக்டோபர் மாதமே இந்த படத்தின் படப்பிப்பிடிப்பு துவங்கியது.. முதற்கட்ட படப்பிடிப்புக்கு பிறகு … Read more