ஒற்றை ஆளாக பாகிஸ்தான் அணியை பிரித்தெடுத்த பில் சால்ட்! ஆறாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. 5 போட்டிகளின் முடிவில் பாகிஸ்தான் அணி 3-2 என முன்னிலை வகித்த நிலையில், 6-வது டி20 போட்டி வெள்ளிக்கிழமை லாகூரில் நடைபெற்றது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான 6-வது டி20 போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து 3-3 என்ற கணக்கில் இந்த தொடரை சமன் செய்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. … Read more

புதுக்கோட்டையில் பத்திரப் பதிவு அலுவலக அதிகாரி வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கியது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட பத்திரபதிவுத்துறை அலுவலகத்தில் தணிக்கை அதிகாரியாக பணியாற்றி வருபவர் அஞ்சனகுமார்(55). இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் பணியாற்றினார். அப்போது இவரது பதவியை பயன்படுத்தி முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக இவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன்பின்னர் தேனிக்கு இடமாறுதலில் சென்ற அஞ்சனகுமார், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டைக்கு மாறுதலாகி மாவட்ட பதிவாளர் தணிக்கை பிரிவில் பணியில் சேர்ந்தார். இந்நிலையில் நேற்று காலை  புதுக்கோட்டை கே.எல்.கே.எஸ். நகரில் … Read more

நாடாளுமன்ற கட்டிடத்தின் மீதுள்ள அசோக சின்ன சிங்கங்களில் விதிமுறை மீறல்கள் இல்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ், புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதன் உச்சியில், சமீபத்தில் கம்பீரமான அசோக சின்ன சிங்கங்கள்  நிறுவப்பட்டன. இதை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த சிங்கங்கள் வழக்கமாக அசோக சின்னத்தில் காணப்படும் அமைதியான சிங்கங்களை போல் இல்லாமல், மிகவும் ஆக்ரோஷமாகவும், பற்கள் கோரமாக தெரியும் வகையில் வாயை திறந்திருப்பதாகவும்  விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், அல்தானிஸ் ரெயின், ரமேஷ் குமார் மிஸ்ரா ஆகிய 2 வழக்கறிஞர்கள், ‘இந்திய அரசு … Read more

10 நாட்களே ஆன தன் பெண் குழந்தையை கொல்ல முயன்ற தந்தைக்கு நேர்ந்த துயரம்!

உத்தரபிரதேசத்தில் பிறந்து 10 நாட்களே ஆன தனது பெண் குழந்தையை பிடிக்காததால் கொல்ல முயன்ற தந்தையை ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் மகன். கோசைங்கன்ஜ் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் ரமேஷ் சந்திர ராவத்(50) என்ற விவசாயி அவரது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். அந்த வீட்டிற்கு பக்கத்திலேயே வசிக்கும் அவருடைய மகன்களான அவதேஷ்(29) மற்றும் ரஜ்னேஷ்(25) இருவரும் தனது தந்தையை யாரோ கொலைசெய்துவிட்டதாகவும், முன்பகை காரணமாக உள்ளூர்வாசிகளில் யாரோ … Read more

வீடு, கல்வி, வாகன கடன் வட்டி அதிகரிக்கும்| Dinamalar

மும்பை, :சர்வ் வங்கி, அதன் குறுகிய கால கடன்களுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, நேற்று 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து அறிவித்துள்ளது. இதையடுத்து, தற்போதைய வட்டி விகிதம் 5.90 சதவீதமாக அதிகரித்து உள்ளது. ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு கூட்டம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ரெப்போ வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த மே மாதத்தில் துவங்கி, ரிசர்வ் வங்கி நான்காவது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. அதிகரித்து … Read more

30 நாட்களில் மூன்று படங்கள் ரிலீஸ் : ஆச்சர்யமூட்டும் ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக திரையுலகில் அடி எடுத்து வைத்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆரம்ப காலத்தில் தொடர்ந்து தமிழ் படங்களில் கவனம் செலுத்தி இசையமைத்து வந்த இவர், ஒருகட்டத்தில் பாலிவுட் சென்ற பின்னர் இந்திய அளவில் பிரபலமாகி அங்கேயே தனது பெரும்பகுதி நேரத்தை செலவிட்டு வந்தார். இதனால் அவரது இசையமைப்பில் தமிழில் வருடத்துக்கு இரண்டு படங்கள் வெளியானால் அதுவே ஆச்சரியம் என்கிற நிலை தான் கடந்த வருடம் வரை இருந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் தமிழ் … Read more

மனிதக்கழிவை மனிதர்களே அகற்றலாமா? தனியொரு மனிதன் பெற்றுத்தந்த தீர்ப்பு!

மனிதக்கழிவுகளை துப்புரவுத் தொழிலாளர்களைக் கொண்டு அகற்றும் நிலை இனி தொடர்ந்தால் எங்கு நடக்கிறதோ அந்த மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என்று வழக்கறிஞர் அய்யா மேற்கொண்ட பொது நல வழக்கில்  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியிருக்கிறது. நெடுங்காலமாகத் தொடர்ந்து வரும் கையால் மலம் அள்ளும் முறை என்கிற கொடுமையிலிருந்து துப்புரவுத் தொழிலாளர்களைக் காக்கும் விதத்தில் இத்தீர்ப்பு அமைந்திருப்பதால் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த வழக்கினைத் தொடர்ந்த பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் அய்யாவிடம் பேசுகையில்… வழக்கறிஞர் அய்யா “இந்த வயசுல … Read more

“அக்.2 மனிதச் சங்கிலிக்கு அனுமதிப்பீர். ஏனெனில்…” – டிஜிபியிடம் விசிக, இடதுசாரி தலைவர்கள் நேரில் கடிதம்

சென்னை: அக்.2-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலிக்கு அனுமதி அளிக்க வேண்டும் டிஜிபியை சந்தித்து விசிக, இடதுசாரி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அக்டோபர் 2-ம் அன்று தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி இயக்கம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் மதச்சார்பற்ற அமைப்புகளின் சார்பில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக தலைவர் தொல். திருமாவளவன் … Read more

மூலப்பொருட்களின் விலை உயர்வால் பட்டாசு விலை 50% அதிகரிக்கும்: தீபாவளிக்கு வருது விதவிதமான பட்டாசுகள்

சிவகாசி: சிவகாசியில் தீபாவளிக்காக புதிய ரக பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர் வரை விரும்பும் புஸ்வாண பட்டாசுகள், 300 அடி உயரம் சென்று, வானில் வண்ணஜாலம் நிகழ்த்துகின்றன. மூலப்பொருட்களின் விலை உயர்வால் 40 முதல் 50 சதவீதம் வரை விலை அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் 1,100க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இவை மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஆலைகளில் தற்போது பசுமை பட்டாசு மட்டும் தயாரிக்கப்படுகிறது. பட்டாசு தயாரிக்க … Read more

வித்தை காட்டியவருக்கு நாக பாம்பு ‘மவுத் கிஸ்’: வைரலாகும் வீடியோ

ஷிவமொக்கா: திருமண வீட்டில் இருந்த நாகபாம்பை  பிடித்து முத்தமிட முயன்றவருக்கு, பாம்பு ‘மவுத் கிஸ்’ கொடுத்தது. கர்நாடகா மாநிலம், ஷிவமொக்கா  மாவட்டம், பத்ராவதியை சேர்ந்தவர்கள் அலெக்ஸ், ரோனி. இவர்கள், பொதுமக்களை  அச்சுறுத்தும் பாம்புகளை பிடித்து, காடுகளில் விட்டு வருகின்றனர். இந்நிலையில், பொம்மனக்கட்டில் உள்ள ஒரு திருமண  வீட்டில் 2 நாக பாம்புகள் இருந்தன. இதை பார்த்த மக்கள், அலெக்ஸ், ரோனிக்கு தகவல்  கொடுத்தனர். 2 பேரும் அங்கு சென்று பாம்புகளை மீட்டனர். அதில், ஒரு பாம்புக்கு காயம் … Read more