இந்தியா உடனான உறவு அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியம்: வெள்ளை மாளிகை உயரதிகாரி

வாஷிங்டன்: இந்தியா உடனான உறவு அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியம் என்று அமெரிக்க அதிபருக்கான துணை உதவியாளரும், இந்தோ – பசிபிக் ஒருங்கிணைப்பாளருமான கர்ட் கேம்பெல் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய – அமெரிக்க உறவு தொடர்பாக கூறியதாவது: ”இந்தியா மிகப் பெரிய சக்தி. அமெரிக்க அணியைச் சேர்ந்த நாடு அல்ல இந்தியா. அந்த நாடு ஒருபோதும் அமெரிக்க அணியில் இணையாது. இரு நாடுகளும் நெருக்கமான உறவில் இருக்க முடியாது என்பது இதற்கு அர்த்தமல்ல. ஒரு … Read more

செல்போனை வடிவமைத்து 50 ஆண்டுகள் நிறைவு | “அவர்கள் புத்தியை இழந்துவிட்டார்கள்” – மார்ட்டின் கூப்பர்

கடந்த 1973, ஏப்ரல் 3-ம் தேதி அன்று தான் வடிவமைத்த உலகின் முதல் கைபேசியை கொண்டு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டிருந்தார் அமெரிக்க பொறியாளர் மார்ட்டின் கூப்பர். இவர் செல்போனின் தந்தை என அறியப்படுகிறார். அதன் பிறகு சுமார் 10 ஆண்டு காலம் தனது குழுவினருடன் இணைந்து அதற்கு இறுதி வடிவம் கொடுத்தார். அது சந்தையிலும் விற்பனைக்கு வந்தது. அப்படி தொடங்கிய செல்போனின் பயணம் இன்றைய ஸ்மார்ட் டிஜிட்டல் யுகத்தில் வசித்து வரும் மக்களுக்கு அத்தியாவசியமானதாக உள்ளது. அது … Read more

IPL 2023: போட்டியை அறிவித்த ஐஐடி மெட்ராஸ்; ஜெயிச்சா செம பரிசு.!

சென்னை ஐஐடி சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) பிஎஸ் பட்டப்படிப்பு (டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ்) மற்றும் என்பிடெல் ஆகியவை, இன்று (31 மார்ச்) தொடங்கவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL)-ஐ அடிப்படையாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரக் கற்றல் (ML) மாதிரிகளை உருவாக்குவதற்கான போட்டியைத் தொடங்கியுள்ளன. ‘கிரிக்கெட் அண்ட் கோடிங்’ என்ற தலைப்பிலான இந்த தரவு அறிவியல் போட்டிக்காக, செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் நுட்பங்களின் மூலம் திறமையான … Read more

கர்நாடக எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா; தேர்தல் திக்… திக்… உடையும் சீக்ரெட்!

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி வாக்குப்பதிவும், 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. இதையொட்டி காங்கிரஸ் , பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. அடுத்தகட்டமாக வேட்பாளர்கள் பட்டியல், தேர்தல் பிரச்சாரம், வாக்குறுதிகள் என தேர்தல் களம் சூடுபிடிக்கவுள்ளது. இந்நிலையில் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக எம்.எல்.ஏ ராஜினாமா இன்றைய தினம் குட்லிகி சட்டமன்ற தொகுதி பாஜக எம்.எல்.ஏ என்.ஒய்.கோபாலகிருஷ்ணா தனது பதவியை ராஜினாமா … Read more

Vignesh Shivan: அப்ப அப்ப பண்ணுங்க… ஹேக்கருக்கு நன்றி சொன்ன விக்னேஷ் சிவன்!

இயக்குநர் கவுதம் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் விக்னேஷ் சிவன். சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார் விக்னேஷ் சிவன். எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கினார் விக்னேஷ் … Read more

இந்திய ரூபாயை சர்வதேச கரன்சியாக மாற்ற திட்டம்..!

2023 ஆம் ஆண்டிற்கான புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையை, டெல்லியில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டார். வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பை, 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்த, அதில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டாலரை போல், இந்திய ரூபாயை சர்வதேச கரன்சியாக மாற்றும் முன்னெடுப்புகளுடன் இந்த வர்த்தக கொள்கை உருவாக்கப்பட்டுள்ள நிலையில், முதலில் டாலர் கையிருப்பு பற்றாக்குறையுள்ள நாடுகளுடன் இந்திய ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ள … Read more

காரைக்காலில் உள்ள பதிவுத்துறை உதவி பதிவாளர் அலுவலகம், வீட்டில் சிபிஐ சோதனை

புதுச்சேரி: காரைக்காலில் உள்ள பதிவுத்துறை உதவி பதிவாளர் அலுவலகம், வீட்டில் சிபிஐ சோதனை மேற்கொண்டுள்ளனர். உதவி பதிவாளர் அலுவலம் மீது புகார்கள் வந்ததை அடுத்து சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் கலாஷேத்ரா மாணவிகளின் போராட்டம் வாபஸ்

சென்னை: கடந்த 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் சென்னை அடையாறு கலாஷேத்ரா மாணவிகளின் போராட்டம் வாபஸ் பெற்றனர். பேராசிரியர்கள் 4 பேர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டி மாணவிகள் போராட்டம் நடத்தினர். பாலியல் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி உறுதி அளித்ததால் வாபஸ் பெற்றுள்ளனர்.

ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு..!!

டெல்லி: ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. புதிய மதுபான கொள்கை முறைகேடு குறித்து சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் வழங்க டெல்லி கோர்ட் மறுத்துவிட்டது.

அரிய நோய்களுக்கான மருந்து இறக்குமதிக்கு சுங்க வரி ரத்து| Abolition of customs duty on import of drugs for rare diseases

புதுடில்லி, அரிய வகை நோய் சிகிச்சைக்காக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு, நாளை முதல், சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து, மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: அரிய வகை நோய் சிகிச்சைக்காக இறக்கு மதி செய்யப்படும் மருந்துகளுக்கு, சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அரிய வகை நோய் என, கடந்த 2021ல், மத்திய அரசால் வரையறுக்கப்பட்ட நோய்களுக்கு, இந்த வரி விலக்கு … Read more